அட்சன்ஸ் தளம், சிட்டிகா தோல்வியால் மூடப்பட்டது

ஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

அட்சன்ஸ் தளம், சிட்டிகா தோல்வியால் மூடப்பட்டது

Post by ஆதித்தன் » Thu Apr 18, 2019 12:14 pm

Chitika Is Shutting Down
Last Updated: Apr 17, 2019 12:02PM EDT
Dear Publisher,

After 15+ years in business and millions of publisher relationships, Chitika is hereby shutting down. Our sincere thanks to all our publishers with whom we have enjoyed wonderful relationships over the years. We wish you the best of luck and success as you continue to grow your traffic and revenue.
பல வருடங்களுக்கு முன்னர் நம் தளத்தில் கூகுள் அட்சன்ஸ் ஜாப் தொடங்க முடியாதவர்களுக்கு, சிட்டிகா ஆன்லைன் அட்சன்ஸ் ஜாப் தொடங்குவதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருந்தன.

கூகுள் அட்சன்ஸ் போன்ற விளம்பர வருவாய் பணி என்றாலும், கூகுள் அளவிற்கு பெரிய பேமண்ட் கொடுக்க முடியாமல் மிகச் சிறிய பேமண்ட் கொடுத்தாலும், தகுந்த அளவிற்கு பணியாளர்க்கு வருவாய் கொடுக்கும் அளவிற்கு விளம்பரதாரர்களை இணைக்க முயற்சித்து முயற்சித்து முடியாமல் தற்பொழுது தோல்வியில் சிட்டிகா தளம் மூடப்பட்டுவிட்டது.

கூகுள் வளர்ச்சியோடு போட்டி போட முடியாமல் ஏற்கனவே அட்வர்ட்ஸ் என்ற அட்சன்ஸ் ஜாப் தளமும் மூடப்பட்டுவிட்டது. அட்வர்ட்ஸ் தளத்தில் நான் 2 வருடங்கள் விளம்பர கோடு பயன்படுத்தி பேமண்ட் வாங்கியிருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது கூகுள் தொடக்கக் காலத்தில் ஆன்லைனில் ஜாம்பவனாக இருந்த யாகூ தளமும் பெரிய அளவில் கூகுளுக்கு போட்டி கொடுக்க முடியாமல் தொய்வில் விழுந்துவிட்டது.

போட்டியாளர்கள் அனைவரையும் வீழ்த்திவிட்ட கூகுள், அட்சன்ஸ் ஜாப் புதியவர்களுக்கு கொடுக்காமல் பல கட்டளைகளைப் புகுத்தி நிராகரித்து வைத்தாலும்... தற்பொழுது யாரும் கூகுள் அட்சன்ஸ் ஜாப் என்று பேசாத அளவிற்கு போய்விட்டாலும்.... ஏற்கனவே ரிஜிஸ்டர் செய்யப்பட்ட நபர்கள் கூட்டணியுடன் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இன்றும் அட்சன்ஸ் வருவாய் இலட்சத்தில் சம்பாதிப்பவர்கள் பலர்.... அதைப்போல் இலட்சமாக சம்பாதிக்க போராடுபவர்களும் பலர்.

நீங்களும் அட்சன்ஸ் ஜாப் ஐடி அப்ரூவல் பெற்று இலட்சத்தில் சம்பாதிக்க முயற்சித்தால், அதோடு பிற வருவாய்ப்புகளையும் சேர்த்து செய்து வெற்றி பெற வாழ்த்துகள்.
Post Reply

Return to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”