டிஜிட்டல் மார்கெட்டிங் ஆன்லைன் ஹோம் பிசினஸ்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

டிஜிட்டல் மார்கெட்டிங் ஆன்லைன் ஹோம் பிசினஸ்

Post by ஆதித்தன் » Tue Jul 08, 2014 8:59 am

டிஜிட்டல் மார்கெட்டிங் ஆன்லைன் ஹோம் பிசினஸ்


Digital Marketing என்ற வார்த்தை மிகவும் பிரபலமாக உலா வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நாமும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும் என்பது இன்றைய அனைத்து பிசினஸ்மேன்களின் விருப்பம். இன்று பெரும்பான்மையான பிசினஸ் நிறுவனங்கள் ஆன்லைன் மார்க்கெட்டிங்க் உலகத்திற்குள் வந்துவிட்டன என்பது உங்களுக்குத் தெரியாதது இல்லை.

ஒன்று நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், டிஜிட்டல் மார்க்கெட்டிங்க் என்பது விளம்பரம் தான். ஆன்லைன் விளம்பரம் தான் டிஜிட்டல் மார்க்கெட்டிங்க். இந்த விளம்பர உலகம் தான் இன்று அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளது. அதுமட்டுமில்லாது, இதற்காக சரியாக செலவிட்ட யவரும் தோல்வியடையமாட்டார்கள் என்பது கூடுதல் சிறப்புத்தன்மையைக் கொண்டுள்ளது, டிஜிட்டல் மார்க்கெட்டிங்க்.

கார்புக்கிங்க், ஆட்டோ புக்கிங்க், மளிகைக்கடை, ஜவுளிக்கடை, மொபைல் ஸ்டோர், ஹோட்டல் புக்கிங்க், பஸ் புக்கிங்க், ட்ரெயின் புக்கிங்க், செய்தித்தளங்கள், ஆட்டோ மொபைல் ஸ்டோர்ஸ், பேங்கிங்க், பைனான்ஸ் நிறுவனம் என எந்தவொரு ஆப்லைன் பிசினஸ் எடுத்துக் கொண்டாலும், அதற்கான வெப்சைட் இல்லாது இல்லை என்ற நிலையினை நாம் பார்த்து வருகிறோம். ஆக, டிஜிட்டல் மார்க்கெடிங்க் உலகிற்குள் இறங்க வேண்டும் என்றால், முதலில் அமைத்துக் கொடுப்பது, நமக்கான ப்ராடக்ட்டுக்கு தகுந்த வெப்சைட். வெப்சைட்டினை முன்னிலைப் படுத்தித்தான் டிஜிட்டல் மார்க்கெட்டிங்க் ஸ்டார்ட் ஆகிறது, அது கடைநிலை பயனர் வரை சென்றடையும் அளவிற்கு விரிவுப்படுத்தப்படுகிறது.

சரி, கணிணி என்ற ஒரே ஊருக்குள் அனைவரும் தனக்கான வெப்சைட்டினை தொடங்கி பிசினஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இதன் மூலம் போட்டிகள் அதிகம் ஆரம்பித்துவிட்டதோடு, மக்களுக்கு விலையும் குறைச்சலாகக் கிடைக்கிறது என்பது ஒர் மகிழ்ச்சி. குறிப்பாகச் சொல்லப்போனால், எந்தவொரு மொபைல் போன் விலையையும் அருகில் இருக்கும் பெரிய ஷோரூமில் விலையைக் கேட்டுவிட்டு, ஆன்லைனில் விலை பரிசோதித்துப் பார்த்தால், கண்டிப்பாக ரூ.1000 குறைவாகத்தான் இருக்கும். அதுவும், ஒரே இடத்தில் பூர்விகா, சங்கீதா, யூனிவர்சல், டெக்னோ பார்க், ஸ்னாப் டீல், அமேஷான், இபே என பல கடைகளில் உள்ள விலைகளையும் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு, மவுசினைக் கொண்டு க்ளிக் பண்ணி க்ளிக் பண்ணியே தெரிந்து கொள்வதோடு, நமக்கான பெஸ்ட் ப்ரைசினை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடிகிறது. இப்படி எந்தப் பொருளை எடுத்துக் கொண்டாலும், நமக்கான பெஸ்ட் ப்ரைசினை ஆன்லைன் மூலம் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடிகிறது.

