இணையம் மூலம் சம்பாதித்தவர்க்ள் எத்தனை பேர்?எவ்வளவு பணம்?

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

இணையம் மூலம் சம்பாதித்தவர்க்ள் எத்தனை பேர்?எவ்வளவு பணம்?

Post by ஆதித்தன் » Mon Nov 19, 2012 11:58 am

Image
இணையம் மூலம் சம்பாதித்தவர்கள்
எத்தனை பேர்?
எவ்வளவு பணம்?


இணையம் என்பது இப்பொழுது கண்ணுக்குத் தெரியாத ஒருவரின் நடவடிக்கை என்ற காலம் போய், அவர் இவர் தான் என்ற சின்ன வட்டத்திற்குள் வைத்து பாதுகாத்து வரும் அளவிற்கு இன்றைய சைபர் ட்பார்ட்மெண்ட் வளர்ச்சிப் பெற்றுவிட்டது அமெரிக்காவில். ஏனெனில் அங்கு பெரும்பான்மையான செயல்கள் இணையம் முதலே நடக்கின்றன. குறிப்பாக நாம் ஒர் ட்ரஸ் எடுக்க வேண்டும் என்றால் கடையைத் தேடி ஓடுவோம். ஆனால் அவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பர்சேஷ் பண்ணிவிடுவார்கள். ஆகையால், கடைத் தெருவில் எப்படி நாம் நடந்து செல்லும் பொழுது ஒருவர் பிட் பாக்கெட் அடித்துவிட்டு ஓடிவிடக்கூடாது என்று, அத்தெருவில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறதோ! அதைப்போல், இணையத்திலும் நடக்காதவாறு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அப்படியும் தவறுகள் நடக்கிறது என்றால் அது நம்முடைய அஜாக்கிரதையாகத்தான் இருக்க முடியும்.

அதுவே இந்தியாவில் பார்த்தால், ஆன்லைன் சேல்ஸ் என்பது வெகு வெகு குறைவு. ஆகையால், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு பாதுகாப்பு எதற்கு என்பது போல, சைபர் டிபார்ட்மெண்டிலும் ஆட்கள் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். இருந்தாலும் இன்றைய வளர்ச்சியினால் ஆட் சேர்ப்பு நட்ந்து கொண்டுதான் இருக்கிறது. என்னும் கூடிக் கொண்டே செல்லும். அப்பொழுது ஆன்லைன் தவறுகள் என்பது மிகவும் குறைந்துச் செல்லும். அதற்கு ஏற்றாற்போல, முன்பெல்லாம் கிரிடிட் கார்டு இருந்தால் தான் ஆன்லைனில் பர்சேஸ் செய்ய முடியும் என்ற நிலைமாறி, டெபிட் கார்டு இருந்தாலே போதும் என்ற லெவலுக்கு மாறிவிட்டன. மேலும், பிரபல ஆன்லைன் வர்த்தக தளங்கள், இந்தியாவுக்கா? அங்கு சிப்பிங்க் கிடையாது என்று சொன்ன காலமும் மாறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னிலையில் இருக்கும் eBbay தளம் இந்தியாவில் காலுன்றி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதனைப்போல், இன்று பல தளங்கள் ஆன்லைன் பேமண்ட் வசதியினைக் கொண்டுவந்துவிட்டன. வெப்கோஸ்டிங்க், வெப் டொமைன், ட்ரெயின் டிக்கெட், பஸ் டிக்கெட் என எல்லாம் ஆன்லைனில் புக் செய்யும் வசதிகள் என ஆன்லைன் நடவடிக்கைகள் மட்டும் அல்லாமல், கைகளுக்கு வந்து சேர வேண்டிய பொருள்களுக்கான, மொபைல், வாட்ச், தங்க நகைகள், ட்ரஸ், வீட்டு உபயோகப் பொருட்கள் என எல்லாம் ஆன்லைனில் விற்பனை செய்ய பெரிய நிறுவனங்கள் ஏற்பாடுகள் செய்துவிட்டன.

