படிப்பு - வேலை - பணம் : என்ன சொல்கிறீர் நீங்கள்?

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

படிப்பு - வேலை - பணம் : என்ன சொல்கிறீர் நீங்கள்?

Post by ஆதித்தன் » Thu May 14, 2015 10:54 am

Image
படிப்பு > வேலை > பணம் , என்பதனைப் பற்றி என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?
முடிவுற்றது
உங்களது சொந்தக் கருத்துக்களை மட்டும் பகிர்ந்து கொள்வதற்கு உடனடியாக ஊக்கத்தொகை வழங்கப்படும்.

விதிமுறை:: பதிவு கட்டுரை என்று சொல்லும் அளவுக்கு 50 வரிகளுக்கு மேலும், தலைப்பினை உள்ளடக்கியும் , அர்த்தம் பொதிந்தும், பெரிசாக வார்த்தை வளம் இல்லை என்றாலும் மனதிலிருந்து வெளிப்படுத்துவதாக இருத்தலும் நலமே.

ஊக்கத்தொகை::
கோல்டன் மெம்பர் :: $1.55
அடிப்படை உறுப்பினர் : $0.51

உங்களது பதிவினை பின்னூட்டமாக இங்கே வழங்கலாம்...... அடியில் உங்களது PerfectMoney டாலர் அக்கவுண்ட் ஐடியையும் கொடுத்தால் ஒகே என்னும் பற்றத்தில் உடனடியாக பணம் வழங்கப்பட்டுவிடும். அப்படி இரண்டு நாளில் வழங்கப்படவில்லை என்றால், திருத்தம் செய்து மீண்டும் எழுதவும்.

ஒருவர்க்கு ஒர்முறை மட்டுமே ஊக்கத்தொகை வழங்கப்படும்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: படிப்பு - வேலை - பணம் : என்ன சொல்கிறீர் நீங்கள்?

Post by கிருஷ்ணன் » Thu May 14, 2015 11:55 pm

படிப்பு
Image
"கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே" என்பார்கள்.


கல்வி என்பது மனித குலத்தின் அஸ்திவாரம்.வாழ்க்கையின் வலது கை.

"கற்றோருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு" என்பதும் "த‌ன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்" என்பதும் "சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே" என்பதும் கல்வியின் கட்டாயத்தினை நம் முன்னோர் உணர்த்திய வழிமுறைகள்.


இப்படி படிப்பின் சிறப்புகளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்.

இவை எல்லாம் அந்தக் காலப் பழமொழிகள்.கல்வி மனிதனுக்குப் பண்பைக் கொடுக்கும்,பதவியினைக் கொடுக்கும், என்ற விதத்தில்தான் கல்வியின் பெருமையினைச் சிறப்புறைத்தார்கள்.

ஆனால் இன்றைய கால கட்டத்தில் கல்வி வியாபாரமாகிவிட்டது என்பது நம் அனைவராலுமே 100 சதவீதம் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை.படிப்பு வியாபாரமாக்கப்பட்டது என்பதோடு இல்லாமல் எதிர்கால தலைமுறைகளையும் பணம் சம்பாதிக்கும் எந்திரமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.


பணத்தினக் கொட்டிப் படிக்க வைக்கிறோம்.பணத்தினைக் கொட்டி வேலை வாங்குகிறோம்.அதில் பட்ட கடனை அடைக்க,போட்ட முதலீட்டினை பல மடங்காகத் திருப்ப என பலரும் லஞ்சம்,ஊழல் என எதிர்மறை விளைவுகளுக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள்.

பண்போடு கூடிய படிப்பேச் சிறந்தது.படித்த எல்லோரும் மேதாவிகள் அல்ல.
படிக்காத எல்லோரும் ஏமாளிகளும் அல்ல.

