Page 1 of 1

இலட்சத்திற்கு மேல் வங்கியில் இருக்கும் பணம் எடுக்க முடியாது

Posted: Thu Dec 01, 2016 10:37 am
by ஆதித்தன்
வராக்கடனாலும் ஊழலாலும் அரசு தொடர்ந்து வங்கிகளை நடத்த முடியா சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதனை உணர்ந்த அதிகாரிகள், ரூ.500 & ரூ.1000 நோட்டுகளைத் தடை செய்து நடுத்தர மக்களிடமிருந்த பணம் அனைத்தினையும் வங்கியில் டெபாசிட் செய்ய வைத்துவிட்டது. அதுமட்டுமில்லாமல், கார்ப்ரேட் திட்டமிட்டு பல்லாயிரம் கோடி சம்பாதிக்க டிஜிட்டல் யுகத்தினை அறிமுகம் செய்து வைத்தும் எந்தவொரு முன்னேற்றமும் காணப்படாத டிஜிட்டல் யுகத்திற்குள் மக்களை திருப்பும் விடயம்.

கார்ப்ரேட் அல்லாத பெரிய புள்ளிகள் அதிகார வர்க்கத்தோடு இணைந்து, செல்லாத நோட்டுகளை எல்லாம் இலாவகமாக கைமாற்றிவிட்டனர்.

எதனையும் அறியா, தன் வேலை உண்டு தான் உண்டு என்று ஒர் அமைதியான வாழ்க்கை வாழ்ந்த நடுத்தர மக்களே இப்பொழுது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களே பணத்தினை தினசரி ஆடம்பரம் என்று குடிக்கும் கேளிக்கைக்கும் செலவிடமால் அத்தியாவசிய வாழ்வு முன்னேற்றத்திற்கான தேவையாக சேமிக்கும் பழக்கமும் கொண்டவர்கள்.

ஆண்டு வருவாய் எல்லைக்குள் உட்படா வருவாய் உடைய நடுத்தர மக்கள் சேமிப்பாக பல ஆண்டுகளாக சிறுகச் சிறுகச் சேர்த்து இலட்சங்களை வைத்திருப்பார்கள். இன்று இவர்களது பணம் சில வருடங்களுக்கு எடுக்க அல்லது பயன்படுத்த முடியா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மேலும் 60% வரிப்பிடித்தம் என்பது நிகழ்ந்தப் பின்னர் கிடைக்கும் பணத்தினையே ஆன்லைன் டிஜிட்டல் பணம் பரிமாற்றத்திற்கு பயன்படுத்த முடியும் என்ற தகவலும் வங்கி வட்டாரப் புலுகல் செய்தியாக வந்து கொண்டிருக்கின்றன.

ரூ.500 & ரூ.1000 நோட்டுகளை வைத்திருப்பவர்கள் என்ற நிலைமாறி வங்கியில் ஏற்கனவே சேமிப்பில் வைத்திருப்பவர்களும் இந்த வலைக்குள் சேர்க்கப்பட்டிருக்கிறார்களாம். இதுதான் தற்போதைய பெரிய தாக்கு...

இதன் காரணமாகவே, ஏற்கனவே ஆன்லைன் பற்றித் தெரிந்தவர்கள் பலரும் டாலராகவும் பிட்காயினாகவும் மாற்றம் செய்து திடீர் விலை உயர்வுக்கு வித்திட்டுள்ளனர்.

தங்களிடம் பழைய வங்கிச் சேமிப்பு பணம் இலட்சத்திற்கு மேல் இருந்தால் அவை இந்தாண்டு வருவாயாக கணக்கில் கொள்ளப்படுமே தவிர, வரி கட்டாவிட்டால் பழைய சேமிப்புத் தொகையாக கணக்கில் கொள்ளமாட்டார்கள். ஆகையால், 60% வரி வரும் என்பதால், பிட்காயின் விலை 40% அதிகமாக இருந்த போதிலும் வாங்கியுள்ளனர்.

