இலட்சங்களாய் மாத வருவாய் தரும் பல்பொருள் அங்காடி கம்பெனி

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

இலட்சங்களாய் மாத வருவாய் தரும் பல்பொருள் அங்காடி கம்பெனி

Post by ஆதித்தன் » Thu Apr 28, 2016 1:49 am

Image
Vestige என்றொரு வருவாய் வாய்ப்பு இருக்கிறது என்பதனை படுகையில் கடந்த ஒர் மாதமாக வலம் வரும் நண்பரின் டாபிக் மூலம் நீங்கள் எல்லோரும் அறிந்திருக்கலாம். ஆனால், அதில் சரியாக வருவாய் பெற என்ன செய்ய வேண்டும் என்பது குழப்பமாக இருந்தால், அதனை தீர்க்கும் விதமாக எளிதாக என் பாசையில் சொல்லவே இந்தப் பதிவு.

வெஸ்டேஜ் கம்பெனி கடந்த 10 ஆண்டு காலமாக செயல்பட்டு, இந்திய மார்க்கெட்டில் ஒர் நிலையான இடத்தினைப் பிடித்துவிட்டது என்பதனை அறிந்தே, அதன் பலனை படுகை உறுப்பினர்களும் பெற ஒர் வாய்ப்பினை கொடுக்கலாம் என்ற நோக்கத்தில் இப்பதிவு.

வெஸ்டேஜ் பல வகையான மக்கள் உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் ஒர் அங்காடி என்பதனை முதலில் நினைவு கொள்ளுங்கள். வெஸ்டேஜ் அங்காடியில், நம் வீட்டில் அன்றாட பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தும் பொருள்கள் உள்ளன. இதனை நாம் ஆன்லைனில் புக் செய்தும் பெற்றுக் கொள்ளலாம்.

நாம் எல்லோருமே இன்று வேப்பங்குச்சியை பாதை வழியில் ஓடித்து பல் விலக்கும் வழக்கத்தினை விடுத்து அல்லது அப்படியான வழக்கம் தெரியாமலே, கொஞ்சம் பேஷனாக வேப்பிலை, உப்பு, கிராம்பு கலந்த பேஸ்ட்.. இது ரொம்ப நல்லது என்று ப்ரஸ் வாங்கி அந்த பேஸ்ட்டினை அங்காடிகளில் வாங்கி பயன்படுத்துகிறோம். எல்லோருமே, பேஸ்ட் & ப்ரஸ் பயன்படுத்தியே பல் விலக்குவீர்கள் என்பதனை நம்புகிறேன். ஆக கண்டிப்பாக இதனை நீங்கள் ஒர் கடையில் வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

காலையில் காபி அல்லது டீ கண்டிப்பாக எல்லா வீடுகளிலும் அருந்துவார்கள். அதற்கும், நாம் டீத்துள் அங்காடியில் சென்றுதான் வாங்குகிறோம்.

தினமும் வீட்டில் பயன்படுத்தும் டீத்துள் & பேஸ்ட் ப்ரஸ் ஆகிய இரண்டு பொருளை மட்டும் இப்போ உதாரணத்திற்கு எடுத்திருக்கிறேன்... பலர் பயன்படுத்துகின்ற இன்னும் 34 பொருட்கள் அங்கு உள்ளன. இருந்தாலும், நாம் வருவாய் பற்றி மட்டுமே பேச வருவதால், பொருள் வாங்க வேண்டும் என்ற கட்டாயத்தினையும், அது நாம் தினம் செய்து கொண்டிருக்கிற ஒன்றுதான் என்பதனை புரிந்து கொள்வதற்காகவும் பொருளின் உதாரணத்தினைச் சொல்லிவிட்டேன், அடுத்து வருவாய் பற்றிப் பார்க்கலாம்.