இன்றைய கால கட்டத்தில் படித்த பலரும் வாழ்க்கையினை எதிர் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்வதனையும்,வாழ்க்கையினை எளிதாக எடுத்துக் கொண்டு ஏமாந்து போவதினையும்,தாங்கள் படித்த படிப்பினை நாச வேலைகளுக்குப் பயன்படுத்துவதினையும் நாம் தினம் தினம் பார்க்கிறோம்.


எனவே படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல.பண்போடு கூடிய படிப்பேச் சிறந்தது என்பதினை எதிர்காலத் தலை முறைக்கு எடுத்துக் கூறி எழுப்புங்கள்.அப்போதுதான் முதியோர் இல்லங்கள் மூடப்படும்.சிறைச் சாலைகள் சிறிதாகும்.பாடசாலைகள் பலருக்கும் பயனுள்ளதாக மாறும்.வாழ்க கல்வி,வளர்க தமிழ்.
வேலை
Image
இன்றைய கால கட்டத்தில் சாமான்ய மக்களின் மிகப் பெரிய சவாலாக இருப்பது வேலை வாய்ப்புதான்.

படிப்பு படிப்பு என்று இரண்டு தலைமுறைகளுக்கு முன்பிருந்து நமது சமூகம் எடுத்துக் கொண்ட அதீத அக்கறையின் அடுத்தப் பிரச்சினை வேலை.

படித்தப் படிப்பிற்கேற்ற வேலை என்று பலரும் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறோம்.அரசாங்க வேலை என்பதற்காக ஆயுள் முழுக்க அலைகிறோம்.

எந்த வேலைக்காக நாம் பணத்தினைக் கொட்டிப் படிக்க வைத்தோமோ அந்த வேலையினை வாங்கவும் பல இலட்சங்களைக் கொட்டிக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் பணம் வைத்திருக்கும் பலர்.

பணமில்லாத படித்த பல சாமான்யர்களின் பிரச்சினை படிப்பிற்காக வாழ்க்கையின் பாதியினைச் செலவழித்து படிப்ப்ற்கேற்ற வேலையினைத் தேடி வெறுத்துப் போகிறார்கள்.வாழ்க்கையின் யதார்த்தினைப் புரிந்து கொள்வதற்குள் வழுக்கை விழுந்துவிடும் அளவிற்கு வ‌யதாகிவிடுகிறது.

சரி வேலை கிடைத்த பிறகாவது பலர் நிம்மதியாக இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.


பணிச் சுமை காரணமாக தற்கொலை செய்பவர்களையும் பார்க்கிறோம்.பண்பின்மை காரணமாக பணி நீக்கம் செய்யப்படும் பலரையும் பார்க்கிறோம்.


"கைத் தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்" என்பது பலமொழி.


இன்றைய கால கட்டத்தில் சுய தொழில் புரிவதே சுகமான வேலையாகும்.

எந்த வேலையினையும் இழிவு பாராமல் எடுத்த வேலையில் சிரத்தையுடன் செயல்பட்டால் எல்லாம் நம்மைத் தேடி வரும்.

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றோரெல்லாம் தொழுதுண்டு பின் செல்வார்" என்பார் திருவள்ளுவர்.


எனவே விவசாயத்திற்கு அடுத்தபடியாகத்தான் உலகின் மற்ற வேலைகள் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.ஜெயிப்பீர்கள்.
பணம்
Image
"பணம் பந்தியிலே குணம் குப்பையிலே""பணம் பாதாளம் வரை பாயும்" "காசேதான் கடவுளடா""காசு,பணம்,துட்டு,MONEY,MONEY " என வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பணத்தின் அருமையினை நாம் பட்டறிவாகப் பெற்று வளர்ந்துள்ளோம்.


