ஆன்லைன் சீட்டு விளையாட்டு

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ஆன்லைன் சீட்டு விளையாட்டு

Post by ஆதித்தன் » Thu Oct 13, 2016 8:54 am

[youtube]https://www.youtube.com/watch?v=x7Hww9ETad8[/youtube]

தற்போதைய டிஜிட்டல் மார்க்கெட்டிங் பகுதியில் பெரும்பான்மையான இடத்தினைப் பிடித்திருப்பது ஆன்லைன் ரம்மி எனப்படும் சீட்டு விளையாட்டுத்தான்.

சீட்டு விளையாட்டு பழமையான விளையாட்டு என்பதால் பலருக்கும் அதில் ஒர் அறிமுகம் உண்டு. தற்பொழுது ஆன்லைனில் விளையாட முடியும் என்கிற பொழுது பலரும் அதில் மிகுந்த ஆர்வத்துடன் இணைந்து விளையாடி வருகிறார்களாம்.

எல்லோருமே ஆன்லைன் சீட்டு விளையாட்டினைப் பற்றிப் பேசும் அளவிற்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நடுவேயும் விளம்பரப்படுத்தி ஒர் பாப்புலர் நிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

சீட்டு விளையாட்டு என்பது ஒர் சிறந்தப் பொழுதுபோக்கு உள்ளரங்க விளையாட்டு. அதில் காசு கட்டி விளையாடும் பொழுது மேலும் சுவாரஷ்யம் கூடுகிறது.

காசு கட்டி விளையாடுகிறோம் என்பதால், அது ஒர் தினசரி வருவாய்க்கான ஒர் வேலை கிடையாது. நமது பொழுதுபோக்கிற்கான ஒர் அம்சமே.

பரிசு என்பது கிடைக்கும் கிடைக்காது, ஆனால் டைம் பாஸ் என்பது மட்டும் உறுதியாகக் கிடைக்காது.

13 கார்டு ரம்மி விளையாட்டானது லீகல் விளையாட்டு. ஆகையால் பல கிளப்புகளிலும் இது விளையாடப்பட்டு வருகிறது.

விளையாடுவதற்கு எளிது. இதற்கு முன் விளையாடியது இல்லை என்றாலும் ஒர் நாளில் கற்றுக் கொள்ளலாம்.

பாயிண்ட் முறையில் சீட்டு விளையாட்டு விளையாடினால், பல விளையாட்டுகள் விளையாட முடிவதோடு நல்ல பொழுதுபோக்கு அம்சமாக அமையும்.

பல்லாயிரம் வெல்லலாம் என்ற ஆசையுடன் விளையாடினால், பல ஆயிரங்கள் இழக்க நேரிடும். ஆகையால் சீட்டு விளையாட்டினை ஒர் பொழுதுபோக்கு விளையாட்டாக நினைத்து விளையாடுங்கள்.
dshanth
Posts: 1
Joined: Sun Oct 16, 2016 3:22 pm
Cash on hand: Locked

Re: ஆன்லைன் சீட்டு விளையாட்டு

Post by dshanth » Sun Oct 16, 2016 5:28 pm

பொழுதுபோக்கிற்க்கு 1000 வழிகள் உண்டு இது சூது உங்கள் வாழ்க்கையை பாழாக்கும். இது விளையாட்டு அல்ல தீவினை. இது போன்ற பதிவுகள் வேண்டாம்.
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”