ஆரம்பத்திலேயே நான் அங்காடி என்ற வார்த்தையினை எளிதில் புரிந்து கொள்வதற்காக வெஸ்டேஜ்-க்கு வழங்கிவிட்டேன். அடுத்து, எங்கள் வீட்டில் என்னைத் தவிர்த்து பலரும் அங்காடியே வைத்துள்ளதால், இதன் வருவாய் மிக நன்றாகவே எனக்குத் தெரியும். மாதம் மாதம் சரியாக ஒரே கடை/அங்காடியில் வாங்கக்கூடிய கஸ்டமர் என்று ஒவ்வொரு அங்காடியிலும் பெரும்பாலும் 100 பேர் தாங்க இருப்பாங்க. இந்த 100 பேர் கொண்டே அவங்களோடைய சராசரி வருவாய் மாதம் ரூ.30,000.... மேலும் போக்குவரத்து வியாபரம் என்று கூடுதல் சம்பாதிப்பார்கள். கொஞ்சம் சிட்டிக்குள் அங்காடி வைத்து நடத்துபவர்கள் அந்த நகரத்தின் மக்கள் தொகை நெருக்கத்திற்கு ஏற்ப, அதிகப்படியான வாடிக்கையாளர்களை கொண்டிருப்பதோடு, இலட்சம் இலட்சமாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும், அங்காடிகள் அனைத்துமே பெரும்பாலும் ஏதோ ஒர் கம்பெனி தயாரிக்கும் பொருளை, ஒர் டிஸ்டிபூட்டரிடம் ஏஜண்டிடம் வாங்கிதான் விற்பார்கள். இதில் டிஸ்டிபூட்டர்க்கு ஒர் % இலாபம், மொத்த வியாபரிகளுக்கு ஒர் % இலாபம், அங்காடிகளுக்கு ஒர் % இலாபம் என்று.. நாம் வாங்குகின்ற சோப்பு முதல் சேம்பு வரை என அனைத்து பொருளுக்கும் தோராயமாக 50% முதல் 100+ சதவீதம் கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டு, அது விற்பனை செலவுக்காக கொடுக்கப்படுகிறது.

மக்கள் பயன்பாட்டுப் பொருளை விற்பனை செய்யும் அங்காடிக்காரர்கள் அனைவருமே நல்ல வருவாயோடு இருக்கிறார்கள் என்பதனை நாம் அறிந்ததே. அந்த அங்காடித் தொழிலில் இறங்க வேண்டும் என்றால் முதலில் முதலீடு வேண்டும் என்பதால் பலர் செய்வது இல்லை. அதைப்போல், அப்பணி கொஞ்சம் வொரி பிடிச்சது என்றும் பலரும் தவிர்ப்பார்கள். ஆனால், உண்மையில் இலட்சம் இலட்சமாக அங்காடியில் சம்பாதிப்பவர்கள் தனக்கென பணியாட்கள் வைத்திருப்பார்கள். ஆக, அங்காடி உரிமையாளர் கணக்கு வழக்கு மட்டும் சரியாகப் பார்த்து நிம்மதியாக உட்கார்ந்து நன்றாகச் சம்பாதித்துக் கொண்டிருப்பார்.

வெஸ்டேஜ் கிட்டத்தட்ட ஒர் அங்காடி போன்றது என்றாலும், இது தன்னகத்தே பொருளை உற்பத்தி செய்து நேரடியாக விற்பனை செய்யும் அங்காடி.

தானே பொருளை உற்பத்தி செய்து நேரடியாகவே விற்பனை செய்வதால், வழக்கமாக அப்பொருளின் மீது வழக்கமாக வைப்பட்டிருக்கும் விற்பனைச் செலவான 50%+ என்பதனை தனது வாடிக்கையாளர்களுக்கே பிரித்து போனசாக திரும்ப வழங்கிவிடுகிறது என்பது இதன் சிறப்பு.