ஒகே... நம்ம இங்கப் பார்க்கப் போறது, நாமுலும் எப்படி அவங்களைப் போன்று பிசினஸ் செய்து சம்பாதிப்பது எப்படி என்பதனைப் பற்றித்தானே தவிர, அவங்களுக்கு நாம் ஒர் கஷ்டமராக சேர வேண்டும் என்பது பற்றி பேச வரவில்லை. ஆனாலும், அதற்கு முன்னாடி ஒர் சிறிய விவரத்தினை மட்டும் அவர்களிடமிருந்து நாம் எடுத்துக் கொள்வோம். அது என்னவெனில், தினம் தினம் புதிது புதிதாக ஒர் வெப்சைட் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதனைப் பற்றி எல்லாம் நமக்குத் தெரியாது, நாம் நமக்குத் தேவையானதினை கூகுளில் தேடுகிறோம், கிடைக்கும் ரிசல்ட் மூலம் அந்தந்த தளங்களைச் சென்று பார்வையிடுகிறோம், நம்பக்கமானதாக இருக்கும் பற்றத்தில் அடுத்தடுத்த செயல்பாட்டுக்குள் இறங்குகிறோம்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங்க் என்று சொன்னால் அங்கே முதலிடம் பிடிப்பது, கூகுள் அட்வர்ட்ஸ் தான். கூகுளில் விளம்பரம் கொடுத்தால் ஈசியா ஆன்லைன் மக்களிடம் ரீச் ஆகிவிடலாம் என்பதுதான் அனைத்து டிஜிட்டல் மார்க்கெட்டிங்க் கோர்சிலும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், அந்தந்த ரீஜியனில் உள்ள பிரபல இணையதளங்களிலும் விளம்பரம் கொடுக்க வேண்டும் என்பதுதான் டிஜிட்டல் மார்க்கெட்டிங்க் யூக்திகளில் ஒன்று. தற்பொழுது இவர்களுக்குப் போட்டியாக பேஸ்புக்கும் தனக்கென ஒர் இடத்தினை ஆகிரமித்து வைத்திருக்கிறது.

காலையில் பேஸ்புக் வால் பேஜில் கண்டிப்பாக இரண்டு விளம்பரப் பதிவு இருக்கும். அதனைப்போல், கூகுளில் எந்தவொரு வாங்கக்கூடியப் பொருளைத் தேடினாலும், அதற்கான விளம்பரத்தினை பலர் கொடுத்திருப்பதனைப் பார்த்திருக்கலாம். உதாரணத்திற்கு ஒர் மொபைல் போன் பற்றித் தேடினாலும் சரி, வெப் கோஸ்ட்டிங்க் பற்றித் தேடினாலும் சரி, அதனைப் பற்றிய விளம்பரங்களை நாம் பார்க்க முடியும். சிம்பிளா சொன்னா, தன் பொருளை விற்பனை செய்வதற்காக கூகுளில் விளம்பரம் கொடுக்கிறார்கள், அவ்ளதான்.


ஆன்லைனில் வெப்சைட் வைத்தும் நமது சிறிய தொழிலை தொடங்கலாம், அல்லது அப்ளிகேட் லிங்கினைக் கொண்டும் நமது தொழிலைத் தொடங்கலாம். இதனைப் பற்றி ஏற்கனவே நாம் அப்ளிகேட் மார்க்கெட்டிங்க் என்ற பயிற்சிப் பணியில் பார்த்திருக்கலாம். அதனைத்தான் இங்கு கொஞ்சம் மாறுதலான பெயருடன் டிஜிட்டல் மார்க்கெட்டிங்க் என்றப் பெயரில் சொல்கிறோம். இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங்கினை ஒர் தொழிலாக பாவித்தோம் என்று சொன்னால், ஒர் சிறிய முதலீடும், சரியான திட்டமிடுதலும் மட்டும் போதும், உழைப்பினை பிறரிடம் இருந்து வாங்கிக் கொள்ளலாம்.