பணம்தான் வாழ்க்கை என ஒரு கட்டத்தில் வாழ்கிறோம்.ஒரு கட்டத்தில் பணமின்றி தவித்த பலரும் பணத்தினைச் சேர்த்த பிறகும் நிற்பதில்லை.வாழ்க்கையின் தேவையினைப் பூர்த்தி செய்யத் தேவையான அளவோடு நிற்பதில்லை.ஏழு தலைமுறைக்கும் சொத்துச் சேர்ப்பதில்தான் முனைப்பாக உள்ளார்கள்.சொத்துக்களைக் குவித்த பலரின் முடிவுகள் சோகமாகிப் போவதையும் பார்க்கிறோம்.

எப்படிப் பார்த்தாலும் என்ன சொன்னாலும் எப்படி வாதிட்டாலும் பணமில்லாமல் வாழ்க்கையில்லை. வாழ்க்கையின் பிரதானம் பணமாகிவிட்டது.


"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்பார்கள்.பணம் மட்டும் வாழ்க்கையில்லை.பணமில்லாமலும் வாழ்க்கையில்லை.

எனவே பணத்தினை சம்பாதிப்போம்.அறவழியில் தேடுங்கள்.எந்த தொழில் செய்தாலும் தொழில் தர்மத்திற்கேற்ப செயல்படுங்கள்.கடைசி வரை காசு உங்கள் கையில் தங்கும்.வாழ்த்துக்கள்.
PERFECT MONEY ID:::U8812343
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: படிப்பு - வேலை - பணம் : என்ன சொல்கிறீர் நீங்கள்?

Post by ஆதித்தன் » Fri May 15, 2015 2:10 am

பின்னே வந்தால் முன்னே பார்த்து அச்சம் வந்துவிடக்கூடாது என்று, முன்னவே வந்து என்னைக் காட்டிலும் சிறப்பாக செய்துப் பாருங்கள் என்று பதிவிட்ட கிருஷ்ணன் சார்க்கு வாழ்த்துகள்..

=======================

ஏற்கப்பட்டது.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: படிப்பு - வேலை - பணம் : என்ன சொல்கிறீர் நீங்கள்?

Post by கிருஷ்ணன் » Fri May 15, 2015 8:32 am

ஆதித்தன் wrote:பின்னே வந்தால் முன்னே பார்த்து அச்சம் வந்துவிடக்கூடாது என்று, முன்னவே வந்து என்னைக் காட்டிலும் சிறப்பாக செய்துப் பாருங்கள் என்று பதிவிட்ட கிருஷ்ணன் சார்க்கு வாழ்த்துகள்..

=======================

ஏற்கப்பட்டது.
Image

மிக்க நன்றி சார். :thanks: :thanks:

அனைவருக்கும் இது ஒரு அருமையான ARTICLE WRITING பயிற்சியாக அமைய ஏற்பாடு செய்துள்ள படுகை.காம்..ற்கு நன்றி. :thanks: :thanks:
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: படிப்பு - வேலை - பணம் : என்ன சொல்கிறீர் நீங்கள்?

Post by marmayogi » Sat May 23, 2015 10:44 pm

படிப்பு:
●●●●
Image
★ ஒரு மனிதன் அறிவை சிறந்த முறையில் பயன்படுத்தி நாகரீகமாக வாழ வழி வகுப்பது படிப்பு மட்டுமே. படிப்பு என்பது ஒரு மனிதனுக்கு அத்தியாவசிய தேவை. இந்த படிப்பு அவனது வாழ்நாளில் அழியாத செல்வமாக திகழ்கிறது. அரசர் வாழ்ந்த காலங்களில் கல்வியை கற்றுகொள்ள குருகுலத்திற்கு சென்று அவர்களுக்கு பணிவிடை செய்து கற்றார்கள்.

★அந்த காலக்கட்டத்தில் படிக்க புத்தகம், நோட் எதுவும் கிடையாது. எல்லாம் செயல்முறையில் கற்றார்கள். ஓலைச்சுவடிகளை பயன்படுத்தினார்கள். அந்த காலகட்டத்தில் படிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. ஆனால் இப்போது நாகரீகம் வளர வளர internet, book, calculator ஆகியவற்றை பயன்படுத்தி எளிமையாக படிக்க முடிகிறது. தெரியாத கேள்விகளுக்கு internet மூலமாக உடனுக்குடன் பதில்களை தெரிந்துகொள்ள முடிவதோடு நேரமும் விரயம் ஆவது குறைகிறது.

