இலவச குரங்குப் பேர வர்த்தகத்தில் பணம் சம்பாதிக்கும் யுக்தி

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

இலவச குரங்குப் பேர வர்த்தகத்தில் பணம் சம்பாதிக்கும் யுக்தி

Post by ஆதித்தன் » Mon Aug 04, 2014 1:24 am

இணையத்தில் ஏதேனும் செய்து பணம் சம்பாதிக்கணும்னு முடிவு செய்துவிட்டால், நீங்க கண்டிப்பா படுகை.காம் தினம் வந்து கொண்டே இருக்க வேண்டும்... வந்தால் தான் தினம் தினம் மார்க்கெட்டில் நடந்து கொண்டிருக்கும் புதிய நிகழ்வுகளை தெரிந்து கொள்வதோடு, நல்ல வருவாயினையும் பார்க்க முடியும்.

இன்று உங்களுக்கு அறிமுகப்படுத்த இருப்பது குரங்கு பேர வர்த்தகம். அதென்ன குரங்கு பேரம்?? என்ற கேள்வி பிறக்குமாயின் அதற்கு நான் சுட்டிக்காட்டுவது எல்லோர்க்கும் தெரிந்த பழைய கதைதான், அது பங்குச் சந்தை வர்த்தகத்திலிருக்கும் அனைவருக்கும் தெரிந்த கதை.

பாட்டி வடை சுட்ட கதையே திரும்பத் திரும்பச் சொல்ற நமக்கு, குரங்குப் பேரக் கதையைக் கேட்கணும்னு சொல்ல ஓடிடுவீங்களா? என்ன ......

உட்காருங்க ... முழுசாக் கேளுங்க ... கேட்டால் உங்களுக்கும் பயன் நூறு.... :tong:

ஒர் ஊர்ல ஒர் வியாபாரி வந்து, ஐயா உங்க கிட்ட குரங்கு இருக்கா? சொல்லுங்க நான் நூறு ரூபா தாரேன்... கொடுங்கன்னு சொன்னாராம்... அதுக்கு அவர்... அதெல்லாம் காட்டுல கிடக்கும் பிடிச்சிக்கோ என்று சொல்லிட்டாராம்.

மற்றொரு வியாபாரி வந்தாராம் .... ஐயா இங்க குரங்கு கிடைக்குமாய்யா.... எத்தனை குரங்கு இருந்தாலும் சொல்லுங்க.... ஒர் குரங்குக்கு ரூ ஐநூறு தர்றேன்னு சொன்னாராம் ..... மனுசன் கொஞ்சம் அப்படியே எட்டிப் பார்த்துட்டு... இல்லப்பான்னு சொல்லி அனுப்பிட்டாராம்/

மற்றொரு வியாபாரி வந்தாராம்.... ஐயா இங்க குரங்கு கிடைக்குமாய்யா.... இருந்தா கொடுங்க.. ஒர் குரங்குக்கு ரூ.ஆயிரம் கொடுக்கிறேன்னு சொன்னாராம்... உடனே அவரை கையோடு கூட்டிட்டுப் போய்.... நாலு குரங்கு பிடிச்சிக் கொடுத்தாராம் அந்த மனுசன்.... உடனே வியாபாரி, நாலு புது ஆயிரம் ரூபா நோட்ட கையில நீட்டினதும்... மனுசன் மனசு அப்படியே குளிர்ந்து போற்று... ஐயா, நாளைக்கும் வருவீங்களா??? கண்டிப்பா, இருக்கிற குறங்க பிடிச்சி வையுங்க .. வந்து வாங்கிக்கிறேன்.

அடுத்த நாளும் வந்தாரு ... ஆயிரம் ரூபா கொடுத்து 10 குரங்க வாங்கிட்டுப் போனார்..

அடுத்த நாள் மற்றொரு வியாபாரி ஆயிரத்து ஐநூறுன்னு சொல்லி குரங்கு வாங்கிட்டுப் போனார்..

அடுத்த நாள் ஊரே சேர்ந்து, காட்டுல இருந்த குரங்கையெல்லாம் பிடிச்சி வைச்சிருந்தாங்க ...

அன்றும் வியாபாரி அனைவரிடமிருந்த குரங்குக்கும் பணம் கொடுத்துட்டு வாங்கிட்டுப் போனார்...
அடுத்த நாள் குரங்கு கிடைக்கல, ஆனால், புது வியாபாரி ஐயாயிரம் ரூபாய் தாறேன் குரங்கு இருந்தா கொடுங்க என்று சொன்னார்...

ஐயாயிரம் ரூபாயா?????

ஆமா, ஐயாயிரம் தர்றேன்.. குரங்கு இருந்தால் பிடிச்சி வையுங்க... நாளைக்கு வர்றேன்னு சொல்லிட்டுப் போயிட்டார்.

