ஆன்லைன் ஆசிரியர்கள் விடியோ தளம் - youtube.com/Teachers

New Technology in Mobile & Computer and Web World News and Offer discussion.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ஆன்லைன் ஆசிரியர்கள் விடியோ தளம் - youtube.com/Teachers

Post by ஆதித்தன் » Fri Mar 23, 2012 8:15 am

Image
இணைய உலகின் முடி சூடா மன்னனாகிய கூகுளின் துணை தளம் தான், யூடியுப்.காம். இந்த யூடியூப் விடியோ தளம் மிகவும் பிரசித்தி பெற்றதும்.. நாம் அனைவரும் அறிந்ததுமான ஒர் தளம்.

யூடியூப் -ல் பாடல் & படங்கள் மற்றும் உபயோகமான டூட்டோரியல் விடியோக்கள் என பல என்னற்ற பயனுள்ள விடியோக்கள் குமிந்து கிடைப்பதுடன், என்னற்ற வாசகர்களையும் கொண்டுள்ளது. அவர்களை மேலும் மேலும் தக்கவைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், திரைக்கு வரும் படங்களை உடனுக்கூடன் யூடியூப்பில் பார்த்து ரசிக்கும் வாய்ப்பாக பாக்ஸ் ஆபிஸ் எனும் ஒர் வசதியினை வெளியிட்டது. ஆனால், அதற்கு தகுந்த வரவேற்பு பட தயாரிப்பாளர்/விநியோகஸ்தர்கள் மூலம் கிடைக்கவில்லை போலும் ... அப்படி மந்தமாக இருக்கிறது.

தற்பொழுது, அடுத்தக்கட்ட முயற்சியாய் ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் திட்டமாகவும்... அவர்களை தன் வலைத்தளத்திற்கு ஈற்கும் விதமாகவும் ஆசிரியர்கள் வகுப்பறையை புதியதாக திறந்துள்ளது.

யூடியூப் தளத்தில் இணையும் ஆசிரியர்கள் ஆங்கிலத்திலேயே தனது பயிற்சிகளை விடியோக்களாக எடுத்து இணைப்பார்கள் என்பது நமக்குத் தெரிந்ததுதான். அதே நேரத்தில், படுகை ஆன்லைன் பள்ளிக்கூடம் என்று தமிழில் பாடங்களை நடத்த ஆசிரியர்களை வரவேற்கும் நாம், அதனை எவ்வாறு செய்வது என்பதற்கு இத்தளத்தில் அவர்கள் செய்யும் செயல்முறை நமக்கு ஒர் எடுத்துக்காட்டாக அமையும், என நினைக்கிறேன்.

ஆகையால், ஆன்லைனில் டீச்சராக பணியாற்ற விரும்பும் நபர்கள், இவ்விடியோக்களை எப்படி தயாரித்தார்கள் என்பதனை பார்த்து அறிந்து கொள்ளலாம்.

மாணவர்களுக்கு பயனுள்ள தளம்


Spend more time teaching, less time searching
Select a topic below to find playlists of educationally relevant videos

Elementary
Middle School
High School: Algebra
High School: Functions
High School: Geometry
High School: Number and Quantity
High School: Statistics & Probability
Post Reply

Return to “Mobile, Computer & Internet World”