பக்ஸ் தளங்களை விளம்பரப்படுத்தி வருவாய் பார்ப்பது எப்படி?

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பக்ஸ் தளங்களை விளம்பரப்படுத்தி வருவாய் பார்ப்பது எப்படி?

Post by ஆதித்தன் » Sun Jul 27, 2014 3:16 pm

கட்டண முறை:
1. முதலில் உங்களுக்கான ஒர் வெப் பேஜ் உருவாக்குங்கள்.

2. வெப் பேஜ்ஜில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள பக்ஸ் தளங்களின் விளம்பரங்களை இணையுங்கள்.

3. பிற தளங்களில் உங்களது வெப் பேஜினை விளம்பரப்படுத்துங்கள்.

4. தினம் தினம் உங்களது வெப்பேஜில் புதியதாக வரும் தளத்தினை இணையுங்கள்.

5. தினமும் பக்ஸ் தளங்களில் அனைத்து விளம்பரத்தினையும் க்ளிக் செய்ய தவறாதீர்கள்.

6. பேமண்ட் வாங்கியவுடன் அதன் ஆதாரத்தினை இணைக்க தவிறாதீர்கள்.

7. தினமும் தவறான தளத்தினை நீக்குதல், புதிய தளத்தினை இணைத்தல், நல்ல தளங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்தல் என வெப்பேஜ்ஜில் கண்டிப்பாக செயல்படுதல் வேண்டும்.


வெப் பேஜ் இலவசமாக weebly.com -இல் உருவாக்கிக் கொள்ளலாம். புதியதாக வரும் தளங்களை, searchowner.net என்ற தளத்தினை தினமும் பார்த்து வந்தால், புதியதாக தொடங்கப்பட்டுள்ள தளங்களின் விவரங்களை அறிந்து கொள்ளலாம். நீங்கள் முதல் ஆளாக இணைந்து ரெபர் செய்ய ஆரம்பித்தால், விளம்பரம் செய்யும் தளத்தினைப் பொறுத்து எளிதாக 50 முதல் 1000 டவுன்லைனை பெற்றுக் கொள்ளலாம். நிறைய டவுன்லைன் இருப்பதால் விரைவாக பேமண்ட் வாங்கிவிட முடியும்.

பெரும்பாலும் புதிய தளங்கள் அனைத்தும் ஆரம்பத்தில் சரியாக பேமண்ட் வழங்கும். ஆகையால் பக்ஸ் தளங்கள் என எல்லா தளங்களிலும் சேர்ந்து செயல்படலாம்.

பேமண்ட் வழங்கவில்லை என்று கவலைப்படாமல், நான் வேலை செய்வேன் என்று எல்லா தளங்களிலும் தினமும் சரியாக க்ளிக் செய்து, உங்களது வெப்பேஜ்ஜினை சரியாக புதிய தளங்களை இணைத்து செயல்படுவது என இருந்தால், ஒன்றில் இல்லாவிட்டாலும் ஒன்றில் பேமண்ட் என ஏதேனும் ஒர் தளத்திலிருந்து பேமண்ட் வந்து கொண்டே இருக்கும்.

தங்களது வெப் பேஜினை விளம்பரம் செய்யும் பொழுது, தளத்தினை சரியாக தேர்ந்தெடுங்கள். அதைப்போல், விளம்பரப்படுத்தப்போகும் தளத்தினையும் சரியாக ரெடி செய்து கொள்ளுங்கள்.

பக்ஸ் தளங்கள் அனைத்திலும் இருப்பவர்கள் க்ளிக்கர்கள் தான். அவர்கள், கண்டிப்பாக நீங்கள் சொல்லும் க்ளிக்சென்சிலோ, ப்ரோபக்சிலோ, நியோபக்சிலோ, ப்யூஸ்பக்சிளோ என அனைத்திலும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
ஆகையால், நமது வெப்பேஜ்ஜில் 30 சைட் இருந்தாலும், அவர்களுக்குத் தெரியாது என நினைக்கின்ற தளத்தினை முதன்மையாக வையுங்கள்.

அதுமட்டுமில்லாமல், விளம்பரத்தினை போகஸ் செய்ய சொல்லும் தளம் + அதிக நேரம் கொடுக்கும் தளத்தினை விளம்பரம் செய்ய தேர்ந்தெடுங்கள். விளம்பரத்தினை போகஸ் செய்யச் சொல்லாவிட்டால், க்ளிக்கர்ஸ் அதே நேரத்தில் மற்றொரு தளத்தில் க்ளிக் செய்து கொண்டிருப்பார். அப்படியான தளத்தில் உங்களது விளம்பரம் சரியாகப் போய்ச் சேராது. டைம் குறைவாக இருந்தாலும், உங்கள் விளம்பரத்தின் மீது ஒர் கண் இருந்தாலும், டைம் முடிந்ததும் அடுத்த விளம்பரத்திற்குள் போய்விடுவார், ஆகையால் கொஞ்சம் நேரமும் இருந்தால் தான் தளத்தினை முழுப்பார்வை இடுவார்கள்.