ஆக, இணையத்தில் வருமானம் பெற, பிசினஸ் என்பது ஆப்லைனில் இருந்து ஆன்லைனுக்கு மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய காலக்கட்டத்தில் ஆன்லைனில் பிசினஸ் ஆரம்பிப்பது என்பது கட்டாயம். ஏனெனில், எல்லோரும் தங்கள் வசதியினைப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். பொருள் எல்லாம் வீட்டுக்கே கொண்டுவந்து கொடுத்துவிட மாட்டார்களா என சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர். அதற்கு இணையாக எல்லோர் வீட்டிலும் இன்று இண்டர்னெட் கட்டாயம் உண்டு என்பதுபோல, அரசும் மாணவர்களுக்கு இலவச/விலையற்ற மடிக்கணிணியைக் கொடுத்து வளர்ச்சியினைக் கூட்டிக் கொண்டே வருகிறது. ஆகையால் இந்த சமயத்தில் நமது ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது என்பது மிகவும் நல்ல நேரம். ஏனெனில், அப்பொழுதுதான் நிலையான கூடுதல் வாடிக்கையாளர்களை நாம் எளிதாக பெற முடியும். அல்லது எல்லோரும் தொடங்கியப் பின்னர், நாம் அவர்களுடன் கடுமையாகப் போட்டியிட வேண்டியிருக்கும்.

போட்டியான இணைய வேலை உலகத்தில், பணம் என்பது ட்ராபிக் என்ற ஒன்றில் மட்டுமே சாத்தியம். அதற்கு விளம்பரம் என்ற ஒன்றே பெரிதும் உதவுகிறது. ஆப்லைனிலும் டிவி விளம்பரம், சுவர் விளம்பரம், பத்திரிக்கை விளம்பரம் என ஆங்காங்கே விளம்பரங்கள் நம் கண்களையும், காதுகளையும் கவரப் பார்த்திருப்போம். அதைப்போல், சிறந்த எதிர்காலத்தினை உடையதுதான் ஆன்லைன் விளம்பர வேலை வாய்ப்பு உலகம்.

இதற்கு முன்னர், ஆன்லைனில் வேலை வாய்ப்பினைத் தேடி தோற்றவர்கள் பலர் இருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் வேலை என்பதே இணையம் மூலம் தான் உறுதியாக்கப்பட உள்ளது. அப்படியிருக்கும் வேளையில், ஆன்லைனில் யார் சம்பாதித்தார்கள், எவ்வளவு சம்பாதித்தார்கள் என்ற கேள்வி, சரியான இணைய உலக நிகழ்வுகளின் உண்மைகளைத் தெரியாதவர்கள் கேட்பதாகத்தான் இருக்கும். அதுமட்டும் அல்ல, இணையத்தின் வாயிலாக இலட்சங்களாக சம்பாதிப்பவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். அதுபற்றிய விவரம் தெரியாமல்தான் இப்படியெல்லாம் கேள்வி கேட்கும் பொழுது, அவர்களைப் பற்றிய பெயர்களையும், பக்கங்களின் லிங்குகளையும் கொடுத்தால் மட்டும் நம்பிவிடுவீர்களா????
படுகை.காம் மூலம் சம்பாதித்தவர்க்ள்
எத்தனை பேர்?எவ்வளவு பணம்?
இணையம் எனப் பார்த்தால் பல இலட்சக்கணக்கான பேர், ஆன்லைன் வேலை மூலம் சம்பாதித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் எனப் பார்த்தால், ஆங்கில மொழியாக செயல்பட்டு சம்பாதிப்பவர்கள் பல ஆயிரம் பேர். ஆனால், தமிழ் மொழியின் வாயிலாக சம்பாதிப்பவர்கள் என்பது பல நூறு பேர் மட்டுமே! நான் ஏற்கனவே சொல்லிய விளக்கங்கள் தான். தமிழ் மொழியில் பிசினஸ் தொடங்கி வேலை வாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்றால், அங்கு தமிழர்கள் மூலம் பணம் பரிவர்த்தனை ஆக வேண்டும். ஆனால், ஒர் சிலரைத் தவிர எவருமே ஆன்லைனில் பண பரிவர்த்தனைகள் செய்யாத பொழுது எப்படி சாத்தியம் ஆகும்? அந்த ஒர் சிலரும் ஆங்கில தளங்கள் மூலமே தங்களது பேங்க் கார்டை ஸ்விப்ட் செய்யும் பொழுது, தமிழ் தளம் எப்படி சம்பாதிக்க முடியும்???? ஆனாலும் தமிழ் தளங்கள் பல சம்பாதித்துக் கொண்டு தான் இருக்கின்றன. அவற்றிற்கு உதாரணமாக பல தளங்களை என்னால் கை காட்ட முடியும்.

