ஜெயலலிதா முகம் பார்த்து அஞ்சலி செலுத்தும் உரிமம் யாருக்கு கிடைக்கிறது?

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ஜெயலலிதா முகம் பார்த்து அஞ்சலி செலுத்தும் உரிமம் யாருக்கு கிடைக்கிறது?

Post by ஆதித்தன் » Thu Dec 08, 2016 9:40 am

[youtube]https://www.youtube.com/watch?v=VaYB8dQB7vI[/youtube]

தமிழக மக்களின் பேர் ஆதரவு பெற்ற மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் டிசம்பர் 5 மரணமடைந்தார். 6-ஆம் தேதி காலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மாலை நல்லடக்கம் செய்யப்பட்டார்.

அம்மா அம்மா என்றுச் சொல்லி அவரது அன்பில் கிடந்த பொதுமக்கள் பலர், ஒவ்வொரு தேர்தலிலும் தவறாது தனது வாக்கு அம்மாவுக்கே என்று உரக்கக்கூறிய பொதுமக்கள் பலர்.

அம்மா அம்மா என்று கதறி அழுது தன் துக்கத்தினை வெளிப்படுத்திய பொதுமக்கள் அம்மாவின் முகத்தினைப் பார்த்து அஞ்சலி செலுத்த ராஜாஜி ஹாலில் ஆறாம் தேதி வைக்கப்பட்டார்.

ஆனால், முகம் பார்த்து அஞ்சலி செலுத்தும் வாய்ப்பு யாருக்கு கிடைத்தது?

முகம் பார்த்து அஞ்சலி செலுத்தியவர்கள் யார் , யார்?

அதனை தொலைக்காட்சியில் காட்டியிருப்பார்கள், பார்க்காவிடினும் இணையத்தில் விடியோக்கள் காணக்கிடக்கின்றனப் பாருங்கள். யார் யார் முகம் பார்த்து அஞ்சலி செலுத்தும் வாய்ப்பினைப் பெற்றார்கள் என்பதனைப் பாருங்கள்.

பொதுமக்களே, நீங்கள் யார் என்பதனை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்.

உங்களுக்கு என்ன மரியாதை இருக்கிறது என்றுப் பாருங்கள்.

உங்களுக்கான மரியாதையை எப்படி உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று சிந்தியுங்கள்.

#பொதுமக்கள் #தலைவர் #ஜெயலலிதா
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”