இது தெரியாம, நேற்று ஆயிரத்து ஐநூறுக்கு அல்லவா கொடுத்துட்டோம்???? என்று யோசித்த மக்கள், மீண்டும் குரங்கு பிடிக்க ஆயுத்தமாகி, காடு மலை எல்லாம் குரங்கு தேடினாங்க... எங்கும் கிடைக்கல.

என்னடா ஒர் குரங்கு கூட கிடைக்கலையே என்று சோர்ந்து போய் வந்து கொண்டிருக்கும் பொழுது, ஒருவர் ஐந்து குரங்கோடு வந்தார்....

எப்படிய்யா உமருக்கு மட்டும் குரங்கு கிடைச்சது? என்று மற்றவங்க ஆச்சர்யோத்தோடு கேட்டாங்க.

அட போங்கப்பா, பக்கத்து ஊர் பட்டியல்ல... குரங்கு இரண்டாயிரத்துக்கு வித்துக்கிட்டு இருக்காங்க... அங்க தான் இருந்த காசுக்கு ஐந்து குரங்கு வாங்கிக்கிட்டு வர்றேன்...


இரண்டாயிரம் ரூபாயா?

அட, அதான் புது வியாபாரி ஐயாயிரம் தர்றார்ன்னு சொல்லியிருக்கிறார்ல... அப்புறம் என்ன... வாய்யா.. வீட்டுல இருக்கிற காசுக்கு நாலு குரங்கு வாங்கிப்போட்டு, நாலு காசு சம்பாதிக்கலாம்...

இது நாள் வரையிலும் .. 500க்கும்... 1000க்கும்.. 1500க்கும் வாங்கி அடைத்துப் போட்ட, அனைத்து குரங்குகளையும் ரூபாய் 2000-க்கு விற்ற மகிழ்ச்சியோடு... வியாபாரி பட்டணம் போய்ட்டார்.

மக்கள், வியாபாரி வருவாரு... வியாபாரி வருவாரு... என்று காத்திருந்து, மீதம் இருந்த காசுக்கு குரங்குக்கு பழம் வாங்கிப் போட்டே பிச்சைக்காரன் ஆகிட்டாங்க..
என்ன கதை புரிந்ததா??? மேல இவர் என்ன சொல்றார்னு புரியுதா???

கதையிலிருந்து நாம கத்துக்க வேண்டியது தந்திரத்தினை மட்டும் தான்.

இன்று BTC எனப்படும் டிஜிட்டல் கரன்சி பிட்காயின் (Crypto Currency) மார்கெட்டில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. 1 பிட்காயின் மதிப்பு 560 டாலர் அருகில் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்... ஆரம்பத்தில், இப்படி ஒர் வளர்ச்சியினை பிட்காயின் பெறும் என்று யாரும் எதிர்பார்க்கவே இல்லை. அந்தவொரு திடீர் வளர்ச்சியினைப் பெற்றது, பிட்காயின்.


க்ரிப்ட்டோ கரன்சி பற்றிய ஒர் தாக்கத்தினை அனைவரிடத்திலும் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு உருவாக்கப்பட்டதுதான் Stellar - STR. சந்தைக்குள் போதிய STR புழக்கத்தினை கொண்டுவர வேண்டும் என்பதற்காக, இலவசமாக முதலில் 6250 STR கொடுத்தார்கள். கூட்டம் கூடியதும் 3250 ஆக மாற்றியிருக்கிறார்கள்... இது இன்னும் டிமாண்ட் ஆகி குறையலாம். அதற்குள் போதிய STR-களை நீங்கள் கைக் கொள்ள வேண்டும்.

STR பெறுவது என்றுச் சொன்னால், ரொம்ப எளிது .....> launch.stellar.org என்ற தளத்தில் சென்று உங்களது இமெயில் ஐடி கொண்டு ரிஜிஸ்டர் செய்தால் போதும் உடனே 1000 காயிண்ஸ் கணக்கிற்கு வந்துவிடும். அடுத்து, ரெகவர் கீ கொடுத்தால் ஒர் 1000.

மூன்றாவதாக, உங்களது கணக்கிலிருந்து மற்றொருவர் கணக்கிற்கு பாயிண்டினை பரிமாற்றம் செய்தால், அதற்கு ஒர் போனஸ் என மொத்தம் 3250 பாயிண்ட்ஸ் வந்துவிடும்.

முதலில் ஒர் நபர்க்கு உங்களது 1000 பாயிண்ட்சினை அனுப்ப வேண்டும். அந்த ஆயிரம் பாயிண்டிசினை நீங்கள் அனுப்பிவிடுங்கள். எனது Stellar User Name = todaywork.

todaywork என்ற எனது ஸ்டெல்லர் ஐடிக்கு 1000 பாயிண்ட்ஸ் அனுப்பினீர்கள் என்றுச் சொன்னால், உங்களுக்கு 1250 பாயின்ட்ஸ் கிடைக்கும்.

