Page 1 of 2

அகில உலக பெண்கள் தினம்

Posted: Thu Mar 08, 2012 3:26 pm
by mnsmani
படுகை பெண் உறுப்பினர்கள்,சாதித்த, சாதனை படைக்க இருக்கிற,சமுதாய சேவையில் ஈடுபட்டுள்ள,நாட்டுக்கு, வீட்டுக்கு என பல சிரமங்களுகிடையில் நம்மையும், நமது சமுதாயத்தையும் மேன்மையடைய பாடுபடும் அனைத்து பெண்களுக்கும் அகில உலக பெண்கள் தின வாழ்த்துக்கள். அவரகளில் சிலர்.

திருமதி சின்னபிள்ளை புலிச்செரி கிராமத்தில், மதுரை மாவட்டத்தில் பிறந்தவர். அவர் ஆழ்ந்த ஈடுபாட்டோடு சக விவசாய தொழிளாலர்களை ஒன்றினைத்து ஏராளமான கலஞ்சியம் (சேமிப்பு மற்றும் கடன்குழுக்கள்) என்ற அமைப்பை ஸ்தாபித்தார். இது 40,000 க்கும் மேற்பட்ட பெண்களளை உறுப்பினர்களாக கொண்டுள்ளது.

Image
Image
Image

January 9, 2010
Ms C.V.திலகவதி இந்திய தென்பிராந்திய ரயில்வே வரலாற்றில் முதல் EMU ஓட்டுனராக தேர்ர்வுசெய்யபட்டு, சென்னையில் பணியமர்த்தபட்டார்
Image

13.01.10 - New DGP Takes Over Charge
Ms லதிகா சரன் IPS., 1976 வது பேட்ஜ், தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி யாக பொறுபேற்றுகொண்டார். இவர் அகில இந்தியாவின் இரண்டாவது பெண் காவல் துறை உயரதிகரியாவார்.
Image

Re: அகில உலக பெண்கள் தினம்

Posted: Thu Mar 08, 2012 9:17 pm
by muthulakshmi123
மணி உங்கள் பெண்கள் தின பதிவுகள் அத்தனையும் மணி மணியாக இருக்கு அப்படியே அதை நம் நண்பர் ராமிற்கு பார்வேர்ட் பண்ணி விடுங்கள்....

Re: அகில உலக பெண்கள் தினம்

Posted: Thu Mar 08, 2012 9:48 pm
by Aruntha
ஏன் லக்சுமியம்மா இப்பிடி கொலைவெறி? அப்புறம் ருக்குமணி சண்டைக்கு வர போறாங்க

Re: அகில உலக பெண்கள் தினம்

Posted: Thu Mar 08, 2012 10:23 pm
by muthulakshmi123
Aruntha wrote:ஏன் லக்சுமியம்மா இப்பிடி கொலைவெறி? அப்புறம் ருக்குமணி சண்டைக்கு வர போறாங்க

ருக்மணி நம்ம கட்சி.....

Re: அகில உலக பெண்கள் தினம்

Posted: Thu Mar 08, 2012 10:40 pm
by mnsmani
[quote="Aruntha"]ஏன் லக்சுமியம்மா இப்பிடி கொலைவெறி? அப்புறம் ருக்குமணி சண்டைக்கு வர போறாங்க[/quote]
ஏன் அருந்தாக்கா இந்த கொலைவெறி? படுகை பெண் உறுப்பினர்கள்ன்னு உங்களையும் சேத்துதான வாழ்த்தினேன்.லெட்சுமியக்கா சொன்னது, உங்களுக்கெல்லாம் அறிவிருக்கா, sorry அறிவு திறமை அதிகம் இருப்பது பெண்களுக்கா ,ஆண்களுக்கா பட்டிமன்றம் பேசலாம் வாங்க என்ற தலைப்புக்காக ராம்குமாருக்கு forward செய்ய சொன்னார்கள்.[/b][/color]

Re: அகில உலக பெண்கள் தினம்

Posted: Fri Mar 09, 2012 12:08 am
by Aruntha
அதெல்லாம் நமக்கு தெரியா. நாங்க சொல்ல வந்தத சொல்லிட்டம். வாழ்த்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி. இருந்தும் ஆண்கள் தினம் இல்லாத கடுப்பில எல்லாரும் இருக்கிறீங்கஎன்று மட்டும் தெரிது

Re: அகில உலக பெண்கள் தினம்

Posted: Fri Mar 09, 2012 11:26 am
by ramkumark5
ஹலோ அருந்தா, வருசத்துல ஒரு நாள் தான் பெண்கள் தினம். மத்த நாள் எல்லாம் ஆண்கள் தினம். ஹி..ஹி....ஹி

Re: அகில உலக பெண்கள் தினம்

Posted: Fri Mar 09, 2012 11:47 am
by Aruntha
ஹலோ ராம் என்ன சொல்றீங்க உங்களுக்கு மற்ற நாள் எல்லாமா? அத பெருசா நோட்டீஸ் அடிச்சு ஒட்டுங்க

Re: அகில உலக பெண்கள் தினம்

Posted: Sat Mar 10, 2012 5:12 am
by rajathiraja
ஆமாம்! இதையும் அப்படியே ஃபார்வேர்டு பண்ணுங்க!

மஸாஜ் சென்டர் பெயரில் விபச்சாரம் செய்த பெண்கள் கைது
Image

சென்னை : லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ.,
Image

மலேகான் குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி சாத்வி பிரக்யா சிங்
Image

கள்ளத்துப்பாக்கி வி்ற்பனை-பெண் கைது
Image

லஞ்சம்: சமூக நல விரிவாக்க பெண் அலுவலர் கைது
Image

குழந்தைகள் கடத்தி விற்பனை: சென்னையில் மேலும் 4 பெண்கள் கைது;
Image

மனமகிழ் மன்றத்தில் ஆபாச நடனம்: 6 இளம் பெண்கள் கைது
Image

பேருந்தில் திருட்டு; 3 பெண்கள் கைது
Image

Re: அகில உலக பெண்கள் தினம்

Posted: Sat Mar 10, 2012 7:46 am
by ஆதித்தன்
என்ன ராஜா சார், இப்படி ஒர் கோபம்.

பெண்களை தெய்வமாக மதித்து, வீட்டில் உயர்ந்த பதவியில் வைத்து அழகு பார்த்தால், அதையே அவர்கள் அடிமைத்தனம் என சொல்லும் பொழுது... பெண்ணுரிமை தடுக்கப்படுகிறது எனும் பொழுது...

ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் இல்லை, என்ற கருத்தில் நான் விடை பெறமாட்டேன்.

ஆகையால், ஒருவர் தவறு செய்தார் என்பதற்காக, அதனை பெண் குலத்திற்கே எடுத்துக்காட்டாக சொல்வது தவறு.

இத்தவறுகளை சதவீதக்கணக்கில் பார்த்தால் ஆண்களே முதன்மை இடம் பிடிப்பர். அவ்வாறு பெண்களை பாதுகாத்த பெருமையும், கூறும் அடிமைப்படுத்துதலில் உண்டு.