அவ்வாறு அத்தமிழ் தளங்கள் சம்பாதிப்பதற்காக செய்யும் தின உழைப்பு/வேலை என்பது நம்மைக் காட்டிலும் மிக மிக அதிகம். அவ்வாறாக அவர்கள் கடினமாகவும், சுமார்ட்டாகவும் உழைத்து இன்று அந்த நிலைக்கு வந்துள்ளார்கள். அப்படியாக இப்படுகையில் உழைத்தவர்கள் யாராக இருந்தாலும் பாருங்கள், கண்டிப்பாக அவர்கள் கை நிறைய பணம் சம்பாதித்திருப்பார்கள்.

போட்டியான இணைய உலகில் நமது முழுமையான திறமைகளைக் காட்டி, நல்ல தரமாக உழைப்பின் விளைச்சலைக் கொடுத்தால் மட்டுமே விலை போகும் என்பதும் நமக்குத் தெரியாதது இல்லை. அப்படியான தரமான பதிவுகளைக் கொடுக்கும் எவரும் இணையத்திலும் சரி, படுகையிலும் சரி தோற்கமாட்டார்கள். அதற்கு சரியான திட்டமிடுதலும், செயல்பாடும் இருக்க வேண்டும். ஆகையால் படுகை மூலம் நாம் சம்பாதிக்க வேண்டும் என்றால், திட்டங்களையும், செயல்பாடுகளையும், நமது திறமைகளையும் மட்டுமே ஆராய வேண்டுமே என்பதனைத் தவிர பிறர் என்ன சம்பாதித்து இருக்கிறார்கள் எனப் பார்த்தால், நமது திறமைகளை பிறருடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்குச் சமம். அவ்வாறு ஓப்பிட்டுப் பார்க்கையில் எவரும் எவருக்கும் இணையாக இருந்ததாக எனக்குத் தெரிந்து கிடையாது. வேண்டும் என்றால், பக்கத்துவிட்டு பையன் 90 மார்க் எடுத்திருக்கான், நீ 40 எடுத்திருக்கீயே என்று நாலு அடி வேண்டும் என்றால், நமது வீட்டுச் சிறுவர்களையோ! அல்லது நாமோ அடி வாங்கியிருக்கலாம். அதாவது, பிறர் சம்பாதிக்கவில்லையே என்று உங்களால் சம்பாதிக்க முடியாமலும் போகாது, பிறர் இவ்வளவு சம்பாதித்துவிட்டார் நாமும் சம்பாதித்துவிடலாம் என்பதும் முடியாது.

வருவாய் என்பது, நமது கடின உழைப்பிலும், திறமையிலும், சரியாக திட்டமிட்டுச் செயல்படுவதிலும்தான் இருக்கிறது. படுகை மூலம் வருவாய் பார்க்க வேண்டும் என்பதற்காக பல வாய்ப்புகள் இருக்கின்றன. அவற்றினைச் சரியாக செயலாக்கம் கொடுத்தால் தினம் ரூ.1000/- என்பது சாத்தியமான ஒன்று. அதனை நீங்கள் செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்பதுவே எனது ஆசை. ஆகையால், உங்கள் திறமையின் மீது மட்டும் நம்பிக்கை கொள்ளுங்கள். தன்னம்பிக்கை என்றும் தோற்காது என்ற உண்மையும் தெரியாதது இல்லை.