இதனை நீங்கள் வாங்கிவிட்டீர்கள் என்றுச் சொன்னால், அடுத்து அந்தப் பாயிண்டினை... வியாபாரியிடம் கொடுத்து டாலராக வாங்கிக் கொள்ளலாம். எப்பொழுதும் சந்தையில் நாலு வியாபாரிகள் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள், அவரில் யார் அதிக விலைக்கு கேட்கிறாரோ, அவரிடம் பணத்தினை வாங்கிவிட்டு கொடுங்கள்.

ஏன்னா... நான் தெரியாம... ஒருவனிடம் 2100 காயின் கொடுத்து... பின் பதிலே இல்லாமல் காணாமல் போய்ட்டான் ... நான் இன்னும் அவனை விரட்டிக்கிட்டு இருக்கிறேன்...அது வேறக்கத ...

நீங்க, டாலரினை உங்களது பேபால் ஐடிக்கு வாங்கிவிட்டுக் கொடுங்கள்.

என்னைப் பொறுத்தவரைக்கும் முதலில் டாலரினை வாங்குவதில் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. காரணம், படுகை.காம் அட்மின் என்ற ஒர் நம்பிக்கை அடையாளம். ... நீங்கள் புதியவர்கள் என்பதால், அவர்கள் உங்களை எப்படி நம்புறது என்றுக் கேட்பார்கள் ..நீங்கள் அசராதீர்கள்... டாலரினை வாங்கிவிட்டுக் கொடுங்கள்.

ஆரம்பத்தில் ... நானும் எனது முழுத்தொகையையும் 6200 = $0.13- க்குத்தான் கொடுத்தேன். ஆனால், STR சந்தை இருக்குமிடம் தெரிந்து கொண்டப்பின்... நானே பேரம் பேசி அனைத்து காயின்களையும் கையிலிருந்து காலி செய்துவிட்டேன். இப்போதைய விலை 1000 STR = 1 டாலர் என்ற ரேஞ்சில் போய்க் கொண்டிருக்கிறது.


எப்பொழுது மார்க்கெட்டினை அனாதையாக விட்டுவிட்டு வியாபாரிகள் நடையைக் கட்டுவார்கள் என்பது தெரியாது. ஆனால், இந்த ஒர் வாரம் ஓடும் என்று நினைக்கிறேன். அதிலும் வியாபாரிகளில் ஒருவர் இன்றே நான் நடையைக் கட்டுறேன் என்று சொல்லிவிட்டார்... இது தெரியாமல் ... மார்க்கெட்டில் 1 டாலர்க்கு விற்கலாம் என்று 1/2 டாலர்க்கு வாங்கும் குறுவியாபாரிகள் நிறையபேர் மார்க்கெட்டுக்கு வெளியில் சுற்றுவார்கள்.

எப்படியோ, இந்த ஒர் வாரம் நீங்கள் கொஞ்சம் உஷாராக இருந்தால்... நண்பர்கள் தெரிந்தவர்கள் என அனைவரையும் ஸ்டெல்லரில் ஒர் சைன் பண்ணச் சொல்லி, காயினை வாங்கிக் கொள்ளுங்கள்.

வாங்கியக் காயினை நேரடியாக மார்க்கெட்டில் விற்கும் திறமை உள்ளவர்கள் நேரடியாக விற்று இலாபத்தினைப் பாருங்கள்.

மார்க்கெட்டில் விற்க முடியாதவர்கள்... என்னிடம் கொடுத்தால், நான் ஒர் பங்குப் போட்டு, க்ளிக்2எம் வழியாக கொடுத்துவிடுவேன்.

எங்கு விற்பதாக இருந்தாலும், முதலில் ரிஜிஸ்டர் ஆவதாக இருந்தால், முதலில் அனுப்ப வேண்டியிருக்கிற 1000 காயினை எனக்கு அனுப்புங்கள்.. எனது ஐடி todaywork .. உங்களுக்கு அந்தப் பணம் உடனே திரும்ப வந்துவிடும்.


விரைவாக செயல்படுங்கள்...

எப்படிச் செயல்படுவது என்ற விவரத்தினை ஏற்கனவே நீங்கள் செய்து கற்றிருப்பீர்கள் ... தெரியாதவர்கள், ஏற்கனவே பதிவிடப்பட்ட 3 நிமிடப் பணி பதிவினைப் பாருங்கள் பார்க்க >


எப்பொழுதும் படுகையை தொடருங்கள்.... உங்களுக்கான வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்....
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இலவச குரங்குப் பேர வர்த்தகத்தில் பணம் சம்பாதிக்கும் யுக்

Post by ஆதித்தன் » Tue Aug 05, 2014 8:20 pm

புது டிப்ஸ்,

STR value தெரிந்து கொள்ள stellarvalue.org

ஒருவருக்கு ஸ்டெல்லர் வாங்க பணம் கொடுக்கிறோம் என்றால், அவர் சொல்லும் STR அவரது கணக்கில் இருக்கிறதா? என்று பரிசோதனை செய்ய, அவரது யூசர் நேமினை stellar.org/viewer என்ற பக்கத்தில் பரிசோதித்துக் கொள்ளலாம்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”