பேஸ்புக் ஜாப் - அதிக வருவாய் கொடுக்கக்கூடிய ஜாப்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பேஸ்புக் ஜாப் - அதிக வருவாய் கொடுக்கக்கூடிய ஜாப்

Post by ஆதித்தன் » Fri Mar 27, 2015 12:07 pm

சார், உங்களுக்கு பேஸ்புக் தெரியுமா? கண்டிப்பா தெரியும். அதுவும் 85% ஆன்லைன் நபர்களுக்கு பேஸ்புக் தெரியாது இருக்காது. அந்த 85% நபர்களில் 30% நபர்கள் பேஸ்புக்கே கெதி என்று அங்கேயே இருப்பவர்கள் அல்லது பேஸ்புக் பைத்தியம் என்று கூட சிலரைச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கலாம்.

கூகுளுக்கு பெரும் போட்டியாகத் திகழும் பேஸ்புக் தளம், தன்னகத்தே கொண்டுள்ள பொழுதுபோக்காளர்களை வைத்தே பிசினஸ் செய்ய ஆரம்பித்துவிட்டது என்பதுதான் மிகவும் ஆச்சர்யமான விடயம். அதிலும் பெரும்பான்மையானவர்கள் 16 - 25 வயதுக்குள்ளான இளைஞர்கள். இவர்களை வைத்தும் போட்டியாளர்களை சமாளித்து வெற்றிகரமாக தனது பிசினசினை இயக்கி வருகிறது என்பதுதான் இதன் மிகப் பெரிய சாதனை.

இன்று பலரும் இந்த இளைஞர்களை குறிவைத்தும் தனது மார்கெட்டிங்க் யுக்தியினை செயல்படுத்த ஆரம்பித்துவிட்டனர். அதில் நீங்களும் உங்களது யூக்தியினை எவர் பக்கம் சாய்க்க இருக்கிறீர்கள் என்பதுதான் உங்களது வெற்றியினை நிர்ணயிக்கப் போகிறது.

குறிப்பாக, பேஸ்புக்கில் பெண்களும் நிறைவாக இருக்கிறார்கள்.... அதில், வேலைவாய்ப்பு கிடைத்தால் செய்ய தயாரக இருக்கும் தாய்மார்களும் பேஸ்புக்கில் இருக்கிறார்கள் என்பதுதான் கவனிக்க வேண்டிய விடயம்.

இன்றைய சூழலில் எல்லோரும் உடனே வருவாய் பார்க்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம். அப்படியிருக்கையில், நமக்கான வெப்சைட் தொடங்கி, அதில் பதிவுகளைச் செய்து, கூகுள் மூலமாக வாசகர்களை அடைவது என்பது நீண்டகால சோதனைக்குப் பின் கிடைக்கும் ஒன்று எனும் பொழுது பலர் அதில் விரக்தி அடைந்துவிடுகின்றனர்.

ஏன் நாம் ஒர் புதிய இடத்தில் நீண்ட நாட்களை கூகுள் இண்டக்ஸிற்காக மட்டுமே செலவிட்டுக் கொண்டிருக்க வேண்டும்? ட்ராபிக் உள்ள பழைய இடத்திலேயே அதில் செய்தால் என்ன? அதுவும் நம்மை அனுமதிக்கும் இடங்கள் இருக்கும் பொழுது அதில் வாடகையே கொடுக்காமல் நம் பட்டறையைப் போட்டு தொழிலை செய்தால் என்ன?

அப்படி வாடகை வாங்காமல் நமக்கு தொழில் செய்ய இடத்தினைக் கொடுக்கும் தளத்தில் முக்கிய தளம் தான் பேஸ்புக். பேஸ்புக்கில் நமக்கான ஒர் பேஜ் அல்லது க்ரூப் தொடங்கி அதில் பேஸ்புக் உறுப்பினர்களை இணைத்துக் கொண்டோம் என்று சொன்னால், விரைவாக நாம் தொழிலில் சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம்.

நாம் செய்துவருவது ஆன்லைன் ஜாப். இதனைப் பற்றி, நமது பேஸ்புக் வாலில் சொல்கிறோம். ஆனால், இது அத்தனை பேஸ்புக் நபர்களுக்கும் செல்லுமா? என்றால் இல்லை. நமது நண்பர்களுக்கு மட்டுமே போய் சேரும். ஆகையால், பேஸ்புக்கில் சும்மா இருக்கும் பொழுது நிறைவான நண்பர்களைச் சேகரித்துக் கொள்ளுங்கள். நண்பர்களைச் சேகரிக்க, Find Friends என்ற தேடு பொறியினை உபயோகம் செய்யாதீர்கள். அதில் கிடைக்கும் பலர் அக்டிவ் நிலையில் இருக்கமாட்டார்கள்.

நமது தொழிலுக்குத் தேவை அக்டிவான உறுப்பினர்கள். ஆகையால், பிற நண்பர்கள் பதிவில் நீங்களும் உங்களது கமெண்ட் பதிவு செய்யுங்கள். அந்த பதிவில் கமெண்ட் செய்யும் நபர்களை உங்களது நண்பர்களாக சேர்த்துக் கொள்ளுங்கல். இப்படி தினம் ஒன்று இரண்டு என நண்பர்களை ஒர் பக்கம் சேர்த்துக் கொண்டே செல்லுங்கள். ஒர் பக்கம் கிடைக்கும் ஆன்லைன் வருவாயினை தங்களது பேஸ்புக் வாலில் பதிவிடுங்கள். பதிவில் ரெபரல் லிங்கினைக் கொடுக்க மறந்துவிடாதீர்கள்.


இப்படி நண்பர்களைச் சேர்த்து மார்கெட்டிங்க் செய்வது ஒர் வழி என்று சொன்னால், அதனை விட சிறப்பான மார்கெட்டிங்க் யுக்தி, பேஜ் உருவாக்கி செய்வதுதான். நண்பர்களைச் சேர்ப்பது எளிதுதான் என்று சொன்னாலும் பேஜ்க்கு லைக் சேர்ப்பது என்பது அதனைக் காட்டிலும் கொஞ்சம் கஷ்டம். ஆனால், பேஜ் வழியாகச் செய்யும் பொழுது, மேலும் விருப்பமான நபர்கள் கிடைப்பதால், பிசினசும் கொஞ்சம் சுலபாமக செல்லும்.

ஆன்லைன் ஜாப் செய்யும் ஒவ்வொருவரும் பேஸ்புக்கில் ஒர் பேஜ் வைத்துக் கொள்ளுங்கள். தினமும் தங்களது ஆன்லைன் ஜாப் செய்திகளைப் பதிவிடுங்கள். இதன் மூலம் நேரடியாக வாசகர்களை உடனே பெற முடியும். விரைவான ரிசல்ட்டினையும் பார்க்க முடியும்.


[youtube]https://www.youtube.com/watch?v=JtZS4u66mu0[/youtube]


Last bumped by ஆதித்தன் on Fri Mar 27, 2015 12:07 pm.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”