ஒர் அங்காடியில் நாம் வாடிக்கையாளர் ஆகிவிட்டால்.... அந்த அங்காடிக்குச் செல்லும் பொழுது கூடவே துணைக்கு பக்கத்துவீட்டில் இருப்பவர்களையும் அழைத்துச் செல்வதனை நாம் வழக்கமாகச் செய்து வருகிறோம். அவ்வாறு ஒவ்வொரு வாடிக்கையாளரும் தன்னகத்தே ஒர் மற்றொரு வாடிக்கையாளர் என நான்குக்கும் மேற்பட்ட வாடிக்கையாளரை கொண்டிருக்கிறார்கள் என்பதனை அறிந்து கொண்ட வெஸ்டேஜ் கம்பெனி நமக்கு கூடுதலாக ஒர் மல்ட்டி லெவல் வர்த்தக வாய்ப்பினை தனது ஒவ்வொரு வாடிக்கையாளர்க்கும் டிஸ்டிபியூட்டர் என்ற அடையாளத்தில் முதலிலேயே வழங்கிவிடுகிறது.


டிஸ்டிபியூட்டர் என்ற வார்த்தையினை கேட்டவுடனே உங்களுக்கு டக்குன்னு புரிந்திருக்கும்.... அந்த அங்காடிக்காரர் டிஸ்டிபூட்டர்கிட்ட வாங்கித்தானே நம்மக்கிட்ட தர்றாரு.. அவரே அவ்ள சம்பாதிக்கிறாரே... நாம சம்பாதிக்க முடியாதா??? ஆம், முடியும். அந்த வாய்ப்பினைத்தான் டிஸ்டிபூட்டர் என்ற மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் வாயிலாக நமக்கு வழங்கியிருக்கிறார்கள்.

நாம் ஷாப்பிங் செல்லும் பொழுது கூட அழைத்துச் செல்லும் நபர்களில் சிலரை சேர்த்துவிட்டாலே போதும்.. இது அப்படியே பல்கிப் பெருகி... நமக்கான கஷ்டமராக 100+ என்று பெருகி.... நமக்கான வருவாய் ரூ.10,000... இலட்சம் என்று எந்தவொரு முதலீடும் இல்லாமல் சில மாதங்களில் நமது மாத வருவாய் பெருகிவிடும்.

இதிலும் இன்னொரு சிறப்பு என்னவென்றால் அங்காடிக்காரர் ஒவ்வொரு மாதமும் தன் வாடிக்கையாளரிடம் செயல்பட்டுக் கொண்டிருப்பார், ஆனால் வெஸ்டேஜ் டிஸ்டிப்யூட்டரான நாம் நமக்கு தெரிந்தவரை ஒரே ஒர்முறை, அதுவும் சேர்த்துவிட மட்டும் செய்தால் போதும்.. அப்புறம் எப்பொழுதும் போல வேலையை வெஸ்டேஜ் அங்காடி அவரை தன்னகத்து வாடிக்கையாளராக எடுத்து செய்ய வேண்டிய பணி அனைத்தினையும் செய்துவிடும்.
Image
நூறு கஸ்டமர் உள்ள அங்காடி நபரே 30000 சம்பாதிக்கிறார் என்றால்.... இந்த மல்ட்டில் லெவல் மார்க்கெட்டிங்க் மூலம் ஆறு நபரை சேர்த்துவிட்டு, அதனை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களை அவர்களது உழைப்பில் பெறக்கூடிய நாம் எளிதாக இலட்சத்தினை சம்பாதித்துவிடலாம். அதுவும் ஒரே ஒர்முறை அறிமுகம் செய்து வைத்து.

சரி... இந்த ஆறு நபரை எப்படிச் சேர்ப்பது???

இதில் தான் நாம் ரொம்ப கவனமாக நம் பணியினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒர் நல்ல டவுன் லைன் லீடரைப் பெற்றாலும் சரி, அல்லது நல்ல ஒர் லீடரை தன் அப்லைனாகப் பெற்றாலும் சரி, நமக்கான 100 நபர்கள் என்பது மிகவும் எளிதாக அமைந்துவிடுவதோடு, மாதம் மாதம் நமக்கு 10000-க்கும் மேல் சம்பாதித்துக் கொடுத்துக் கொண்டே இருக்கும் என்பதோடு... அதற்கும் மேலும் சம்பாதித்துக் கொடுக்கும்.

