Page 1 of 1

கூகுள் வைத்த ஆப்பு - யுடியூப் விடியோக்களுக்கு சென்சார்

Posted: Sat Mar 25, 2017 1:44 pm
by ஆதித்தன்
உண்மைத் தகவலை பரப்ப ஆன்லைன் மிகவும் பயன்பாடாக இருந்தது. அதிலும் குறிப்பாக யுடியூப் விடியோக்களில் பல உண்மை இரகசியங்களை பலர் வெளியிட்டு இருந்தனர்.

தற்பொழுது தொழிலை பாதிக்கும் வகையிலான அந்த உண்மைத் தகவல்களை விடியோக்களில் பகிர்வதனை யுடியூப் சென்சார் டீம் வாசகர்களிடமிருந்து மறைக்க ஆரம்பித்துவிட்டன.

மெக்டொனால்டு பர்கர் கெட்டது என்று விடியோ போட்டால் அது சென்சார் செய்யப்படும். ஏனெனில் மெக் டொனல்டு கூகுளுக்கு விளம்பரதாரர் என்றப் பெயரில் பணம் கொடுக்கிறது.

இவ்வாறு பல பெரிய கம்பெனிகள் கூகுளுக்கு பணம் கொடுக்கின்றன. ஆகையால், அக்கம்பெனி பற்றிய தகவல் வெளியீடானது நெகட்டிவ் என்றால் ஸென்சார் செய்யப்படும்.

அதைப்போல் இவர்களோடு பல செய்தி தள கார்ப்ரேட் சேனல்களும் கூகுளோடு கைகோர்த்து, செய்தி வெளியிடும் தனிநபர் சேனல்களை சென்சார் செய்ய ஆரம்பித்துவிட்டன.

பத்திரிக்கைச் செய்திகள் மக்களை ஏமாற்றுகின்றன என்றுச் சொல்லி, சோசியல் மீடியக்களில் பல கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் அரசியல் தலைவர்கள் மீதும், கார்ப்ரேட் கம்பெனிகள் மீதும் தனிநபர்கள் யுடியூப்பில் விடியோ வெளியிட ஆரம்பிப்பதனை அறிந்து, சென்சார் செயல்பட ஆரம்பித்துவிட்டது.

பேஸ்புக் , வாட்சப், யூடியுப் , கூகுள் என எல்லாவற்றிலும் சென்சார் டீம் செயல்பட ஆரம்பிக்கும் என்பது தெளிவாகியுள்ளது.