Yahoo Contributors Network Vs PADUGAI TAMIL ONLINE JOB TEAM

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Yahoo Contributors Network Vs PADUGAI TAMIL ONLINE JOB TEAM

Post by ஆதித்தன் » Wed Mar 14, 2012 7:13 am

Image
படுகை.காம்-ல் நம் பணி தான் என்ன?

தினம் தினம் என்னை தொல்லைபேசி வழியாக தொடர்பு கொள்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் இல்லை, அனைவரும் என்னிடம் கேட்கும் கேள்வியில் முதன்மையானது, என்ன வொர்க் பண்ணனும், எப்படி பண்ணனும் என்பதுதான். இதனை, ரொம்பவும் விளக்கமாக படுகையில் ஒர் 20 பயிற்சி பணியாக, மிகவும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையிலும், உடனடியாக செய்து கற்றுக் கொள்ளும் வாயிலாகவும் கொடுத்துள்ளேன். ஆனாலும், அதனைப் பார்த்து படித்து செய்து கற்றுக் கொள்ளாமல், தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதற்காக, உடனடியாக அழைத்துவிடுகிறார்கள். சரி, அழைத்து கேட்கிறார்கள் பதில் சொல்வோம் என்று விளக்கமாக சொன்னாலும்.. தொடர்ந்து படுகையில் ஒர் இலவச உறுப்பினராகக் கூட இணைந்து சொன்னதை செயல்படுத்திப் பார்ப்பது இல்லை.

படுகையை பொறுத்துவரைக்கும் உங்களுக்கு எதுவும் தெரிந்திருக்க வேண்டாம். கற்றுக் கொள்ளும் ஆர்வம் மட்டும் இருந்தால் போதும். தொலைபேசிக்கு அழைப்பதனாலோ .. கேட்டுத் தெரிந்து கொண்டோம் என்பதனாலோ பணம் கிடைப்பது இல்லை. நம் உழைப்பைக்காட்டினால் மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும். அப்படியாக உழைக்க, உங்கள் பணிகள் இதுவென, சொல்லக் கேட்பதைக் காட்டிலும் செயலில் பார்த்து கற்றுக் கொள்வதே சிறப்பு. அதற்காகத்தான் படுகையிலேயே பயிற்சி பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அப்படியிருந்தும் செய்து கற்றுக் கொள்ளாமல், தொலைபேசியில் அழைத்துக் கேட்பதில் என்ன இருக்கிறது?

இப்படி ஒவ்வொரு நாளும் பலரிடம் அனுபவப்பட்டாலும், 10 நாட்களுக்கு ஒர் முறை, ஒர் சில அனுபவம் வாய்ந்தவர்களும் தொடர்பு கொள்வது உண்டு. அவர்களிடம் நானும் மிகவும் தெளிவாக அதிக நேரம் பேசினாலும் என்னை நம்பி படுகையில் சேர்வதில்லை, அதுவும் ஏன் என்று தெரியவில்லை.

அந்த வகையில் இன்று என்னிடம் பேசிய அனுபவஸ்தரும் நம் படுகையில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்ற கேள்வியைக் கேட்டார். நான் ஒர் அவசரக் கோலத்தில் விரைவாக பதில் சொல்ல, புரியாததால்.. சார் ஒன்றும் புரியவில்லை. நிதானமாகச் சொல்லுங்கள், எனக் கேட்டுக் கொண்டார். என் அவசர பணிநிலை தெரியாமல், இவர் இப்படி கேட்க.. நான் உடனே அவரிடமே கேள்வியைக் கேட்க ஆரம்பித்தேன். இதற்கு முன் ஏதேனும் ஆன்லைன் ஜாப் செய்திருக்கிறீர்களா என்று. இல்லை என்று சொன்னவர்.. பின்னர், சார் உங்களுக்கு Yahoo Contributor Network தெரியுமா? எனக் கேட்டார். இதற்கு முன் யாகூ கான்றிப்யூட்டர் நெட்வொர்க் பற்றி அறிந்திராவிட்டாலும், இணையத்தில் பணி என்று கூடிய வாய்ப்புகள் அனைத்தையும் நம் படுகையை பயிற்சி பணிகளில் கொடுத்திருப்பமையால், இதில் என்ன புதுமை இருக்கப்போகிறது சொல்லுங்கள் .. அதில் என்ன பணி என்று கேட்டேன். நாம் ரைட் பண்னுவதற்கு பே பண்ணுவாங்க .. போட்டோ .. விடியோ எல்லாம் சேர் பண்ணலாம்... அப்படின்னு சொன்னதுமே... அவர் சொல்ல வரும் பணிகள் பிடிபட்டுவிட்டன. உடனே நான், இதைத் தானே நானும் சொன்னேன்.. கவிதை,கட்டுரை எழுதி பணம் சம்பாதிப்பது என்று.

