உலகின் சிறந்த பெண்மணி!

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

உலகின் சிறந்த பெண்மணி!

Post by umajana1950 » Thu Mar 08, 2012 12:44 pm

Image

அன்னை தெரேசா (ஆகஸ்டு 26, 1910 – செப்டம்பர் 5, 1997), ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ எனும் இயற்பெயருடன் அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டு இந்திய குடியுரிமை பெற்ற ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரிஆவார். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின்கொல்காத்தாவில்(கல்கத்தா) மிஷினரீஸ் ஆப் சேரிட்டி என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர் இவர். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக அவர் ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போர்களுக்கும் தொண்டாற்றிக் கொண்டே, முதலில் இந்தியா முழுவதும் பின்னர் ஏனைய வெளிநாடுகளுக்கும் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி-யை விஸ்தரித்தவர்.

இவர் 1979-ல் அமைதிக்கான நோபல் பரிசும், 1980-ல் மனிதநேய பணிகளுக்காக இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னாவும் பெற்றார். அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபைவிரிந்து கொண்டே சென்று, அவரது மரணத்தின் போது 123 நாடுகளின் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது. இதில் எச் ஐ வி/எய்ட்ஸ்,தொழு நோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள் மற்றும் இல்லங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களும் அடங்கும்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: உலகின் சிறந்த பெண்மணி!

Post by muthulakshmi123 » Fri Mar 09, 2012 11:58 am

தொழுநோயாளிகளை தொட்டுத்தழுவிய அருமையான பெண்மணி ...உலகில் பெண்ணினப் பிரதிநிதி அன்னை தெரசா
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”