Rental Referral - மூலம் எப்படி அதிகம் வருவாய் பார்ப்பது?

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Rental Referral - மூலம் எப்படி அதிகம் வருவாய் பார்ப்பது?

Post by ஆதித்தன் » Mon Jun 16, 2014 11:32 am

Image
Rental Referral - மூலம் எப்படி அதிகம் வருவாய் பார்ப்பது?

PTC - என்ற ஆன்லைன் ஜாப் உலகத்திற்குள் நுழைந்துவிட்டீர்கள் என்று சொன்னால், ரெண்டல் ரெபரல் என்ற வார்த்தை தெரியாமல் உங்களுக்கு இருக்காது. ஆனால், எப்படி ரெண்டல் ரெபரல் மூலம் சம்பாதிப்பது என்பது பலருக்குத் தெரியாது. இன்று நாம் ரெண்டல் ரெபரல்கள் மூலம் எப்படி அதிகம் பணம் சம்பாதிப்பது என்பதனைப் பற்றிய ஒர் பார்வையினை முழுமையாகப் பார்க்கலாம்.


PTC Strategy: என்றத் தலைப்பில் ஒவ்வொரு பிடிசி தளத்தின் மூலமும் எவ்வாறு மாதம் 500 டாலர்க்கும் மேல் சம்பாதிக்கலாம் என்ற வியூக முறைகள் ஆன்லைனில் கிடைக்கலாம். அதில் மிக முக்கிய அடிப்படையாகக் கொள்வது ரெண்டல் ரெபரல் & அப்கிரேடிங்க்.


ரெண்டல் ரெபரல் என்பது மிகவும் எளிதான ஒன்று என்பதால் பலரும் அதில் முயற்சியினை எளிதாக மேற்கொள்கிறார்கள் என்பதோடு, வெற்றியினையும் அடைவார்கள், ஆனால் நிரந்தரமல்ல. ஏன் நிரந்தரமல்ல???


ரெண்டல் ரெபரல் என்பது, முன்பையக் காலக்கட்டத்தில் அப்லைன் இல்லாத நிஜ உறுப்பினர்கள் என்று இருந்தது. ஆனால் இன்றைய சூழல் அப்படியல்ல. ரெண்டல் ரெபரல் ரோபட் சிஸ்டத்தினை உருவாக்கிவிட்டார்கள். இங்கு அட்மின் வழங்கும் இலாபம்/நட்டம் தான் நமக்கு கிடைக்கிறதே தவிர, ரெண்டல் ரெபரல்கள் செய்யும் க்ளிக்குகள் அல்ல.


Rental Referral Management Strategy: என்றுச் சொல்லப் போனால், ரீசைக்கிளிங்க் மிக முக்கியம் எனக் கருதப்பட்டது. ஆனால், இன்றைய சூழலில் ரீசைக்கிளிங்க் என்பது நமது காசினை அவர்களுக்கு கூடுதலாகக் கொடுப்பதற்குச் சமம். அதாவது நமக்கு இழப்பே தவிர, அதனால் எந்தவொரு பலனும் கிடையாது.

ரெண்டல் ரெபரல் ரோபட் சிஸ்டம் என்பது, எவ்வளவு ஆவ்ரேஜ் க்ளிக் கொடுக்க வேண்டும், எவ்வளவு மினிமம் க்ளிக் & மேக்சிமம் க்ளிக் என்று செட் செய்யப்படுகிறது. ஆகையால், மொத்த ரெபரல் எண்ணிக்கையின் மூலம் எவ்வளவு ஆவ்ரேஜ் அவுட்புட் கொடுக்கப்பட வேண்டும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறதோ, அதற்கும் மேல் உங்களுக்குக் கிடைக்கப் போவதில்லை.

க்ளிக்செய்யாதவர்களை, ரீசைக்கிள் செய்வதன் மூலம் அக்டிவ் நபர்களை பெற்றுவிடலாம் என நீங்கள் கருதினால், இவர் அக்டிவ் ஆகும் பொழுது மற்றொருவர் இன்அக்டிவ் நிலைக்கு போய்விடுவார். அதாவது, நிர்ணயிக்கப்பட்ட ஆவ்ரேஜ்க்கு மேல் உங்களுக்கு கிடைக்கப் போவதில்லை. ஆகையால், ரெண்டல் ரெபரல் சிஸ்டத்தில் நீங்கள் ரீசைக்கிளிங்க் செய்யாதீர்கள்.

