Page 1 of 1

Microchip IC - கொத்தடிமையான அமெரிக்க வாழ் மக்கள்

Posted: Sun Dec 04, 2016 8:38 am
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=Z_xAEWqEP5s[/youtube]

பெரிய படிப்பு படிச்சிட்டு இங்கிருந்து போய் வெளிநாட்டில் / அமெரிக்க வாழ் மக்களை முழு கொத்தடிமை ஆக்கும் திட்டம் தான் புதிய டெக்னாலஜியுடன் கூடிய மைக்ரோசிப் எனப்படும் ஐ.சி (Integrated Circuit) .

மைக்ரோசிப் பற்றி எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் தற்போது நடைமுறையில் உள்ள மொபைல் சிம் சொல்லலாம். மொபைல் சிம்க்கு என்று ஒர் தனித்துவமான ஐடன்பிகேஸன் நம்பர் உண்டு இல்லையா, அதைப்போல் இந்த மைக்ரோசிப்புக்கு தனித்துவமான ஒர் ஐடன்பிகேஷன் நம்பர் கொடுத்து, அமெரிக்க வாழ் மக்களின் கையில் குத்தி உள்ளே பெர்மனட்டாக வைக்கப்போகிறார்கள்.

மொபைல் சிம் இயங்க பேட்டர் எலக்ட்ரிசிட்டி உதவுகிறது, இந்த மைக்ரோசிப் இயங்க நம் உடலில் உள்ள மின்காந்த எலக்ட்ரிசிட்டி உதவுகிறது. ஆகையால் அது இயங்கிக் கொண்டே இருக்கும், அதனை எங்கிருந்து வேண்டும் என்றாலும் ஆப்ரேட் செய்ய முடியும்.

சாதாரணமாக வெளிநாட்டிலிருந்து மொபைல்க்கு கால் வந்தாலே அதில் கொஞ்சம் வைப்ரேஷன் அதிகமாக இருக்கும் .. நம் காதுக்கும் கொஞ்சம் கெடுதல். இதற்காகவே நான் அதிகம் வெளிநாடுகளிலிருந்து வரும் கால்களை கொஞ்சம் அவாய்டு செய்வதற்காக வாட்ஸப் எல்லாம் பயன்படுத்துவது கிடையாது. மொபைல் சிம் மூலம் மிகவும் சிறிய அளவிலான தாக்கமே இருப்பதால், நமது உடல் அன்றாட பாதுகாப்புச் சக்தியின் மூலம் அதனை எதிர்கொண்டு காத்துக் கொள்கிறது.

அமெரிக்கர்களின் கைக்குள்ளேயே சொறுகி வைத்துவிடுவதால், அவர்களுக்கு தெரியாமலே கொஞ்சம் கொஞ்சமாக அந்த சிப்பினை இயக்கி உடல் உபாதைகளை உருவாக்க முடியும். இதனால், முழுமையாக பிரிடிஷ் எம்பயர் கீழ் அவர்கள் இயங்கப்போகிறார்கள். அவர்கள் நினைத்தப்படிதான் தற்பொழுது உலகை இயக்கிக் கொண்டிருப்பது தெரிந்தாலும் முழுமையாக, அடுத்து புதிய ஒர் கிளர்ச்சி ஏற்படாமல் இருக்க, முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுவதற்குத்தான் இந்த புதிய மைக்ரோசிப் டெக்னாலாஜி வழியிலான கன்றோல்.

இப்பவே அமெரிக்காவின் பூர்வ குடிமக்கள் போராட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் குடியேற்றப்பட்ட மக்கள் அரசு என்ன சொல்கிறதோ அதனை ஏற்க வேண்டும் என்ற நிலையில் இருப்பதால், உடனே கையை நீட்டிவிடுவார்கள். இல்லாவிட்டால், அவர்கள் அங்கு குடிபெயர்ந்திருப்பார்களா என்ன, தாய் மண்ணை பிரிந்து.

தற்போதைய இந்தியாவின் ஆதார் திட்டமும் அதன் ஒர் அம்சமும் கண்ணோட்டோமுமே! இதில் வெற்றி பெறும் பட்சத்தில் மைக்ரோசிப்பினை எளிதாக புகுத்திவிடலாம் என்பதுதான். கடந்த ஆட்சியில் ஆதார் திட்டம் பெரிதாக எதிர்க்கப்பட்டது, தற்பொழுது அது நடப்பது என்பது மக்கள் பற்றிச் சிந்திக்கா போலி அரசியல்வாதிகளை நாம் கொண்டுள்ளோம் என்ற உண்மையை இயற்கை நமக்கு வெளிப்படுத்திவிட்டது. இனிமேலாவது தனித்துவத்தினையும் தன்னகத்தையும் காக்க, சுயமாக சிந்தித்து செயல்படுங்கள்.