விளம்பரம் என்பது ஒர் நாள் கண்ணில் காண்பிப்பது அல்ல, தினமும் திரும்பத் திரும்ப காட்ட வேண்டும்... எவ்வளவு மாதம் திரும்பத் திரும்பக் காட்டுகிறீர்களோ, அதன் பின்னரே அதன் மீது அவர்கள் பார்வை திரும்பும். ஆகையால், எப்பொழுதும் விளம்பரச் செலவு பட்ஜெட்டினை தயாரிக்கும் பொழுது 6 மாதத்திற்கு என்று திட்டமிடுங்கள்.

பட்ஜெட்டில் வரவு செலவு என்பதனை கணக்கீடு சரியாகச் செய்துவிட்டு களத்தில் குதியுங்கள். இரண்டே மாதத்தில் உங்களது கணக்கிற்கான, ஆரம்பக்கட்ட விடை தெரிந்துவிடும். பின்னர் பட்ஜெட்டில் திருத்தம் செய்து மாற்றம் செய்யுங்கள்.

திட்டத்தில் திருத்தம் என்பது சூழலுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டே இருக்கலாம், ஆனால் வெற்றியடைய வேண்டும் என்ற உறுதிப்பாட்டினில் பின் வாங்காதீர்கள். அவ்வாறான உறுதிப்பாட்டினை கொள்ளுதல் வேண்டும் என்றால், இறங்குவதற்கு முன்பு நிறைய யோசியுங்கள்.

கட்டண முறையில் 100 ... 200...1000 என நிறைய டவுன்லைன் உறுப்பினர்களைப் பெற்று வருவாய் பெற முடியும் என்று சொன்னாலும், இதிலும் கொஞ்சம் அனுபவத்தினை உருவாக்கிக் கொள்வது என்பது மிக முக்கியம். அப்படி அனுபவத்தினைப் பெறுவதற்கு முதலில் இலவச விளம்பரத்தினை களங்களில் செயல்படுத்துங்கள்.

களம் என்பது நமது படுகை போன்ற கம்யூனிட்டி/Forum site தான். கம்யூனிட்டி தளங்கள் விளம்பரத்தினை ஆதரித்தது என்றுச் சொன்னால், அந்தத் தளங்களில் ஒரே பதிவில் உங்களது அனைத்து பக்ஸ் தளங்களின் BBCODE Referral Banner களையும் வரிசைப்படுத்தி அடுக்கி ஒர் பதிவாகச் செய்யுங்கள். பின்னர் தினம் ஒர்முறை, அப்பதிவில் பின்னூட்டமிட்டு அப்டேட் செய்யுங்கள்.

புதிய தளங்களை இணைப்பது, தவறான தளத்தினை நீக்குவது என முதல் பதிவினை அவ்வப் பொழுது ஒழுங்கு படுத்திக் கொள்ளுங்கள்,

உதாரணத்திற்கு என்னுடைய பதிவு ஒன்று >

இதில் உதாரணத்திற்காக வெறும் 8 தளத்தினை மட்டும் இணைத்துள்ளேன், நீங்கள் எத்தனை தளத்தினை வேண்டும் என்றாலும் ஒர் பதிவில் இணைத்து பதிவிடலாம். அதுமட்டுமில்லாமல், தினமும் அதில் ஒர் ரிப்லே போஸ்ட் செய்து கொண்டே வாருங்கள். அப்பொழுதுதான் புதியதாக வரும் நபர்களுக்கு அந்தப் பதிவு போய்ச் சேரும்.

மினிமம் பேஅவுட் என்பதன் அருகில் New Site அல்லது அந்த தளத்திலிருந்து பணத்தினை வாங்கியிருந்தால் Payment Received - 5$ , என நீங்கள் வாங்கியத் தொகையை சேர்த்துக் கொண்டாலும் நன்றாக இருக்கும். பேமண்ட் வாங்கும் பொழுது, அதன் தகவலை அப்பதிவின் ரிப்ளேயில் சொல்ல மறக்காதீர்கள்.

இவ்வாறு நான்கு தளங்களில் ஒர் பதிவினை மெயிண்டெயின் செய்து சென்றாலும் உங்களுக்குக் கீழே 50 நபர்கள் ரெபரலாகக் கிடைப்பார்கள்.

படுகை பொறுத்த வரைக்கும் கோல்டன் மெம்பர்கள் மட்டுமே இவ்வாறு விளம்பரப் பதிவுகளைச் செய்ய முடியும். மற்றவர்கள், விளம்பரத்தினை அனுமதிக்கும் தளங்களிலும் செய்யலாம்.

அவை, click2dm.com [source]htt://www.click2dm.com[/source], emoneyspace.com , Ptctalk.com . homebusiness.padugai.com
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”