30 நாட்கள் முடிவுற்றதும் காலாவதி(Expiry) ஆகிவிடுவார்களே என்ற நிலையில், அவர்கள் கிளிக் செய்திருந்தாலும் செய்யாவிட்டாலும், அடுத்த 30 நாட்களுக்கு தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம், காலாவதி ஆவதனால் டெபிட் ஆகும் 2 செண்ட் மிச்சமாகும்.

க்ளிக் செய்யாத நபரையும் ஏன் நாம் ரினியூவல் செய்ய வேண்டும் என்று கேட்கலாம், இவரை விட்டுவிட்டு மற்றொரு நபரை நாம் வாடகைக்கு எடுத்தாலும், ஆவ்ரேஜ் செட்டப்படி அது அல்லது மற்றொரு போட் இன்அக்டிவாக அமைந்துவிடும். எப்படினாலும், அப்படித்தான் அமையப் போகிறது என்ற சூழலில் நாம் ஏன் வீணாக 2 செண்டினை இழக்க வேண்டும்.

ஆகையால், ரெண்டல் ரெபரல் சிஸ்டத்தினைப் பொறுத்த வரைக்கும் ரீசைக்கிளிங்க் செய்யக் கூடாது, காலாவதி ஆகவும் விடக்கூடாது. ரீசைக்கிளிங்க் என்பது நீங்கள் செய்யாவிட்டாலும் சிஸ்டம் 15 நாட்களாகியும் தொடர்ந்து இன்அக்டிவ் நிலையில் இருப்பதனைத் தூக்கிவிட்டு, மாற்று ரெபரலை உங்களுக்கு கொடுக்கும், அதுவும் இலவசமாக. அப்படியிருக்கையில், ரீசைக்கிளிங்க் என்று வீணாக 7 செண்ட் செலவிட வேண்டிய அவசியமில்லை. இதனால், ஒர் ரெண்டல் ரெபரலின் தொகை 27 செண்டாக மாறி, நமது இலாப வருவாய் குறைகிறதே தவிர, அதிகப்படுத்தும் என்பது கிடையாது.


ஆட்டோ ரினியூவல் என்ற முறைப்படி அனைவரையும் அப்படியே தக்கவைத்துக் கொள்வதுதான் நமக்கான அதிக வருவாய் உறுதியினைக் கொடுக்கும்.


அதுமட்டுமில்லாமல், கிளிக் ஆவ்ரேஜ் செட்டப் செய்யப்படும் பொழுதே, இலவச உறுப்பினர் என்றால், சில்வர் மெம்பர் என்றால், கோல்டு மெம்பர் என்றால்... என அவர் அவர்களுக்கான க்ளிக் வேல்யூக்கு தகுந்தவாறு, அதிகப்படும் பொழுது க்ளிக் எண்ணிக்கையினை குறைத்து செட்டப் செய்யப்படுகிறது.

ஆகையால் தான், இலவச மெம்பராக இருக்கும் பொழுது 1.5+ ஆவ்ரேஜ் பெற்ற, அதே ரெண்டல் ரெபரல்களை வைத்துக் கொண்டு அப்கிரேடு செய்தாலும், புதிய மெம்பர்சிப்படி க்ளிக் மதிப்பு அதிகரிப்பதால், இங்கே க்ளிக்கின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு ஆவ்ரேஜ் 0.8+ என மாற்றமாகிவிடுகிறது. இவை அனைத்தும் தானாகவே செயல்பட நிர்ணயிக்கப்பட்ட ரெண்டல் ரெபரல் ரோபட் சிஸ்டம் மூலம் நடைபெறுகிறது.


இன்று ரெபரல் சிஸ்டத்தில் நல்ல வருவாயினைக் கொடுத்துக் கொண்டிருக்கும் அனைத்து தளங்களுமே, ரோபட் சிஸ்டத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆகையால், அவர்களை நம்பி உங்களால் நீண்ட காலம் காலத்தினை ஓட்டுதல் என்பது முடியாத காரியம். அதாவது போன்சி திட்டம் (Ponzi Scheme) என்று சொல்வார்கள் அல்லவா? அதைப்போல் தான், உங்களுக்கு ஒர் இலாபத்தினை அப்கிரேடிங்க் திட்டத்தின் மூலம் கண்ணில் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.


உண்மையான தொழில் திட்டம் என்றுப் பார்க்கப் போனால், விளம்பரதார்களிடமிருந்து பெறும் வருவாய்க்கும், அதிலிருந்து உறுப்பினர்களுக்கு கொடுக்கும் ஊதியத்திற்கும் கிடைக்கும் இடைவெளி இலாபத்தில் பெரிதாக ஒன்றும் உங்களுக்கு இலாபத்தினைக் கொடுத்தல் என்பது முடியாத காரியம்.