ஒன்று நன்றாக தெரிந்து கொள்ளுங்கள், நமக்குக் கீழ் 6 நபர்கள் என்றோடு இல்லாமல், அது வளரும் டீமாக அமைந்தால் மட்டுமே வருவாய். மற்றப்படி நாம் வாங்கும் பொருளுக்கு வருவாய் என்பது எல்லாம் நம் காசை நாமே கொடுத்து வாங்குவதுதான்... அதற்கு வீட்லையே நம்ம காசை வைத்திட்டுப் போய்டலாம். ஏன்னா அந்தளவுக்கு எல்லோருமே சிக்கனமாகத்தான் செலவு செய்து வருகிறோம்... அப்படி இருக்கையில் இது வேண்டும் என்று வாங்கினாலும் அதனையும் சிக்கினப்படித்துக் கொள்ள முடியும்.

அதே நேரத்தில், நாம் ஒர் ஆயிரம் கொடுத்து வாங்கினேன்.. என்று சொல்லும் பொழுது நமது டவுன்லைனும் ஆயிரம் கொடுத்து வாங்குவார்கள் என்று தொடரும் பொழுது, அது நமக்கு பல ஆயிரங்களை வருவாய் கொடுக்கும் மரமாக வளர்கிறது. இதனை நீங்கள் மனதினை வைத்துக் கொள்ளுங்கள். இந்த வருவாயே நமது முக்கிய இலக்கு.

10 வருடமாகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர் கம்பெனி, அதுவும் அன்றாடப் பயன்பாட்டுப் பொருளை தயாரித்துக் கொடுக்கும் ஒர் கம்பெனிக்கு ஒரே ஒர் முறை 6 நபர்களை சேர்த்துவிடுவதன் மூலம் ஆயுட் முழுக்க வருவாய் கொடுக்க இருக்கிறது என்றுச் சொல்லும் பொழுது, இதனை நாம் கொஞ்சம் சிந்தித்தே ஆக வேண்டும்.

இந்த ஆறு நபர்களை சேர்க்க எல்லோருமே கஷ்டப்படுவீர்கள் என்பது தெரிந்ததுதான்... ஆனால் அதனைச் செய்ய ஒர் நல்ல லீடரை அல்லது பணியாளை பணம் கொடுத்து நிர்ணயிக்க பலராலும் முடியும்.

மாதம் 5000 சம்பளம் என்று ஒருவரிடம் கொடுத்தால் கண்டிப்பாக 6 நபரினை தனக்குக் கீழே சேர்த்துக் கொள்ள முடியும். அதே நேரத்தில் தனக்கு ஒருவர்க்காக செய்ய முடியுமா? அப்போ ஒர் குழுவாகச் சேர்ந்து ஒர் நபரை ஒர் சில மாதத்திற்கு பணிக்கு எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக முடியும்.

ஒர் ஏழு நபர்கள் குழுவாகச் சேர்ந்து இதனை வெற்றிகரமாக ஒர் நல்ல பணியாளைக் கொண்டு சிறப்பாகச் செய்து நுற்றுக்கணக்கான நபரினை தனது வெஸ்டிஜ் அணியில் சேர்த்துக் கொள்ள முடிவதோடு, மாதம் மாதம் நல்ல வருவாயினை எட்ட முடியும்.

நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள், 6 நபரினை ஒர்முறை மட்டுமே இணைக்க இருக்கிறீர்கள்.. அவர்கள் மூலம் ஆயுட் முழுக்க வருவாய் வர இருக்கிறது. இதற்காக ரூ.5000 செலவு செய்து என்பது ஒர் அங்காடி நடத்த ஒருவர் செலவிடும் தொகையில் ஒர் மிகச் சிறியத் தொகை.

மிகச் சிறியத் தொகையான ரூ.5000 செலுத்தி படுகை வழிநடத்த இருக்கும் குழுவில் சேர இருப்பவர்கள் என்னை தொடர்பு கொண்டு விரைவாகச் சேர்ந்து கொள்ளலாம்.

நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்.. இது 10 வருடமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்தியாவில் பல கிளைகள் கொண்ட ஒர் சிறப்பான கம்பெனி. இதற்காக செலவிட்டு செயல்படுவது கண்டிப்பாக நல்ல வருவாயினை கொடுக்கும் என நம்புகிறேன்.