★மனிதன் இன்று ஒரு கணக்கு போட வேண்டும் என்றால் கூட calculator ஐ தேடுகிறான். இதனால் அவனது சிந்திக்கும் திறன் குறைகிறது.
கல்வி என்பது ஒரு மனிதனின் நிழல் போல பின் தொடர்ந்து வரும். ஒருவனின் பெயரின் பின்னால் அவன் வைத்திருக்கும் பணத்தை யாரும் குறிப்பிடுவதில்லை.

★அவன் என்ன படித்திருக்கிறான் என்பதை தான் பார்கிறார்கள். பெயரின் பின்னால் BE,B.com,MA இப்படி படித்த பட்ட பெயரை போட்டு கொண்டால் தான் பெருமை என்று நினைக்கிறான். படிப்பினால் நாளும் ஒரு புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து புதிய புதிய technology மூலமாக வேலையை பணி சுமையை குறைக்க முடிவதோடு விரைவாக நேரமும் மிச்சம் ஆகிறது. கல்வி குறைவாக இருந்த காலத்தில். ஒரு தகவலை தன் உறவினருக்கு தெரிவிக்க புறா , தபால் ஆகியவற்றை பயன்படுத்தி செய்தியை தெரிவிக்க வேண்டும்.

★ இதனால் நேரமும் வேலையும் அதிகம் ஆகிறது. அறிவியல் நாகரீகம் வளர்த்து மக்கள் அனைவரும் தொலைபேசி ,கணினி , மின்னஞ்சல் மூலமாக தகவல்கள் பரிமாற்றப்படுகிறது.
இப்போது படிக்கும் மாணவர்கள் விடிய விடிய படிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி கண் விழித்து படித்துவிட்டு காலையில் தேர்வு எழுத செல்லும் போது படித்தது அனைத்தும் மறந்துவிடும்.

★இதற்கு காரணம் விருப்பம் இல்லாமல் படித்ததே காரணம். ஆசிரியர்கள் வற்புறுத்தி படிக்க வைப்பதே காரணம். படி படி னு சொன்ன எப்படி படிப்பு ஏறும்!!!!. அன்பாக சொல்லி கொடுத்தால் மாணவர்களுக்கு புரியும். அதை விட்டுவிட்டு மாணவர்களை அடிப்பதாலோ திட்டுவதாலோ படிக்க வைத்துவிடலாம் என்று நினைப்பது முட்டாள்தனம்.

★படிக்கும் குழந்தைகளை படி படி என்று வற்புறுத்த கூடாது. இதனால் அவர்களுக்கு பயம் ஏற்பட்டு படிப்பில் ஆர்வம் இல்லாமல் போய்விடும். ஒரு சில குழந்தைகளுக்கு நினைவு திறன் குறைவாக இருக்கும். அவர்கள் எவ்வளவு தான் படித்தாலும் நினைவு இருக்காது. படித்தது எல்லாம் மறந்து போகும். இப்படி இருக்கும் குழந்தைகள் அறிவு வளர்ச்சி இல்லை என்று சொல்லிவிட முடியாது.

★நினைவு திறனை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்ற வழியை கண்டுபிடித்துவிட்டால் படிப்பு என்பது எளிமையாகிவிடும். எப்போதும் படிக்கும் போது புருவ மத்தியில் நினைவை கொண்டு வந்து பழக்கும் போது மனம் புருவ மத்தியில் ஒருமைபடும். மனம் என்பது புருவ மத்தியில் spiral shape ல் எப்போதும் சுற்றி கொண்டே இருக்கும். அந்த அலை சுழல் அதிகமாகும் போது மனதின் இயக்கம் அதிகமாகும் அந்த நேரத்தில் என்னதான் படித்தாலும் மனதில் நிற்காது. எப்போது மன அலைசுழல் குறைந்து ஆல்பா நிலைக்கு வருகிறதோ அப்போது என்ன படித்தாலும் மனதில் அப்படியே பதியும்.