இன்று நிலையான நான்கைந்து தளங்கள், தங்களுக்கென விளம்பரதார்களைப் பெற்றுவிட்டார்கள். அந்த வகையில், க்ளிக்சென்ஸ் தளம் மிகவும் நம்பிக்கைகூறிய நிலையான தளம். மற்ற சில தளங்கள், வருவாயினைப் பெற்றாலும், வாக்குறுதிகளைப் பார்க்கும் பொழுது கேள்விகளை எழுப்பும் ஒன்றுதான்.

ரிஸ்க் அதிகரிப்பு என்பது கொடுக்கப்படும் வாக்குறுதியினைப் பொறுத்துத்தான் என்பது நமக்கு நன்றாகவேத் தெரியும். அந்த வகையில் புதிய தளங்கள் அனைத்தும், தவறுதலாக உறுப்பினர்களுக்கு அதிகப்படியான வாக்குறுதிகளைக் கொடுத்து சிக்கலில் மாட்டிக் கொள்கின்றன, அல்லது விரைவில் மூடப்படுகின்றன.

விவரமாகச் சொல்லப் போனால், புதியதாக தொடங்கப்படும் தளங்களுக்கு அட்வர்டைசர்கள் தங்களது விளம்பரத்தினைக் கொடுக்க தயாராக இருப்பதில்லை. தள உரிமையாளர்களே, அளவுக்கு அதிகமான வருவாய் விளம்பரத்தினை காட்ட வேண்டும் என்று நிறைவான விளம்பரத்தினைக் கொடுக்கிறார்கள், அதுமட்டுமில்லாமல் உறுப்பினர்களைச் சேர்க்கும் விதமாக, பிடிசி உலகில் வெறும் க்ளிக்கினை மட்டும் செய்யும் நபர்களை தன்னகத்தே கவர்ந்திழுக்க விளம்பரத்திற்கும் செலவிடுகின்றன. இதன் விளைவு, அங்கே ஆரம்பக் காலத்தில் வலுக்கட்டாயமாக தங்களுக்கான நஷ்டத்தினை உருவாக்கிக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை. இதிலிருந்து தப்பித்து வருவது ஒர்சில தளங்கள் என்று சொல்வதற்குக்கூட இல்லை என்ற வீதத்தில், பெரும்பான்மையான தளங்கள், கடைசிக்கட்டத்தில் சேர்ந்திருக்கும், பணத்தினையும், கொடுக்கப்பட வேண்டிய பணத்தினையும் சரிகட்டினால் நஷ்டம் வரக்கூடிய சூழலிருக்கும் பொழுது, அந்த நேரத்தில் சேர்ந்திருக்கும் பெரும் தொகையினை கைப்பற்றிக் கொண்டு, உறுப்பினர்களுக்கு நாமத்தினைச் சாத்திவிட்டு மூடிவிடுகின்றன.


இப்படி ஒர் பக்கம் ஏமாற்றுகள் நிறைந்திருக்கும் உலகில், ரெண்டல் ரெபரல்களை வாங்குவது என்பதே நமது உழைப்பற்ற முதலீடு ரிஸ்க்கில் தான் இருக்கிறது. அதிலும் தவறுகளைச் செய்து இலாபத்தினை ஏன் நீங்கள் குறைப்பானேன்????


ஆகையால், ரெண்டல் ரெபரல் செய்பவர்கள், ரீசைக்கிள் செய்வதன் மூலமாக நல்ல அக்டிவ் க்ளிக்கர் கிடைப்பார் என்றோ, இலவச உறுப்பினராக இருக்கும் பொழுது கிடைக்கும் க்ளிக் எண்ணிக்கையினை கணக்கில் கொண்டு, அப்கிரேடிங்க் ஆகினால் வருவாய் டபுள் ஆகிவிடும் என்றோ தவறாக மதிப்பிடாதீர்கள். இங்கேயும் அதே % இலாபம் தான். ஆனால், இலவச உறுப்பினர் என்றால் அனுமதிக்கப்படும் ரெண்டல் ரெபரல்களைக் காட்டிலும் அதிகப்படியான நபர்களை ரெண்டல் செய்து கொள்ளலாம் என்பது மட்டும் உண்மை. அதிக நபர்களை ரெண்ட் செய்வதன் மூலம் அதிக தொகை கிடைக்கிறது.