எனவே, எவர் எவ்வளவு சம்பாதித்துள்ளார்கள் என்பதனைப் பார்ப்பதனையும் தேடுவதையும் விடுத்து, எப்படி சம்பாதிக்கலாம், எவ்வாறு பணம் வருகிறது, என்ன வேலை செய்ய இருக்கிறோம், அவ்வேலையினை எவ்வாறு செய்யலாம், நமக்கு எந்த பணி பிடிக்கும், இவ்வளவு சம்பாதிக்க என்ன செய்ய வேண்டும் என்ற புதிய தேடலுக்கு அடியிடுங்கள். கண்டிப்பாக இணையத்தில் வெற்றியடையலாம்.

மேலும், படுகை.காம் ல் காட்டப்படும் சம்பாதித்தவர்கள் எண்ணிக்கை கைவிரல் விட்டு என்னும் எண்ணிக்கைதான், அதுவும் ஒர் சில ஆயிரம் மட்டுமே. நீங்கள், அதனைத்தான் கேட்கிறீர்கள், பார்க்கிறீர்கள் என்பதற்காக, நான் போலியாக 100 பேமண்ட் ப்ரூப் காட்ட வேண்டிய அவசியம் எனக்கு எப்பொழுதுமே கிடையாது.


நமது பெயரும் அந்த இடத்திற்கு வர வேண்டும் என்ற முயற்சியுடன் செயல்பட்டால், அடுத்த சில வாரங்களில் உங்களது பெயரும் அதில் இடம் பெறும், உண்மையாக உழைத்தால்.
ஆதித்தன் » Mon Nov 19, 2012 11:58 am
18-அக்டோபர்-2015
Edit: 2012 - ஆம் ஆண்டில் பலரிடமும் இருந்த கேள்விக்காக எழுதப்பட்ட பதிவு இது. அன்றைய காலக்கட்டத்தில் என்னால் மாதம் ரூ.5000 சம்பாதிப்பது என்பது கூட மிகவும் கடினமாக இருந்தது. அதுமட்டுமில்லாமல், எட்டு திசைகளிலிருந்தும் வரும் கேள்விக்கணைகளை சமாளிப்பது என்பது கஷ்டம் என்றுச் சொன்னால், யாரிடமாவது ஆன்லைன் ஜாப் இருக்கிறது செய்கிறீர்களா என்று கேட்டுவிட்டால்... அவர்களுக்கு பதில் கொடுப்பது அச்சோ.. அதுக்கு இந்த வேலையையே விட்டுட்டு போய்விடலாம் என்ற நிலை.

அத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி, என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு நான் தொடர்ச்சியாக முயன்றதின் பயன் இன்று மாதம் ரூ.30000 என்பது எனக்கு எளிதான ஒன்றாக மாறிவிட்டது.

ஒவ்வொருநாளும் பதிவுகள் எழுதினேன்.. ஒவ்வொருவரின் கேள்விகளுக்கும் என் பதில்களை அவர்கள் கேட்கத் தயாராக இல்லாவிட்டாலும், நான் எழுதினேன்... எழுதிக் கொண்டே இருந்தேன்... அவ்வாறு எழுதிய ஒவ்வொன்றையும் நிஜமாக்க வேண்டும் என்றே எனது மனதினை உருப்படுத்தி... இன்று அதனை ஆன்லைன் வேலை வழியாகப் பெற்ற வருவாயின் Online Job Payment Proof பகுதியில் எனது ஆதாரங்களை பதிவிட்டுள்ளேன். மாதம் ஒர் இலட்சம் சம்பாதிக்க முடியுமா என்று கேட்டவர்கள் கூட, பார்த்துக் கொள்ளலாம். பார்க்க > ரூ.1,07,300/- ஆகஸ்ட் மாத பேமண்ட்

இலட்சத்தினை தொட்ட எனக்கு கோடி என்பதும் நிஜம் என்பதனை நிரூபணம் செய்வதும் எனக்கு ஒன்றும் கடினமாக இருக்கும் என்று தெரியவில்லை... மிக மகிழ்வாகவே கோடீகளை சம்பாதிப்பதற்கான பணியினை GBDgift வழியாக தொடங்கியிருக்கிறேன். எளிதான அப்பணியினை விரைவில் செம்மையாக செய்து முடிப்பேன் என்றும் உறுதி கொள்கிறேன்.