★மன அலை சுழல் குறையும் போது மட்டுமே நினைவு திறன் அதிகரிக்கும். சுவாமி விவேகானந்தர் புத்தகத்தை படிக்கும் போது அவரது மனம் புத்தகத்தில் ஒன்றி இருக்கும். ஒரே ஒரு முறை மட்டுமே படிப்பார் படித்ததை அப்படியே மனப்பாடமாக எப்போது வேண்டுமானாலும் சொல்லுவார். மனம் ஆழ்ந்த தியான நிலைக்கு செல்லும் போது மனதின் அலைசுழல் குறைந்து நினைவு திறன் அதிகரிக்கும்.
அவரை பார்க்க வருபவர்கள் அவர் பக்கத்தில் இருந்தாலும் கவனிக்க மாட்டார். அவரது கவனம் புத்தகத்தில் மட்டுமே இருக்கும். நினைவு திறன் குறைவாக இருந்தால் நினைவு திறனை வளர்த்து கொள்ளலாம்.

வேலை:
●●●●●●●
Image
★பணத்தை சம்பாதிக்க ஒவ்வொரு மனிதனும் வேலையை தேடி செல்கிறான். படிக்காதவன் தினமும் கூலி வேலை செய்து பிழைக்கிறான். ஒரு கூலி தொழிலாளி உடல் உழைப்பு அதிகமாகவும் சம்பளம் குறைவாகவும் பெறுகிறான். படித்தவன் சற்றே சிந்தித்து படிக்காதவர்களை வேலை வாங்குகிறான். எனவே படித்தவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. ஒவ்வொரு நாளும் பணத்தின் தேவை அதிகரிக்கிறது. நம் தேவையை நிறைவு செய்ய ஒரு மனிதனிடமிருந்து நமக்கு தேவையானதை வாங்கிகொள்ள பணம் பயன்படுத்தபடுகிறது.

★பணம் சம்பாதிக்க ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை தேவைப்படுகிறது அந்த வேலை அவன் அறிவை பொருத்து உள்ளது. ஒருவரின் கல்வி திறனை வைத்து வேலை மற்றும் சம்பளம் நிர்ணயிக்கபடுகிறது. ஆசை நமக்கு அளவில்லை . எனவே நாம் பணத்திற்காக ஒரு வேலையை தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம் . பணத்தின் தேவை எப்பொழுது நிறைவடைகிறது என்றால் அது கேள்வி குறியே!!!!!!

★நாம் சேமித்து வைத்துள்ள பணத்தை செலவு செய்ய ஒரு பொருளை உற்பத்தி செய்து அது நம்மை ஈர்க்கும் படி செய்கிறோம்.


பணம்:
●●●●●
Image
★ பணம் என்றால் பிணம் கூட வாயை திறக்கும் என்று கேள்விபட்டு இருக்கிறோம். பணம் அதல பாதாளம் வரைக்கும் பாயும் என்பார்கள். பணம் என்பது மனிதனின் அடிப்படை தேவையில் ஒன்றாகும்.

