Page 1 of 1

நீங்களும் இலவசம் கொடுக்கலாம் இலட்சம் கோடி வங்கியில் வாங்கிக்கலாம்

Posted: Fri Dec 02, 2016 8:43 am
by ஆதித்தன்
Image
சமீபத்தில் டெக்னாலஜி உலகில் பரபரப்பாக பேசப்பட்டது ரிலையன்ஸ் ஜியோ ஜிம் அறிமுகம் தான். ஜியோ ஜிம் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, வங்கியில் 1 இலட்சத்தி 80 ஆயிரம் கோடி கடன் வாங்கி வைத்திருப்பவராக சொல்லப்படுவர், பல ஆயிரம் கோடிகளை வராக்கடன் நிலைக்கு தள்ளியவர் என்று இணையம் முழுவதும் சொல்லப்படும் அதே முகேஷ் அம்பானி தான், ஜியோ நிறுவன தலைவர்.

முகேஷ் அம்பானி, ஜியோ சிம் கார்டினை செப்டம்பர் ஒன்றாம் தேதி அறிமுகம் செய்து வைத்தார். அப்பொழுது அறிமுகச் சலுகையாக டிசம்பர் 31 வரை, ஜியோ சிம் வாய்ஸ் கால்கள் + இண்டர்நெட் சேவைகள் அனைத்தும் இலவசம்.. எவ்வளவு வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று இலவச அறிவிப்பினை வெளியிட்டார். இதன் வாயிலாக 83 நாட்களில் 5 கோடி வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் பெற்றுவிட்டதாம்.

தற்பொழுது அடுத்த அறிவிப்பாய், புத்தாண்டு சிறப்பாக புதியதாக ஜியோ சிம் வாங்குபவர்கள் மற்றும் பழைய வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் மார்ச் 31 வரை உள்நாட்டு வாய்ஸ் கால்கள் + ஒர் நாளைக்கு 1 ஜிபி இண்டர்நெட் பேக் இலவசம் என வெளியிட்டுள்ளனர். ஆக, அடுத்த மார்ச் மாதத்திற்குள் 10 கோடி வாடிக்கையாளர்கள் அடைவதே ஜியோ சிம் நிறுவனத்தின் இலக்காம். அதற்காக எவ்ளோ இலவசம் வேண்டும் என்றாலும் கொடுப்பார்கள்.

இவ்ளோ இலவசம் கொடுக்க இவங்களுக்கு பணம் எங்கிருந்து வந்தது? யாருடைய பணம் கடனாகக் கொடுக்கப்பட்டது? ஏற்கனவே வாங்கிய கடனைத் திரும்ப செலுத்த முடியா ஒர் தொழில் அதிபர், எப்படி அடுத்தடுத்து தொழில் தொடங்க முடிகிறது. இதுவும் தோல்வி அடைந்தால், யார் பணம் இழப்பாகும்? கொஞ்சம் யோசிங்க!!!

ஜியோ பயன்பாட்டாளர்கள் புதிய இலவச அறிவிப்பால் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதுபோல், அவர்களது ஆனந்தக் கொண்டாட்டம் விரைவில் அடுத்த 5 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுக் கொடுக்கும் என்பதனை நம்பலாம்.

கடந்த காலாண்டில் ஜியோ வருகையை சமாளித்துவிட்ட மற்ற சிம் சேவையாளர்கள், அடுத்தக் காலண்டினையும் அமைதியாகச் சமாளித்துவிட்டு, புதிய திட்டங்களை அறிமுகம் செய்து தங்களது சிறந்த வாடிக்கையாளர் சேவையின் மூலம் இழந்த வாடிக்கையாளர்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.

ஆகையால் அடுத்த ஆண்டும் மக்கள் நிறுவனங்களின் போட்டியால் குறைந்த விலையில் சலுகைகளைப் பெறலாம் என நம்புகிறேன்.

ஆனால், மக்களே!! வங்கியில் மட்டும் பணத்தினை போட்டு வைக்காதீர்கள்.