குறிப்பு: நானும் இன்னும் சேரவில்லை.. நல்லதொரு டீலை எனது அப்லைனாக வருபவரிடம் இருந்து எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்.
kumarsvm
Posts: 85
Joined: Wed Apr 06, 2016 9:51 am
Cash on hand: Locked

Re: இலட்சங்களாய் மாத வருவாய் தரும் பல்பொருள் அங்காடி கம்பெனி

Post by kumarsvm » Fri Apr 29, 2016 7:22 pm

:callme: நான் என்னுடைய கருத்தைப் பதிய உரிமை அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன் ஐயா,
எல்லாப் பொருளும் தலைக்கு, காதுக்கு, கண்ணுக்கு,மூக்குக்கு, பல்லுக்கு,மொத்தத்தில் நமக்கு ஒத்துக் கொள்ள வேண்டும்.
போர்த்திக் கொண்டு படுத்தாலும், படுத்துவிட்டு போர்த்திக் கொண்டாலும் இரண்டும் ஒன்றுதான் என்பது எல்லோரும் அறிந்ததே. மொத்தமாக வாங்கினால் ஒரு பொருள் இலவசம் .இதுவும் உண்டு.ஆகையால் எனக்கு இலவசத்தை முதலில் கொடுக்க ஏற்பாடு செய்தால் ஒரு மாதத்திற்குள் 100 பேரைச் சேர்த்துவிடுவேன் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இலட்சங்களாய் மாத வருவாய் தரும் பல்பொருள் அங்காடி கம்பெனி

Post by ஆதித்தன் » Fri Apr 29, 2016 8:57 pm

kumarsvm wrote::callme: நான் என்னுடைய கருத்தைப் பதிய உரிமை அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன் ஐயா,
எல்லாப் பொருளும் தலைக்கு, காதுக்கு, கண்ணுக்கு,மூக்குக்கு, பல்லுக்கு,மொத்தத்தில் நமக்கு ஒத்துக் கொள்ள வேண்டும்.
போர்த்திக் கொண்டு படுத்தாலும், படுத்துவிட்டு போர்த்திக் கொண்டாலும் இரண்டும் ஒன்றுதான் என்பது எல்லோரும் அறிந்ததே. மொத்தமாக வாங்கினால் ஒரு பொருள் இலவசம் .இதுவும் உண்டு.ஆகையால் எனக்கு இலவசத்தை முதலில் கொடுக்க ஏற்பாடு செய்தால் ஒரு மாதத்திற்குள் 100 பேரைச் சேர்த்துவிடுவேன் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
கண்டிப்பாக உங்களுக்குக் கருத்தினைச் சொல்ல உரிமையினைக் கொடுப்பேன்.

ஆனால், மீண்டும் மீண்டும் நான் அடி முட்டாள் தனத்திற்கே கீழ் இறங்கிச் செல்வேனே தவிர, தன் அறிவினை வளர்த்துக் கொள்ளும் விதத்தில் நடந்து கொள்ளமாட்டேன் என்று எங்கும் செயல்பட்டுக் கொண்டே இருந்தால் கண்டிப்பாக உங்களது நிலையினை சுடும் அளவிற்கு சுட்டுவதில் தவறில்லை.

ஒர் வியாபாரத் தொழில் எவ்வாறு நடக்கிறது, அந்தத் தொழிலில் பணம் புரள என்னென்ன வழிகள் மக்கள் விருப்பத்திற்கு ஏற்கச் செய்யப்படுகிறது என்பதனை அறிந்து கொள்ள நிதானமாக யோசிக்காமல், இலவசத்தினை முதலில் கேட்டதால் என்ன நடக்கும் என்பது தெரியுமா? அல்லது அந்த இலவசம் என்பது எதற்கு தெரியுமா?

கேள்விகள் கேட்பது பெரிதல்ல... அந்தக் கேள்விக்கான பதிலை அடுத்தவர்களிடமிருந்து பெற்று உபயோகப்படுத்தும் தன்னிலையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படியான நிலை தங்களிடம் இல்லை. ஆகையால், இனி கேள்வி கேட்பதனை விடுத்து, இது எதனால் என்று நன்றாக யோசியுங்கள். தனித்த யோசனை கண்டிப்பாக பதில் கொடுக்கும்.

