கிளிக்சென்ஸ் தளத்தினை பேபால் நிராகரித்தது

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

கிளிக்சென்ஸ் தளத்தினை பேபால் நிராகரித்தது

Post by ஆதித்தன் » Sat Feb 11, 2017 12:38 pm

கடந்த எட்டு வருடங்களாக சிறப்பாகச் செயல்பட்டு வரும் இலவச ஆன்லைன் ஜாப் தளமான கிளிக்சென்ஸ் தினமும் பலருக்கு பேபால் வழியாக பேமண்ட் வழங்கி வருகிறது.

கடந்த ஒர் சில வருடங்களாக பேபால் பிடிசி தளங்களுக்கு தனது புதிய விதிமுறைப்படி அனுமதி கொடுப்பதில்லை. ஆனால் கிலிக்சென்ஸ் தளம் நேர்த்தியான முறையில் தனது பிடிசி தளத்தினை நடத்தி வந்தமையாலும், பல வருடமாக பயன்பாட்டில் இருப்பதாலும் கடந்த வருடங்களில் அனுமதி அவ்வாறே தொடர்ந்தது. ஆனால் தற்பொழுது மேலும் புதிய விதிமுறைகள் இணைக்கப்பட்டிருப்பதும், அதன்படி கிளிக்சென்ஸ் தளத்திற்கு அனுமதி கிடையாது என்று கணக்கினை முடக்கி வைத்துள்ளது.

இதனால் கிளிக்சென்ஸ் தளம் பேபால் வழியாக பேமண்ட் வாங்கவோ, கொடுக்கவோ முடியா சூழலில் உள்ளது.

பேபால் இல்லாமை கிளிக்சென்ஸ் தளத்திற்கு ஒர் பின்னடைவு என்று சொன்னாலும் மற்ற பேமண்ட் வசதிகள் மூலம் தொடர்ந்து இயங்கும் என்பதில் ஐயமில்லை.

தற்பொழுது டேங்கோ கார்டு மூலம் பிட்காயின் பேமண்டாக கிளிக்சென்ஸ் வழங்கி வருகிறது.

எனது கடந்த 6 பேமண்ட்டும் டேங்கோ கார்டு பிட்காயின் வசதி மூலமாகவே பெற்றுக் கொண்டேன்.

விரைவில் ஸ்கிரில் & பேய்சா பேமண்ட் ஆப்சன் கொண்டு வர இருப்பதனையும் தகவலாக கொடுத்துள்ளனர்.

ஆன்லைன் ஜாப் செய்வோர்க்கு பிட்காயினே துணையாக இருக்கும் என்பதனை தற்போதைய பேபாலின் நடவடிக்கை காட்டுகிறது. ஆகையால் எல்லோரும் கண்டிப்பாக பிட்காயின் வாலட் பயன்படுத்திக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள்.
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”