இணையத்தில் வெற்றியினைக் கொடுக்கும் விளம்பரம்!!!

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

இணையத்தில் வெற்றியினைக் கொடுக்கும் விளம்பரம்!!!

Post by ஆதித்தன் » Fri May 30, 2014 10:16 pm

இணைய உலகம் என்றாலும் சரி, நிஜ உலகம் என்றாலும் பெரிதான வித்தியாசம் ஏதும் இல்லை என்ற வாசகத்தினை சமீபகாலமாக நான் அதிகம் பயன்படுத்தி வருகிறேன். இதில் உங்களுக்கு உடன்பாடு இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால், உடன்பாடோடு வருபவர்கள், சரியான பாதையினை அடைவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது.

விளம்பரம் என்ற வார்த்தையை நீங்கள் கேள்விப்படாமல் இருக்கமாட்டீர்கள். ஏனெனில், சேனல் மாற்று... சேனல் மாற்று என்று வீட்டில் அக்கா தங்கை ... தம்பி அண்ணன் ... அம்மா அப்பா... என யாரிடமாவது நீங்கள் கண்டிப்பாக இந்த விளம்பரத்தினை மையப்படுத்தி சண்டைப்போட்டிருப்பீர்கள், காரணம் இந்த தொலைக்காட்சிப் பெட்டித்தான்.

தொலைக்கட்சிப் பெட்டியினை முழுமையாக வாழவைப்பது, இந்த விளம்பர வருவாய்தான். அதுவும் கொஞ்சமா நஞ்சமா??? இலட்சம் இலட்சமாக அள்ளிக் கொடுக்கிறது. இலட்சமாக அள்ளிக் கொடுக்கும் துறையான விளம்பரத்துறையினைப் பற்றியப் பாடப் பிரிவுகள் மேல்நிலைப் படிப்புகளில் உண்டு. விளம்பரத்திற்கே என்றே புதிய புதிய உத்திகளையும், மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படும் நபர்களைத் தன் கம்பெனி விளம்பர மாடலாக பதிவு செய்து கொள்வதும் உங்களுக்குத் தெரியாதது இல்லை.

தினமும் நாளிதழ் படிக்கும் வழக்கமும், கொஞ்சம் கிரிக்கெட் இரசனையும் இருக்குமானால் கண்டிப்பாக உங்களுக்குத் தெரிந்திருக்கும், கடந்த காலத்தில் சச்சின் டெண்டுல்கள் விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் எத்தனை கோடிகளை சம்பளமாக வாங்கினார், தற்பொழுது தோனி அவரது ரெக்ரார்டினை உடைத்து வாங்கிய கோடிகள், கோக்லி.. சேவாக்.. மற்றும் பிரபல நடிகர் நடிகைகள் விளம்பர மாடலாக வருவதற்கு பெறும் பெரும்தொகையினைப் பற்றி பத்திரிக்கையில் நீங்கள் படித்திருப்பீர்கள்.


thodarum
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”