தற்பொழுது விலை 15% மட்டுமே அதிகமாகவுள்ளது. இலட்சங்கள் வைத்திருப்பவர்கள் வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

இது வரி ஏய்ப்பு இல்லை.. வரி என்று வாங்கி, அதனை ஊழலாகச் சாப்பிட்டு கொழுத்துப் போகாமல் இருக்கவும், கடன் என்றுச் சொல்லி சோம்பேறிகளை செயலதிகாரியாக மாற்றாமல் இருப்பதற்காகவும் கொடுக்காமல் தானே தனக்கான வாழ்வினை செம்மையிட்டுக் கொள்வதற்கான ஒர் சேமிப்பு. மற்றப்படி இப்பணத்தினை சம்பாதிப்பதால் ஒர் பலனும் இல்லை.

பணத்தினை தங்கக் காயினாக வாங்கியும் பின்னர் விற்றுக் கொள்ள என தொழில் செய்பவர்கள் பலர் திட்டமிட்டு ஆரம்பித்திலேயே வாங்கியுள்ளனர்.

ஆன்லைனில் இருப்பவர்கள்,
டாலர் - ஆக வாங்கிக் கொண்டால் விலையில் நிலைத்தன்மை இருக்கும் என்பதால் தேவைக்குத் தகுந்தவாறு பின் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

பிட்காயினாக வாங்கிக் கொண்டால், தற்போதைய சூழலில் விலை ஏற்றத்திற்கான வாய்ப்புள்ளதால், கொஞ்சம் கொஞ்சமாக இழப்பு ஏதும் இல்லாமல், போட்ட பணத்தினை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் செய்து கொள்ளலாம்.

சிலநேரம் விலை குறைந்திடவும் வாய்ப்பு உள்ளது, அப்போதைய சூழலில் 1 வருடம் காத்திருந்தால், இழப்பினைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

2 இலட்சத்திற்கும் மேல் வைத்திருப்பவர்கள் பணம் எல்லாம் பிரதமர் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு 4 வருடங்களுக்கு பயன்படுத்த முடியாது.. அதுவும் 50% கழிக்கப்பட்டு, 50% மட்டுமே கிடைக்கும்.

பூமாலையைக் கொண்டு குரங்கு கையில் கொடுத்தக் கதையாக ஆகிவிடாமல், பணத்தினை சரியான முறையில் பயன்படுத்துங்கள்.

என்னைப் பொறுத்த வரைக்கும் தற்போதைய சென்னை வாழ்க்கை என்பது பணம் பணம் என்று என்னையே ஏமாற்றும் ஒர் வாழ்க்கையாக அமைந்துவிட்டதால், அடுத்த வாரம் எனது கிராமத்திற்குச் செல்ல இருக்கிறேன். அங்கு ஒர் புதிய பணமில்லா இயற்கை வாழ்வினை திட்டமிட்டு வாழ உத்தேசித்துள்ளேன்.

மேலும் டிஜிட்டல் யுகத்திற்கு நான் எதிரியல்ல.. டிஜிட்டல் யுகத்திற்குள் மக்கள் வருவதால், தமிழ் இணையத்தினைப் பொறுத்த வரைக்கும் ஒர் முக்கிய இடத்தில் இருக்கும் எனக்கு கூடுதல் பயனாளர்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்பதோடு என் வருவாய் நிலையும் மூன்று மடங்கு உயரும் என்பதே உண்மை. ஆனால், இந்த டிஜிட்டல் யுகம் யாரால் அறிமுகப்படுத்தப்படுகிறது, எதற்காக அறிமுகப்படுத்தப்படுகிறது என்பதே பிரச்சனை. இதன் விளைவுகளை விரைவாக மக்கள் உணருவார்கள்.

ஒவ்வொரு திருப்பங்களிலும் கொஞ்சம் நிதானம் காட்டினால் மிக்க நல்லது. அதனைப்போல், சரியான தருணத்தில் எடுத்த இந்த நடவடிக்கைக்கு இறைவனை பாராட்டலாம்.