உழைப்பு இல்லை என்பதால், அதிக நேரம் கணிணி முன் உட்கார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பது இப்பணியின் சிறப்பு. அதாவது நீங்களும் ஒர் பிசினஸ் ஓனர்னு நினைச்சிக்கோங்க ... பணியாளர்கள் பணியினைச் செய்யப் போகிறார்கள், நீங்கள் அவர்களை நிர்வாகம் செய்யப் போகிறீர்கள். இங்கு பணியாளர்கள் என்பவர்கள், கூகுள், பேஸ்புக், ரிஜியன் சைட், மற்றும் விளம்பரத்திற்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிற தளங்கள்.


கூகுளுக்கு நீங்க கொடுக்கிற பணத்திற்குத் தகுந்தவாறு, நமக்கு வேலையை காண்டரக்ட் பேசில் செய்து கொடுத்துவிடும். நாம் அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும் என்பதுதான் இங்கே மிக முக்கியம், கொஞ்சம் பொருள் தேரிவில் தவறு செய்தாலும் ஏமாற்றத்தினை காண நேரிடலாம்.

ஒகே... உங்களுக்கே தெரியும்... கூகுள் என்பது மிகப் பெரிய தளம். அங்கு நிறையபேர் ஏற்கனவே தன் விளம்பரத்தினை ஆக்கிரமித்துள்ளனர். அப்படியிருக்கையில், ஒருவர் கையில் வைத்திருக்கும் இடத்தினை நாம் கேட்கப் போகும் பொழுது தானாகவே அவ்விடத்திற்கான விலை ஏற்றமடைந்துவிடும் என்பது நமக்குத் தெரியாதது இல்லை. இப்படியாக கூகுளில் விளம்பரம் செய்வது என்பதும் கொஞ்சம் விலை அதிகம் தான். இந்த விலை அதிகத்தினை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, Business with Facebook என்ற வாசகத்துடன், கூகுள் தனக்கான ஒர் மார்க்கெட்டிங்க் வர்த்தகத்தில் இடத்தினைப் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. கூகுளுடன் ஒப்பிடும் பொழுது, பேஸ்புக் விளம்பரம் விலை குறைவு என்று சொன்னாலும் கன்வர்சன் ரேட் என்பது கூகுளைக் காட்டிலும் குறைவாகவே இருக்கும் என்பதும் எல்லோரும் கருதும் ஒன்றுதான். ஏனெனில், பேஸ்புக் விளம்பரம் என்பது தொலைக்காட்சிப் பெட்டியில் விளம்பரம் பார்ப்பது போல... சேனலை மாற்றிக் கொண்டு போய்டுவோம். கூகுள் விளம்பரம் என்பது நாம் தேடிப் பெறுவது, ஆகையால் நாமே க்ளிக் செய்து உள்ளே செல்வோம். மேலும் பல தளங்கள், Bidvertiser, Yahoo, Chitika, Websites என பல பல தளங்கள், விளம்பர வர்த்தகத்தில் இருந்தாலும், நாம் நமக்கு நன்றாகத் தெரிந்த கூகுள் & பேஸ்புக் பற்றி மட்டுமே பார்த்தோம். இனி இவர்களையும் தாண்டி, நமக்கான ஒர் சிறிய சந்தையை உருவாக்கி டிஜிட்டல் மார்க்கெட்டிங்க் சந்தையினை உருவாக்கத்தினை நாம் உருவாக்கியிருக்கிறோம் என்பதனை காண இருக்கிறோம்.


ஆம், படுகை உருவாக்கியிருக்கும் புதிய டிஜிட்டல் மார்க்கெட்டிங்க் சந்தை தான், க்ளிக் டூ மணி. இங்கே நாம் கையில் எடுப்பது டிஜிட்டல் ப்ராடக்ட். அதென்ன, டிஜிட்டல் ப்ராடக்ட்? இதனால் என்ன பயன்??? இப்படி ஒர் கேள்வியினைக் கேட்டீங்க என்று சொன்னால், இன்று நாம் பயன்படுத்தும் நிறையப் பொருட்களினால் எந்தவொரு பயனும் கிடையாது. ஆனால், அதனால் நிறைய வேலை வாய்ப்புகள் உருவாகியிருக்கிறது, அது மட்டுமே நன்மை.