எந்தவொரு தளமாக இருந்தாலும் ஆரம்பக்கட்டத்தில் இறங்கி, குறுகிய காலத்திற்குள் நமது முதலீட்டினை திரும்ப எடுத்துவிட்டு மட்டுமே தொடர வேண்டும் என்பதனை மனதில் உறுதியாகக் கொள்ளுங்கள். அதுவும், முதலீடு என்பதனை சரியான தளத்தில் மட்டுமே செய்ய வேண்டும். இல்லாவிட்டால், ரிஸ்க் என்பது மிகவும் அதிகமாகிவிடும்.

ரெண்டல் ரெபரல்கள் செய்வதில் இனி கவனத்துடன் செயல்படுங்கள். மேல் சொல்லப்பட்ட அனைத்தினையும், எந்தவொரு தளத்தில் வேண்டும் என்றாலும் கால்குலேட் செய்து பாருங்கள், ரீசைக்கிளிங்கினால் எந்தவொரு கூடுதல் இலாபம் இருக்காது. ஜிரோ க்ளிக்ஸ் என்றாலும் ரெபரல்களை தக்கவைத்துக் கொள்வதன் மூலம் நஷ்டம் தடுக்கப்படுகிறது. ஆகையால், அனைவரையும் ரினியூவல் செய்யுங்கள், ரீசைக்கிளிங்க் செய்யாதீர்கள். இந்த முறையினை ரெண்டல் ரெபரல்களில் பயன்படுத்துங்கள்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: Rental Referral - மூலம் எப்படி அதிகம் வருவாய் பார்ப்பது?

Post by கிருஷ்ணன் » Mon Jun 16, 2014 12:19 pm

:great: :great:
100% முழுக்க முழுக்க உண்மை.எல்லாமே ஈமுக் கோழி திட்டங்கள்தான்.முந்தியவர்களுக்கு பந்தியில் இடம்.தாங்கள் ஒரு பிடிசி தள நிர்வாகியாக இருந்தும் இப்படி எல்லா இரகசியங்களையும் அப்பட்டமாக வெளிக் காட்டி படுகை மெம்பர்களைப் பாதுகாப்பதற்கு மிகப் பெரிய அக்கறை வேண்டும். :ros:

மிக்க நன்றி.

ஆனால் ரென்டல்கள் இல்லாமல் பிடிசி தளங்களை நம்பிப் பொழைப்பை நடத்த முடியாது என்பதால் ஆதி சார் சொல்வது போல் ஆழம் தெரிந்து காலை விடுங்கள்.

உதாரணமாக ZAPBUX,FUSEBUX தளங்களில் 20$ செலவு செய்து 100 RR எடுத்தால் சராசரியாக தினம் 200 க்ளிக்ஸ் விழுந்து தினம் ஒரு டாலர் கிடைக்கும்.மாதம் 30$ கிடைக்கும்.ஆதலால் இன்வெஸ்ட் செய்த பத்தாவ்து நாளுக்குள் சேரும் 10$ஐ முதலில் பே அவுட் செய்து உங்கள் பாதி முதலீட்டினைக் கைக்கு கொண்டு வந்து விடுங்கள்.பிறகு அடுத்த 20 நாள் க்ளிக்சிற்கு 20$க் கொண்டு ரினியூவல் செய்து அடுத்த 10வது நாளில் மீண்டும் 10$ கேஷ் அவுட் செய்து முழு முதலீட்டினையும் எடுத்து விட்டால் பிறகு தளம் நாமம் சாத்தும் வரை நமக்கு நம் முதலீடு இல்லாமல் மாதம் 10$ முதல் 20$ வருவாய் நமக்கு வருமானமாக வரும்.வருமானம் வருவது உங்கள் அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் தான்.உங்களுக்கு நேரம் சரியில்லாமல் நீங்கள் முதலீடு செய்த முதல் 10 நாளுக்குள் தளத்தினை மூடிவிட்டாலோ அல்லது உங்களுக்கு பணம் அனுப்பாமல் சஸ்பெண்ட் செய்து விட்டாலோ கஷ்டம்தான்.

எனவே பகுதிப் பகுதியாக, தளத்திற்கு தளமாகப் பிரித்து ரென்டல் எடுத்துக் கொள்ளுங்கள்.Never upgrade to membership at any site.

எரிகிற வீட்டில் பிடுங்கிய மட்டும் இலாபம் என்ற கண்ணோட்டத்திலேயே செயல்படுங்கள்.ஸ்மார்ட்டாக இருந்து உங்கள் பணத்தினைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
:wal: :wal: :wal:
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”