நாமே சொந்தமாக ஒர் கவிதை, கட்டுரை .. பொருளுக்கான மதிப்புரை, திரை விமர்சனம், இயற்கையை வித்தியாசமான முறையில் படம் எடுத்து வாசகர்களை கவர்வது, புதிய டூட்டோரியல் விடியோ உருவாக்குவது, விடியோ படம் எடுப்பது என, நாம் செய்யும் பணிக்குத் தகுந்தவாறு, பின்னர் பிற தளங்களில் நம்மையும் ஒர் எழுத்தாளராக(Contributor) மதித்து பணிக்கு அழைக்கலாம்.. நம் திறமையினைக் கொண்டு பரிசுப் போட்டியில் வெல்லலாம்.... படுகை நம் ஆக்கத்தின் வாசகர் வட்டத்தினைப் பார்த்து ஊக்கத் தொகை வழங்கும்..

இதைத்தானே யாகூவும் சொல்கிறது, அதே பணியினை நாம் தமிழில் செய்கிறோம்... அவர்கள் ஆங்கிலத்தில் செய்கிறார்கள். அதுமட்டுமே வித்தியாசம்.

ஒரே ஒர் சிறப்பு, படுகையில் அரட்டை அடிப்பதுக்கூட ஒர் சிறப்பான பண வருவாயைக் கொடுக்கும் என்பதுதான். ஆகவே, கவிதை, கட்டுரை, படம் உருவாக்குதல் என்பதெல்லாம் தெரியாவிட்டாலும் கூட அரட்டை அடிக்கக் கூட தெரியாது என்பவர்கள் எவரும் இலர். இதன் காரணமாகத்தான், அனைவரும் பணம் சம்பாதிக்க கூடிய வசதியினைக் கொண்ட தளமாக நம் படுகை உருவெடுக்கும் என்பது நிதர்சன உண்மை .

எது எப்படியோ, இந்த நபரின் வாயிலாக Yahoo Contributor Network என்ற ஒன்றும் இணையம் மூலமாக பணம் சம்பாதிக்க உதவுகிறது என்பதனைத் தெரிந்து கொண்டேன், மகிழ்ச்சி.

Yahoo Contributors Network
Where your voice joins the world’s conversations.
The Yahoo! Contributor Network allows writers, photographers, and videographers to share their knowledge and passion with hundreds of millions of people worldwide. Find your audience and earn money by publishing your unique perspectives on Associated Content and other Yahoo! sites.


Make your voice heard. Choose your own topics or claim opportunities from our Assignment Desk.

Expand your reach. Publish your work on Yahoo! News, Yahoo! Sports, Yahoo! Finance, omg!, Shine, Associated Content, and other leading websites. The Yahoo! network reaches more than 600 million unique visitors each month.

Fine-tune your skills. Join our community of content creators, and use our tools and resources to hone your craft.

Get paid. Earn money through up-front payments, exclusive assignments, and performance bonuses based on the traffic your work receives.

Reach for the stars. Contribute as many articles, photos, and videos as you'd like. The more you publish, the further our platform can take you.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”