அனைவருக்கும் வேலை தரும் ஒரே தொழில் விளம்பரத்துறை

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
Thangamstl
Posts: 37
Joined: Mon Apr 21, 2014 10:24 am
Cash on hand: Locked

அனைவருக்கும் வேலை தரும் ஒரே தொழில் விளம்பரத்துறை

Post by Thangamstl » Tue Apr 29, 2014 5:59 pm

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வேலை தரும் ஒரே தொழில் விளம்பரத்துறை. நாம் காலையில் எழுந்ததும் பயன்படுத்தும் டூத்பேஸ்ட் முதல் இரவு பயன்படுத்தும் கொசு விரட்டி வரை அனைத்தையும் மக்களிடையே சுலபமாக கொண்டு செல்லும் வேலையை விளம்பரங்கள் தான் செய்கிறது. பிரபலங்கள் மட்டுமே விளம்பரங்களில் நடிக்க முடியும் என்ற நிலைமை மாறி மற்றவர்களும் இப்போது விளம்பரங்களில் நடித்து புகழ் பெறுகிறார்கள். ஒரு வயது குழந்தை கூட விளம்பரத்தில் நடித்து சம்பாதிக்கிறது.விளம்பரம் எடுப்பது என்பது சாதாரண வேலை அல்ல. வெறும் முப்பது நொடிகளில் பொருளை பற்றிய அனைத்து விஷயங்களையும் மக்களுக்கு புரியும்படி தெளிவாக சொல்ல வேண்டும்.

Image

தற்போது மும்பை தான் விளம்பரத்துறையை ஆட்சி செய்கிறது.மும்பையில் நவீன முறையில் இந்த தொழிலை ஒருங்கிணைத்து இருக்கிறார்கள். அங்கிருக்கும் "காஸ்டிங் டைரக்டர் " என்பவரிடம் நம் விளம்பரத்தின் கருத்தை சொல்லி எத்தனை பேர் தேவை என்று சொன்னால் போதும், அவர்கள் அந்த திறமைகள் கொண்ட 50 பேரை நம் முன் நிறுத்திகிறார்கள்.ஒரு மணி நேரத்தில் நமக்கு தேவையான 5 பேரை செலக்ட் செய்துவிடலாம். இது போல் குழந்தைகள், அம்மாக்கள் யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துவிட முடியும்.சென்னை மாடலிங் துறையும் இப்போது நவீனமாகி கொண்டிருக்கிறது. அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சம்பளம் தருகிறார்கள். குழந்தைகளும், அம்மாக்களும் கூட இங்கே கணிசமாக சம்பாதிக்கிறார்கள். கல்லூரி மாணவிகள் படித்து கொண்டும், வேலை பார்க்கும் பெண்கள் வேலையை பார்த்து கொண்டும் இந்த துறையில் ஈடுபடுகிறார்கள்.

டீன்-ஏஜ் பெண்கள் உயரம் 5.7 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். கட்டுக்கோப்பான உடலமைப்பு இருக்க வேண்டும். பார்க்க லட்சணமாகவும், புடவை கட்டினாலும், மாடர்ன் உடை அணிந்தாலும் பொருத்தமாக இருக்க வேண்டும்.விளம்பர துறையில் அழகு அவசியம்.நம் மனதில் பாசமும் ,உணர்வில் கருணையும், வாழ்க்கையில் ஒழுக்கமும் இருக்க வேண்டும்.எப்போதும் டென்ஷனாக இருந்தால் அழகு போய்விடும். ஆரோக்கிய உணவு, அளவான தூக்கம் என முறையான வாழ்க்கை வாழ்ந்தால் அழகை பாதுகாக்கலாம்.

மும்பையில் குழந்தையாக இருக்கும் போதே மாடலிங் உலகுக்கு தகுந்த படி அவர்களை வளர்க்கிறார்கள். அந்த குழந்தைகளை தேர்ந்தெடுத்தால் வேலை எளிது.சொன்னதை புரிந்து கொண்டு உடனே தக்கபடி நடிக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள்.மும்பை டீன்-ஏஜ் மாடல்களை பொறுத்தவரை விதூஷா, அகான்ஷா, பல்லவி சுபாஷ் போன்றவர்கள் பிரபலமானவர்கள். குடும்ப பாங்கு, மாடர்ன் உடை எதிலும் ஜொலிக்க கூடியவர்கள். அவர்களுக்கு ஒரு நாளுக்கு 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை வழங்குவார்கள்.
பல விளம்பரங்கள் மும்பை மாடல்களை வைத்து எடுத்து விட்டு தென்ந்திய மொழிகளுக்கு மொழி மாற்றம் செய்து விடுகிறார்கள்.

Image

சட்டம் படித்திருக்கும் ஸ்வேதா ஸ்ரீதர் ஐந்து ஆண்டுகளிள் 300 விளம்பர படங்களில் நடித்து அழகு தேவதைகளில் பலரை ஆச்சரியபடவைக்கிறார். அதே போல பயோ டெக்னாலஜி துறையில் முதுகலை பயின்று "ஸ்டெம்செல்" துறையில் ஜுனியர் சயிண்டிஸ்டாக பணிபுரியும் வித்யா விளம்பர படங்களில் நடித்து தனது இளமை, திறமை மூலம் பை நிறையவும் சம்பாதிக்கிறார்.

தொழில்துறை வளர வேண்டும் என்றால் விளம்பரம் மிக அவசியம் என்பதை எல்லோரும் உணர்ந்து கொண்டதால் இந்த துறை வேகமாக வளர்ந்து வருகிறது.ஒரு விளம்பரம் வெற்றி பெறும் போது அந்த தொழிலும் வெற்றிபெறும்.எனவே எந்த பொருளையும் மக்கள் மத்தியில் பிரபலபடுத்த விளம்பரங்கள் தான் பெரும் உதவியாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: அனைவருக்கும் வேலை தரும் ஒரே தொழில் விளம்பரத்துறை

Post by ஆதித்தன் » Sat Jul 19, 2014 9:44 pm

அனைவருக்கும் பயன்படக்கூடிய விளம்பரத்துறை பற்றி அறிந்த தகவல்களை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”