தொலைந்து போன மொபைல் போனை திரும்பப் பெற..

New Technology in Mobile & Computer and Web World News and Offer discussion.
Post Reply
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

தொலைந்து போன மொபைல் போனை திரும்பப் பெற..

Post by rajathiraja » Mon Mar 19, 2012 4:01 pm

https://encrypted-tbn2.google.com/image ... 2tuxnM16ng[/fi]
உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும். எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும். மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும். இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile Equipment Identity) என அழைப்பார்கள். இனி, உங்கள் மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல் கடிதம் அனுப்பவும். அனுப்ப வேண்டிய முகவரி cop@vsnl.net. இதில் கீழ்க்காணும் தகவல்களைத் தர வேண்டும். பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த நிறுவனப் பெயர், இறுதி யாக டயல் செய்த எண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த தேதி மற்றும் மொபைல் போனின் அடையாள எண். காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட வலுவான கட்டமைப்பினைக் கொண்டுள்ளது. அந்த மொபைல் போன் பயன் படுத்தப்படும் பட்சத்தில், அதன் இடம், தற்போது பயன்படுத்துபவரை அறிந்து நடவடிக்கையினை மேற்கொள்ளும். உங்களுக்கும் தெரியப்படுத்துவார்கள்.
Last edited by rajathiraja on Sat Mar 24, 2012 6:10 pm, edited 1 time in total.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: தொலைந்து போன மொபைல் போனை திரும்பப் பெற..

Post by muthulakshmi123 » Mon Mar 19, 2012 9:03 pm

ரொம்ப உபயோகமான தகவல்கள் ராஜா நன்றி பாராட்டுக்கள்....ஆனால் முன்பை விட இப்போ போன் ஐ தொலைப்பது மிகக் குறைந்திருக்கு....பிள்ளைகளை தொலைப்பார்களே தவிர போன் ஐ தொலைக்க மாட்டார்கள்...பேசுவதை நிறுத்தினால் தானே தொலைப்பதற்க்கு.....
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: தொலைந்து போன மொபைல் போனை திரும்பப் பெற..

Post by umajana1950 » Tue Mar 20, 2012 10:51 am

ஆனால் முன்பை விட இப்போ போன் ஐ தொலைப்பது மிகக் குறைந்திருக்கு....பிள்ளைகளை தொலைப்பார்களே தவிர போன் ஐ தொலைக்க மாட்டார்கள்...பேசுவதை நிறுத்தினால் தானே தொலைப்பதற்க்கு.....
முன்பெல்லாம் போன் ஒன்று தான் இருக்கும், பல வீடுகளில் அதுவும் இருக்காது. ஆனால், பிள்ளைகள் இரண்டு, மூன்று இருக்கும். இப்போது பிள்ளைகள் குறைந்து விட்டன. செல்போன்கள் கூடிவிட்டன. அப்படி இருந்தும் பிள்ளைகளை தொலைப்பார்கள் என்றால்........செல்போனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள் என்று பாருங்கள்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: தொலைந்து போன மொபைல் போனை திரும்பப் பெற..

Post by muthulakshmi123 » Tue Mar 20, 2012 3:53 pm

umajana1950 wrote:
ஆனால் முன்பை விட இப்போ போன் ஐ தொலைப்பது மிகக் குறைந்திருக்கு....பிள்ளைகளை தொலைப்பார்களே தவிர போன் ஐ தொலைக்க மாட்டார்கள்...பேசுவதை நிறுத்தினால் தானே தொலைப்பதற்க்கு.....
முன்பெல்லாம் போன் ஒன்று தான் இருக்கும், பல வீடுகளில் அதுவும் இருக்காது. ஆனால், பிள்ளைகள் இரண்டு, மூன்று இருக்கும். இப்போது பிள்ளைகள் குறைந்து விட்டன. செல்போன்கள் கூடிவிட்டன. அப்படி இருந்தும் பிள்ளைகளை தொலைப்பார்கள் என்றால்........செல்போனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள் என்று பாருங்கள்.
சரியாக சொன்னீர்கல் உமா
velsingh
Posts: 108
Joined: Sat Jun 09, 2012 5:16 pm
Cash on hand: Locked

Re: தொலைந்து போன மொபைல் போனை திரும்பப் பெற..

Post by velsingh » Sat Jul 28, 2012 10:51 pm

இன்னும் பல இடங்களில் மொபைல் திருடு போகதான் செய்கிறது. அதை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை. நிங்கள் குடுத்த செய்தி பயன்பெறும். அதெ நேரத்தில் மொபைல் வாங்கும் போது புதிதாக வாங்க வேண்டும். பழைய மொபைல் திருடு போனால் கண்டுபிடிக்க முடியாது என்பதை நினைவில் இருக்கட்டும். மேலும் உங்களுக்கு தெரிந்த செய்தியை அனுப்புங்கள் உங்களுக்கு என் நன்றி.
Post Reply

Return to “Mobile, Computer & Internet World”