உதாரணத்திற்கு சொல்லப் போனால், பெப்சி ... ஏ தில் மாங்கே மோர்னு சச்சின் கூட விளம்பரத்திற்கு வந்து சொல்லிட்டுப் போவாங்களே, அதே பெப்சி தான். பெப்சி ரேட் ரூ.10. பத்து ரூபாய்க்கு வாங்கிக் குடிக்கிற, அந்த பெப்சியோட நிஜ விலை என்ன தெரியுமா?? வெறும் ஒர் ரூபாய்க்குள் மட்டுமே அடங்கும்.... தண்ணீர்க்கு என்னைய்யா விலை... அதுல கொஞ்சம் எசன்ஸ் போட்டிருக்கிறாங்க.... பல லீட்டர்க் கணக்கில் தண்ணீரை எடுத்து, அதற்குள் எசன்ஸ் போட்டு பாட்டில் அடைத்து கூலிங்கா 10ரூபாய்க்கு விற்பனை செய்றாங்க.

70 பைசாவுக்கு தகுதியில்லாத பெப்ஸிக்கு ரூ.10 கொடுத்து குடிக்கிறோம்னா, மீதம் இருக்கிற ரூ.9.30 காசு யாருக்கு போய் சேருது... கம்பெனியில் வேலை செய்கிற கூலியாட்களுக்கும்... அதனை எடுத்து வியாபரம் செய்கிற ஏஜண்ட், வியாபாரி, மேலும் பெப்சி கம்பெனி நிர்வாகத்திற்கும் தான். எந்தவொரு நன்மையும் இல்லாத இந்த பொருளின் நிர்வாகத்தினை தலைமையாக இருக்கும் நமது இந்தியப் பெண்மணி இந்திரா நூயிக்கு சம்பளம் என்னென்னா கோடிக் கணக்கில்.

இதனையே இன்னும் பொதுநலத்தோட சொல்லணும் என்று சொன்னால், ஒர் விவசாயி பல நாட்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிக் கொடுக்கும் இளநீரைக்கூட ஒர் ரூ.5 -க்கு விலை நிர்ணயம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறான். அதுவும் மிகவும் உடலுக்கு பயனான பொருளை வைத்துக் கொண்டு.... இதற்கெல்லாம் காரணம் விளம்பரம்.

பல கோடிக் கணக்கில் விளம்பரத்தினைச் செய்து, உங்களுக்கு பெப்சியினை கொடுக்கிறாங்க.... அந்த பல கோடிக்கு எல்லாம் சேர்த்துதான் நீங்க வாங்கும் பொழுது பணத்தினை வாங்குகிறார்கள். இதனைப்போல் என்னொரு விளம்பரத்தினைச் சொல்வது என்றால், பேர் & லவ்லி. நம்ம பொண்ணுங்க எல்லாம் ரொம்ப அழகு என்பது நன்றாகவேத் தெரியும். ஆனாலும் நீ நல்லா இல்ல, இந்த க்ரீம் போட்டா அழகாயிடுவ என்ற ஒர் மாயையினை உருவாக்கும் இந்த விளம்பர ஜாலத்தினை எங்கே போய் சொல்வது???? அதுவும் இந்த விளம்பரத்தினை கருப்பா இருக்கிற ஆப்ரிக்காவில் செய்வானா??? இல்லை. இதைப்போல் நிறைய ஆயில்ஸ்....

இப்படி நிறைய ப்ராடக்ட் ஏன் பயன்படுத்துகிறோம் என்று தெரியாமலே பயன்படுத்துவிட்டு, தூரப்போடுகிறோம். அப்படியெல்லாம் பார்க்கும் பொழுது டிஜிட்டல் ப்ராடக்ட் என்பதனை மட்டும் நாம் ஏதோ வெற்று கண்துடைப்பு என்று சொல்வது தவறு. இதனாலும் நிறைவான வேலைவாய்ப்பு உருவாகியிருக்கிறது என்பதுதான் உண்மை. டிஜிட்டல் ப்ராடக்ட் மூலம் மாதம் இலட்சக் கணக்கில் சம்பாதிப்பவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்.