100 பேர் அல்ல, ஆயிரை நபரினைக் கூட சேர்த்துவிடுவேன் என்றுச் சொல்லலாம். அதற்கு தன் தகுதி என்று பிறர் சொல்லும் அளவிற்கு ஒர் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும், அந்தத் தகுதிக்குத்தான் மதிப்பு. உங்களது தகுதியினை மதிப்பிட்டே இவரால் முடியும் என்ற நம்பிக்கையுடன் பொறுப்பு ஒப்படைக்கப்படுமே தவிர, நாளை 100 பேர் சேர்ந்திடுவார்கள் என்பதற்கு எந்தவொரு நபரும் மதிப்பிட்டு எதனையும் செய்யமாட்டார்கள். அதிலும் இங்கு நீங்கள் நடந்து கொள்ளும் முறை எல்லாம் கத்துக்குட்டிக்கும் தாழ்வான நிலையில் உள்ளது.

இப்படி கத்துக்குட்டிக்கும் தாழ்வான நிலையில் நடந்து கொண்டு, 100 பேரினைச் சேர்ப்பேன் என்பதில் என்ன இருக்கிறது??? முதலில் 100 பேரினைச் சேர்க்க வேண்டும் என்றால் அதற்குத் தகுதியான எதாவது உங்களிடம் உண்டா? அப்படி உண்டு என்பதற்கான தகுதி நிலையினை இங்கு/படுகையில் எங்கேனும் நிலைக்காட்டியிருக்கிறீர்களா?

இப்படி எந்தவொரு தகுதியினையு வெளிக்காட்டாமல், நானும் சேர்த்துவிடுறேன் தாங்கன்னு கேட்டா???

பல பதிவுகளில் உங்களது கேள்விகள் அடிமட்டத்தனமாக, பதிலுக்கே உரித்தது அற்றதாக இருக்கிறது. ஆகையால் உங்களது ஒவ்வொரு கேள்வியினை ரூம் போட்டு யோசிங்க.... கொஞ்சம் யோசிக்க பழகுங்க.. அதனை முதலில் கற்றுக் கொள்ளுங்கள்.
kumarsvm
Posts: 85
Joined: Wed Apr 06, 2016 9:51 am
Cash on hand: Locked

Re: இலட்சங்களாய் மாத வருவாய் தரும் பல்பொருள் அங்காடி கம்பெனி

Post by kumarsvm » Sat Apr 30, 2016 8:21 am

:amen: பதிலுரை 30 வரிகள் பாஸ் வேர்ட் கேட்கிறது.3 முறை பதிந்தேன்.என்ன காரணம் தெரியவில்லை.நேற்று உங்கள் பதிவை தொடரந்து அடுத்த வினாடியில் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். நன்று.
kumarsvm
Posts: 85
Joined: Wed Apr 06, 2016 9:51 am
Cash on hand: Locked

Re: இலட்சங்களாய் மாத வருவாய் தரும் பல்பொருள் அங்காடி கம்பெனி

Post by kumarsvm » Sat Apr 30, 2016 9:17 am

ரூம் போட்டு யோசிக்க நான் சினிமா கதாசிரியர் அல்ல. உடன் உங்கள் பதிவு படித்த அக்கணத்திலிருந்து தொடர்கிறேன்.கத்துக்குட்டியை கதற கதற விட்டீர்கள் .30 வரி பதிவை 3 முறை தட்டச்சு .செய்ததால் விரல்கள் எல்லாம் வலி. வலி எனக்கு பெரிதல்ல.என் பதிவின் மொத்த வரிகள் 7.3 . உங்கள் பதிவு 24.1 வரிகள் .மீண்டும் என் பதில் பதிவு சுடச்சுட. ஏன் என்றால் சுட்டுவிட்டீர்கள் ஒரு மேல் நிலை ஆசிரியராக.கவலைப்படவில்லை. என் பதிவில் கேள்வியே நான் கேட்கவில்லையே. பின் ஏன் வரிக்கு வரி.நீங்கள் போகின்ற வழி எப்படி சரியோ அதே வழி தான் என் வழியும்.சிறிது நேரம் இடைவேளை கொடுங்கள். இன்னும் 34 வரிகள் உள்ளது. நன்றி.
kumarsvm
Posts: 85
Joined: Wed Apr 06, 2016 9:51 am
Cash on hand: Locked

