பதட்டத்தினை உருவாக்கும் வட கொரியா

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பதட்டத்தினை உருவாக்கும் வட கொரியா

Post by ஆதித்தன் » Mon Feb 13, 2017 8:30 am

வடகொரியா கடந்த ஞாயிற்றுக் கிழமை, அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் வசதி கொண்ட ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக முடித்ததாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.

இதனை எதிர்த்து அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட்டு, வடகொரியா மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வந்துள்ளன.

ஏற்கனவே வடகொரியா அணு ஆயுத சோதனை முயற்சியின் காரணமாக அமெரிக்கா மூலம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போதைய இந்த சோதனை ஜப்பானுக்கும் எரிச்சலை மூட்டியுள்ளதால் இதுபற்றிய பேச்சினை ட்ரம்பிடம் பேசியுள்ளதோடு, ட்ரம்ப் தனது முழு ஆதரவை ஜப்பானுக்கு கொடுப்பதாகவும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கூறியுள்ளார். அதுபோல், தென் கொரியாவில் ஏவுகணை எதிர்ப்பு ராடார் & ஏவுகணை நிறுவ ஆவண உதவி செய்யவும் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.

வடகொரிய அதிபர் கிம் ஜொங் தனது புத்தாண்டு பேச்சில் விரைவில் ICBM டெஸ்ட் லாஞ்சிங் இருக்கும் என்று தெரிவித்திருப்பது, ஊடகங்கள் அது எப்பொழுது வேண்டும் என்றாலும் நடக்கலாம் என்று கூறியிருந்ததையும் அமெரிக்கா கவனத்தில் கொள்கிறது. ஏனெனில் ICBM 9000 கி.மீட்டர் வரை சென்று தாக்கும் சக்தி கொண்டதாக இருக்கும் என நம்பப்படுவதே.
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”