புரிதலும், நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் ஒருங்கே அமைந்துவிட்டால் எதுவும் எளிதுதான்.

:thanks:
Image
Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இணையம் மூலம் சம்பாதித்தவர்க்ள் எத்தனை பேர்?எவ்வளவு பணம்?

Post by ஆதித்தன் » Sun Oct 18, 2015 10:46 am

2007 ஆம் தொடங்கிய எனது ஆன்லைன் வேலை தேடலில் 1 மாதம் மட்டுமே மன வருத்தத்தில் செய்யாமல் இருந்திருப்பேன் மற்றப்படி இடமாற்றம், நெட் இல்லாமை என ஒர் 4 மாதம் தடங்கலால் செய்யாமல் இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன்... மற்றப்படி வருவாயே இல்லாவிட்டாலும் எனது தேடலும் விடாமுயற்சியும் குறையவே இல்லை. வெற்றியடைய வேண்டும் என்ற எனது பிடிவாதமும் மாறவே இல்லை.

2009 ஆம் ஆண்டிலிருந்து எனது தேடலைக் குறைத்து தெரிந்தது என்ற விடயத்தில் அதிக நேரம் பணியினை விடாமுயற்சியுடன் செய்ய ஆரம்பித்து.. இன்றைய நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் வருவாய் நிலையையும் நீங்கள் அறிந்து கொள்வதற்கும்,.... விடாமுயற்சியுடன் செயல்பட்டால் நான் கூறும் வழிமுறைகள் உங்களுக்கு வெற்றியினைக் கொடுக்கும் என்ற நம்பிக்கைக்காகவும் இப்பதிவினை மேல் எடுத்துவிடுகிறேன்.

3 மாதத்தில் கற்றுக் கொள்ள வேண்டிய ஒர் விடயத்தினை நான் வீணான தேடலால் பல வருடங்களை இழந்துவிட்டேன்.

இன்று உங்களுக்கு இதுதான் ஆன்லைன் வேலை என்று ஒரே இடத்தில் அனைத்து தகவலையும் படித்து தெளிவுற வாய்ப்பு கிடைத்துள்ளது... அவசியமற்ற பதிவுகளின் சந்தேகங்களை தீர்க்கவும் துணைக்கு ஆளிருக்கிறது.

உங்களிடம் இருக்க வேண்டியது எல்லாம் விடாமுயற்சி மட்டுமே. முயன்றால் மானிடர்க்கு முடியாதது எதுவுமில்லை.
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: இணையம் மூலம் சம்பாதித்தவர்க்ள் எத்தனை பேர்?எவ்வளவு பணம்?

Post by சாந்திவி » Sun Oct 18, 2015 3:27 pm

நன்றி சார்
தொடர்ந்து முயற்சி செய்வேன்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இணையம் மூலம் சம்பாதித்தவர்க்ள் எத்தனை பேர்?எவ்வளவு பணம்?

Post by ஆதித்தன் » Sun Oct 18, 2015 4:05 pm

சாந்திவி wrote:நன்றி சார்
தொடர்ந்து முயற்சி செய்வேன்
தன்னம்பிக்கையோடு விடாது முயற்சிப்பார்க்கு எவரது உதவியும் தேவையில்லை என்றுச் சொன்னாலும், மன நிறைவான வெற்றிகள் உங்களது கரங்களை தேடி வர என்னால் முடிந்த உதவிகள் எப்பொழுதும் கிடைக்கும்.

வாழ்த்துகள்...
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”