★இந்த படிப்பு மனிதனின் தேவையை பூர்த்தி செய்ய மட்டுமே உதவும். மனிதன் வாழ்க்கை முடிந்த பிறகு சேமித்த பணம், எதுவும் கூட வருவதில்லை. ஒரு மனிதனுக்கு பசி என்ற தேவை எழவில்லை எனில் யாரும் பணத்தை நாடி செல்ல மாட்டார்கள் . பசி என்ற ஒரு உணர்வு இருக்கும் வரை ஒவ்வொரு மனிதனுக்கும் பணம் என்ற அத்தியாவசிய தேவை இருந்து கொண்டே இருக்கும். பணம் என்பது அத்தியாவசிய தேவைதான். இதற்கு நான் மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் பணம் சம்பாதிப்பதே வாழ்க்கையாக மாறிவிட கூடாது. மனிதன் ஆயுள் முழுதும் பணத்தை சம்பாதித்து கொண்டே இருந்தால் நாம் வாழும் வாழ்க்கைக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

★மனித பிறவி என்பது அரிதானது. மனதை சரியான முறையில் பயன்படுத்தினால் உயர்வு.மனதை சரியான முறையில் பயன்படுத்த தெரியவில்லையெனில் தாழ்வு. உடல் நலம்,மன நலம், நீள்ஆயுள், நிறை செல்வம், உயிர் புகழோடு வாழ்ந்து முழுமைப்பேரு அடைவதே மனித பிறவியின் நோக்கம் ஆகும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நன்றி

PM id: U8147466
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: படிப்பு - வேலை - பணம் : என்ன சொல்கிறீர் நீங்கள்?

Post by ஆதித்தன் » Sat May 23, 2015 11:41 pm

marmayogi wrote:படிப்பு:
●●
வேலை:
●●●
பணம்:
●●~~
:ros: முயற்சிக்கு பாராட்டுகள் ... ஊக்கத்தொகை வழங்கப்பட்டுவிட்டது.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: படிப்பு - வேலை - பணம் : என்ன சொல்கிறீர் நீங்கள்?

Post by marmayogi » Sun May 24, 2015 12:58 am

Image
Thank you sir :thanks: :thanks: :thanks:
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: படிப்பு - வேலை - பணம் : என்ன சொல்கிறீர் நீங்கள்?