Re: இலட்சங்களாய் மாத வருவாய் தரும் பல்பொருள் அங்காடி கம்பெனி

Post by kumarsvm » Sat Apr 30, 2016 11:44 am

திரு kbclassil அவர்களே,
வணக்கம். எனக்கும் படுகை உறுப்பினர்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. படுகையில் ரொம்பவும் அடக்கத்தோடு பணிவோடுதான் பதிவு செய்கிறேன். ரூம் போட்டு யோசிக்க நான் சினிமா கதாசிரியர் இல்லை.எல்லா உறுப்பினர்களும் கோடிகள், லட்சங்கள் சம்பாதிக்க வேண்டும்.தளத்தில் அடக்கமில்லாமல் நடந்தேன் என்பதற்கு ஒரு சான்று கூறுங்கள்.அவர் வழியிலும் சம்பாதிக்கலாம்.என் வழியிலும் சம்பாதிக்கலாம்.என் வழி என்ன ? பதிவு செய்யவிட்டால்தான் உண்மை தெரிய வரும்.என் மீது உள்ள தப்பான எண்ணம் அகலும்.
kumarsvm
Posts: 85
Joined: Wed Apr 06, 2016 9:51 am
Cash on hand: Locked

Re: இலட்சங்களாய் மாத வருவாய் தரும் பல்பொருள் அங்காடி கம்பெனி

Post by kumarsvm » Mon May 02, 2016 12:00 am

தடபுடலான அவசரம்.தளத்தில் தவளும் குழந்தை அவரால் பதியப்பட்ட கத்துக்குட்டி.எழுந்து நடக்க ஆரம்பித்துள்ளது. விரைவில் விவரமாக பதிந்து உறுப்பினர்களுக்கு தெரியபடுத்தப்படும்.
kumarsvm
Posts: 85
Joined: Wed Apr 06, 2016 9:51 am
Cash on hand: Locked

Re: இலட்சங்களாய் மாத வருவாய் தரும் பல்பொருள் அங்காடி கம்பெனி

Post by kumarsvm » Mon May 02, 2016 7:12 am

:callme: உயர்திரு கிளாசில் அவர்களே,
அடி மட்டம், முட்டாள், கத்துக்குட்டி,தன் நிலையற்ற,ரூம் போட்டு சிந்திக்க தெரியாத நான் இதைக் கண்டு அஞ்சி பதுங்கி ஓடிவிடமாட்டேன்.எனக்கு உறுப்பினர்களுடைய உண்மையான கோடி மற்றும் 10 லட்சங்கள் படுகையில் வேண்டும் தலைப்புக்கள் மற்றவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதில் உடன்பாடு எனக்குள் இல்லை..நிர்வாகி தன் இடுகையில் கூட 30000லிருந்து 1லட்சம் வரை பதிந்துள்ளார்கள்.மருத்துவ மனை செல்வதால் மூன்று மணிக்கு மேல் தொடரகிறேன்.
User avatar
sundararajan
Posts: 170
Joined: Tue Feb 09, 2016 8:17 pm
Cash on hand: Locked