நாமளும் டிஜிட்டல் ப்ராடக்ட் ஒன்றினை வாங்கி விற்பனை செய்ய ஆரம்பித்தோம் என்று சொன்னால் கை நிறைய சம்பாதிக்கலாம். அதற்கான சரியான விற்பனை யூக்தி நாம் கையாள வேண்டும் என்பதுதான் மிக முக்கியம். அப்படி கையாளுவதற்கான யூக்திகளையும் தன்னகத்தே கொண்டு செயல்படுவதுதான் நமது Click2m.com. இத்தளத்தில் நான் ப்ராடக்ட் என்று சொல்வது உங்களது மெம்பர்சிப்பினைத்தான். நீங்கள் ஒர் ஸ்டார் மெம்பராக மாறிக் கொண்டீர்கள் என்று சொன்னால், வீட்டிலிருந்தப்படியே தினம் 2 மணி நேரம் சரியாக வேலையினைச் செய்து, மாதம் ரூ. 30000 க்கும் மேல் சம்பாதிக்க முடியும்.

வாருங்கள்... பரந்திருக்கும் டிஜிட்டல் சகாப்த உலகத்திற்குள், ஒர் மூலையிலிருந்து புறப்பட்டுச் செல்லும் நாமும் வென்றெடுப்போம்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: டிஜிட்டல் மார்கெட்டிங் ஆன்லைன் ஹோம் பிசினஸ்

Post by கிருஷ்ணன் » Tue Jul 08, 2014 10:38 am

அதென்ன, டிஜிட்டல் ப்ராடக்ட்? இதனால் என்ன பயன்??? இப்படி ஒர் கேள்வியினைக் கேட்டீங்க என்று சொன்னால், இன்று நாம் பயன்படுத்தும் நிறையப் பொருட்களினால் எந்தவொரு பயனும் கிடையாது. ஆனால், அதனால் நிறைய வேலை வாய்ப்புகள் உருவாகியிருக்கிறது, அது மட்டுமே நன்மை.

உதாரணத்திற்கு சொல்லப் போனால், பெப்சி ... ஏ தில் மாங்கே மோர்னு சச்சின் கூட விளம்பரத்திற்கு வந்து சொல்லிட்டுப் போவாங்களே, அதே பெப்சி தான். பெப்சி ரேட் ரூ.10. பத்து ரூபாய்க்கு வாங்கிக் குடிக்கிற, அந்த பெப்சியோட நிஜ விலை என்ன தெரியுமா?? வெறும் ஒர் ரூபாய்க்குள் மட்டுமே அடங்கும்.... தண்ணீர்க்கு என்னைய்யா விலை... அதுல கொஞ்சம் எசன்ஸ் போட்டிருக்கிறாங்க.... பல லீட்டர்க் கணக்கில் தண்ணீரை எடுத்து, அதற்குள் எசன்ஸ் போட்டு பாட்டில் அடைத்து கூலிங்கா 10ரூபாய்க்கு விற்பனை செய்றாங்க.

70 பைசாவுக்கு தகுதியில்லாத பெப்ஸிக்கு ரூ.10 கொடுத்து குடிக்கிறோம்னா, மீதம் இருக்கிற ரூ.9.30 காசு யாருக்கு போய் சேருது... கம்பெனியில் வேலை செய்கிற கூலியாட்களுக்கும்... அதனை எடுத்து வியாபரம் செய்கிற ஏஜண்ட், வியாபாரி, மேலும் பெப்சி கம்பெனி நிர்வாகத்திற்கும் தான். எந்தவொரு நன்மையும் இல்லாத இந்த பொருளின் நிர்வாகத்தினை தலைமையாக இருக்கும் நமது இந்தியப் பெண்மணி இந்திரா நூயிக்கு சம்பளம் என்னென்னா கோடிக் கணக்கில்.

இதனையே இன்னும் பொதுநலத்தோட சொல்லணும் என்று சொன்னால், ஒர் விவசாயி பல நாட்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிக் கொடுக்கும் இளநீரைக்கூட ஒர் ரூ.5 -க்கு விலை நிர்ணயம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறான். அதுவும் மிகவும் உடலுக்கு பயனான பொருளை வைத்துக் கொண்டு.... இதற்கெல்லாம் காரணம் விளம்பரம்.
அருமையான விளக்கங்கள்,விளம்பர மார்க்கெட்டிங்கின் அருமையினை அழகாக எடுத்துச் சொல்லியுள்ளீர்கள்.தொடரட்டும் உங்கள் பணி... :ros: :ros: :ros:
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”