Post by satkunan » Sun May 24, 2015 7:27 pm

படிப்பு வேலை பணம்
படிப்பு அதாவது கல்வி இது செல்வங்களுள் எல்லாம் சிறந்த ஈடு இணை இல்லாத செல்வம் அதனால் தான் வள்ளுவர் “கேடில் விழிச் செல்வம் கல்வி”என்றார் கெடுதல் அல்லது அழிதல் இல்லாத செல்வம் கல்வி என்பதே இதன் பொருள் பிற செல்வம் எல்லாம் அழியக்கூடியவை கல்வி என்றும் அழியாது நிலைத்து நிற்கக்கூடியது ஒருவரிடமுள்ள கல்வி வெள்ளத்தால் அழியாது தீயால் வேகாது திருடர்களால் திருட முடியாது கல்வி கொடுக்க கொடுக்க கூடுமே தவிர ஒரு போதும் குறையாது மன்னனுக்கு தனது தேசத்தில் மட்டும் தான் சிறப்பு அனால் படித்தவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு பிற செல்வங்களை எல்லாம் விட கல்வியே உயர்ந்தது கல்வி இல்லா விடில் பிறசெல்வங்களால் பயன் எதுவும் இல்லை பிற செல்வங்களை தேடவும் அவற்றை நன்கு பயன் படுத்தவும் கல்வியே நமக்கு உதவுகிறது இக்கல்வி செல்வத்தை இளமையிலேயே பெறுதல் நன்று “இளமையிற் கல்வி சிலையில் எழுத்து” என்பர் இளமைலில் கற்றால் தொடர்ந்து எப்போதும் கற்கலாம்.என்றும் அழியாது இருக்கும். “கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு” என்றார் ஔவையார் நாம் படிப்பதற்கு எவ்வளவோ விடயங்கள் உள்ளன, படிப்பதற்கு வயது இல்லை நாம் இறக்கும் வரை படித்துக்கொண்டேஇருக்கலாம்.சிறுவயதில் படிக்கும் போதே மனதுக்குள் ஒரு இலக்குடனே படிக்கிறோம் அந்த இலக்கை அடைவோர் ஒரு சிலபேர் மட்டுமே படிகிறார்கள் ஒரு நல்ல வேலையை பெற்று நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்குடனே. சிலர் வெறும் புத்தக பூச்சிகளாகவே இருப்பர் அவர்களிடம் அனுபவ படிப்பு எதுவும் இருப்பதில்லை பல பேர் பட்டபடிப்பு முடித்து இருப்பார்கள் அவர்களால் ஒரு பத்திரமோ கடிதமோ எழுத முடிவதில்லை படித்தவர்கள் அனைவரும் புத்திசாலிகளும் அல்ல புத்திசாலிகள் அனைவரும் படித்தவர்களும் அல்ல. இவ்வாறாக படிப்புள்ளது
அடுத்து வேலை, எதற்காக வேலை செய்ய வேண்டும் மனிதனின் அடிப்படை தேவையான உணவு உடை உறையுள் என்ற அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய வருமானம் அவசியம் வருமானத்தை பெற ஒரு வேலை வேண்டும் அத்துடன் ஆடம்பரமாக வாழ அதிக பணம் தேவை அதற்கும் நிறைய வருமானம் வரக்கூடிய வேலை தேவை. பலர் பலவிதமான வேலைகளை செய்கின்றனர், நாட்டின் சனத் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப திட்டமிட்ட வேலை வாய்ப்பு திட்டங்கள் ஆரம்பிக்கப்படாத காரணத்தால் திரை கடல் ஓடியும் திரவியம் தேடும் நோக்குடன் வேலை தேடி வளர்முக நாடுகளை நோக்கி ஓடுகிறர்கள் இன்றைய நவீன உலகில் பள்ளி படிக்கும் காலத்திலே மாணவ, மாணவிகள் எதிர் காலத்தில் தான் நல்ல மருத்துவர் ஆக வேண்டும், நல்ல பொறியாளர் ஆக வேண்டும் என தனக்கான துறையை முடிவு செய்து கொண்டு கல்லூரியில் கால் பதிக்கும் போது தான் படிக்கும் கல்லூரி மூலமாகவே வேலையும் பெற்றுவிட வேண்டும் என்று களம் இறங்குபவர்களில் சிலர் ஏனோ சில காரணத்தால் கல்லூரி முடித்துவிட்டு தான் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையும், தான் எதிர்பார்த்த வேலையும் கிடைக்காமல் செய்வதறியாது தடுமாறுகிறார்கள் இதனை பயன்படுத்தி பல போலி நிறுவனங்கள், முகவர்கள் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக பல இலட்சம் ரூபாய்களை பெற்றுக்கொண்டு இறுதியில் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்காமல் பணத்தை பறித்துக் கொண்டு தங்களை தொடர்பு கொள்ள முடியாத இடத்திற்கு சென்றுவிடுகிறார்கள்.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக வேலையும் இன்றி தனது பணத்தையும் இழந்து தவிக்கும் இன்றைய இளையதலைமுறை அதிகமே. பொதுவாக படிக்கும் காலத்தில் படிப்புக்கென்று பணத்தை செலவு செய்துவிட்டு தங்களது எதிர்கால கனவுடனும், குடும்பக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடனும் தனக்கேற்ற வேலையை நல்ல ஊதியத்தில் தேடுகின்றனர். இந்நிலையில் வேலை கிடைக்காமல் ஏதோ சில காரணங்களால் தாமதாகும் போதுதான் வாழ்க்கையில் விரக்தியும், மன அழுத்தமும் ஏற்பட்டு தன்னம்பிக்கையை அதிகம் பேர் இழந்து விடுகிறார்கள். கைத்தொழில் ஒன்றை கற்றுகொள் கவலை உனக்கில்லை ஒத்துகொள் ஒரு வேலை என்று இராமல் கைத்தொழில் ஒன்றை ஒவ்வருவரும் கற்றுகொண்டால் கவலையில்லாமல் வாழ்க்கையை கழிக்கலாம்.
அடுத்து பணம் லத்தீன் மொழியில் மானட்டா என அழைக்கப்பட்ட சொல்லே மருவி ஆங்கிலத்தில் MONEY என அழைக்கப்படுகிறது. பணத்தை பற்றி ஒரு சில பழமொழிகளில் விளக்கலாம் என எண்ணுகிறேன் “பணம் பத்தும் செய்யும்”பணமிருந்தால் ஒருவனால் ஒரே நேரத்தில் பலவிதமான விதமான செயல்பாடுகளைச் செய்யமுடியும். “பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும்”மனிதனுடைய பேராசை விளக்குகிறது “ஈட்டி எட்டினவரை பணம் பாதாளம் வரை”ஒருவன் உடல் பலத்தால் சிறிதளவு செயல்களையே செய்ய இயலும். பணம் படைத்தவன் அதனைவிடப் பலமடங்கு செயல்களைப் பணத்தின் வாயிலாக செய்து கொள்வான். அதனால் பணத்தின் ஆற்றலை அறிந்து ஒருவன் அதனை நேர்மையான வழிகளில் தேடிக்கொள்ளவேண்டும் என்ற வாழ்க்கை நெறியையும் இது எடுத்துரைக்கின்றது.அடுத்து பணம் பற்றி பன்னாட்டு பழமொழிகள் கூறுவதை பார்போம்.
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது.-ஸ்மித்.

பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொள்.-வீப்பர்.

நாம் பணக்காரர்களாக இருக்க கடமைப்பட்டிருக்கவில்லை. ஆனால் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.-பெர்னார்ட்ஷா.


பணம் ஒன்றே வாழ்வின் இலட்சியம் என்றால் அது தவறான வழியிலேதான் தேடப்படும். -ரஸ்கின்.

பணத்திற்குக் கடல் நீரின் குணம் ஒன்று உண்டு. கடல் நீரைக் குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகமாகும்.- ஷோப்பன் ஹொபர்.

சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தை- கோல்ட்டஸ்.


பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும் போதுதான் தெரியும்.- பிராங்க்ளின்.


பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம். அது இல்லாதவனுக்குக் கவலை
- பாரசீகப் பழமொழி.

யாராலும் பணத்தை சம்பாதிக்க முடியும் அறிவாளியால் தான் அதனை பாதுகாக்க முடியும்-அமெரிக்க பழமொழி

இப்பழமொழிகள் அனைத்தும் நமக்கு உணர்த்துவது பணத்தின் முக்கியத்துவத்தையே பணமில்லாமல் மனித வாழ்க்கை இல்லை சினிமா பாடல்கள் கூட பணத்தின் முக்கியத்துவத்தையே உணர்த்துகின்றன உதாரணமாக எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்?
பணத்தை எங்கே தேடுவேன்?
காசே தான் கடவுளப்பா
மிகவும் அர்த்தமுள்ள பாடல்கள்
பொதுவாக ஒரு சமூகத்தில் பணம் படைத்தவனுடைய சொல்லே அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. நல்ல ஒழுக்கமுள்ள ஏழையொருவன் நல்ல கருதுக்களைக் கூறினால் அதனைப் சமூகமானது ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. இதனை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும்
எனவே படிப்போம் வேலை செய்வோம் அதன் மூலம் பணம் பெறுவோம் வாழ்கையை அனுபவிப்போம்.
நன்றி
PM ID U 8075735
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: படிப்பு - வேலை - பணம் : என்ன சொல்கிறீர் நீங்கள்?

Post by ஆதித்தன் » Sun May 24, 2015 9:01 pm

satkunan wrote: .............
சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தை- கோல்ட்டஸ்.

.............
:ros: பாராட்டுகள் .. ஊக்கத்தொகை அனுப்பப்பட்டுவிட்டது.
Locked

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”