Re: இலட்சங்களாய் மாத வருவாய் தரும் பல்பொருள் அங்காடி கம்பெனி

Post by sundararajan » Mon May 02, 2016 10:40 am

உயா்திரு kumarsvm அவர்களே
படுகை.காம் அணைவரும் சம்பாதிக்க வேண்டும் என்ற என்னத்தில் மதிப்புக்கும் மாியாதைக்கும் உரிய திரு ஆதி சார் அவர்களால் உறுவாக்கப்பட்டது அதை அவர்கள் சிறப்பாக நடத்திவருகிறார்கள்.
இதில் தாங்கள் சொல்லியது சரியான பதில் இல்லை தற்போது அவர்கள் சென்ன வேலை படிக்காதவர்களும் கூட எளிய முறையில் சாம்பாதிக்கும் வழி.
அதில் தாங்கள் செய்ய விருப்பம் இருந்தால் செய்யுங்கள் இல்லை என்றால் விட்டுவிடுங்கள் அதில் தாங்கள் கேட்பதும் கேட்பிர்கள் இடையில் ”ஐயா தாழ்மையுடன்” என்றால் அது தவறு இல்லையா? இதை தாங்கள் அணைவரும் பார்க்கும் படி பதிவு செய்து விட்டு இடையில் வரவேண்டாம் என்றால் என்ன அர்த்தம்?
திரு ஆதிசார் அவர்கள் நினைத்திருந்தால் தங்களை படுகையில் இருந்து விளக்கியிருக்களாம். அதை செய்ய வில்லை அவர் உயா்ந்தவர் என்று நிறுபித்து விட்டார்..........
ArunStephy
Posts: 109
Joined: Wed Mar 09, 2016 5:56 pm
Cash on hand: Locked

Re: இலட்சங்களாய் மாத வருவாய் தரும் பல்பொருள் அங்காடி கம்பெனி

Post by ArunStephy » Mon May 02, 2016 1:19 pm

திரு குமார் நண்பர் அவர்களே....
உங்களுக்கு இந்த வெப்சைட் மூலமாக ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டு இருந்தால் அதை இங்கு விளக்கமாக பதியவும்.

நான் கடந்த மூன்று மாதமாக இந்த வெப்சைட்டை தொடருகிறேன். அதனால் எனக்கு பலன் உண்டா என்று கேட்டால் கண்டிப்பாக உண்டு என்றுதான் சொல்வேன்.

நான் படுகை மூலமாக இதுவரை பல விசயங்களை தெரிந்து கொண்டேன். இந்த அளவுக்கு தெளிவான விவரங்களை தொகுத்து தர கூடிய (அதுவும் உள்ளது உள்ளபடியே) தமிழ் வெப்சைட் வேறு எதுவும் இல்லை. மற்ற மொழிகளில் நெறைய உண்டு.

இதுவரை நான் செய்து பார்த்த முயற்சிகள் எல்லாம் வெற்றி ஆகவே முடிந்தது. அதை இங்கு பதியவில்லை. காரணம் சிறு சிறு சம்பாத்தியம் எனக்கு முக்கியமில்லை. என்னுடைய முயற்சி மிக பெரிய வருமானம் பெறுவது. அதற்கும் காரணம் சொல்கிறேன். நான் வெளி நாட்டில் சம்பாதிக்கின்றேன். என்னுடைய சம்பளம் ரெண்டு லக்சம்.(2lakhs) . அப்படி இருந்தும் நான் படுகையை தொடர்கிறேன் என்றால் நான் இதை முழுமையாக உணர்ந்து கொண்டேன்.

நான் மிக பெரிய அளவில் படுகை மூலமாக நான் செய்துகொண்டு இருக்கும் ப்ராஜெக்ட்
1. youtube (channel தொடங்கி 1310 viewers வந்தாச்சு. வெறும் 2 மாதத்தில்) பார்க்க https://www.youtube.com/channel/UC8b0aO ... BG3fIcHtmg

2. போரெக்ஸ் trading (டெமோ அக்கௌன்ட் ஓபன் செய்து பயிற்சி செய்து கொண்டு இருக்கிறேன்)

3. வெப்சைட் create (desighn செய்து கொண்டு இருக்கிறேன்)

4. ப்ளாக் (ப்ளாக் எழுதி கொண்டு இருக்கிறேன். ஒரு மாதத்தில் 244 viewers
பார்க்க http://oldgeneration25.blogspot.com/

இவைகள் எல்லாம் succes ஆக போய் கொண்டே இருக்கிறது. இவைகளால் நான் பணம் பெற தொடங்கும் போது அதை இங்கு பதிவேன். நன்றி.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”