Page 1 of 1

Google Allo - Free Messenger App for Perfect Stylize Chat

Posted: Mon Sep 19, 2016 10:42 pm
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=UX7jtijlaRc[/youtube]
Google Allo
Google புதியதாக அறிமுகப்படத்த இருக்கும் மெசேஞ்சர் அப், பெயர் அலோ (Allo) . பேஸ்புக் மெசேஞ்சர்க்கு போட்டியாக கூகுள் அலோ (Google Allo) உருவெடுக்கும் என்று பரவலாக எல்லோராலும் நம்பப்படுகிறது.

கூகுள் அலோ அடுத்த சில வாரங்களில் தான் வெளியாக உள்ளது என்றுச் சொன்னாலும், ப்ளே ஸ்டோரில் தற்பொழுது அலர்ட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

கூகுள் ப்ளே ஸ்டோரில் சென்று, Google Allo என்று டைப் செய்து சர்ச் செய்தால் கூகுள் அளோ அப் பார்க்கலாம். அதில் ப்ரி ரிஜிஸ்டர் புக் செய்து, வெளியாகும் அன்றே... முதன்மையாகப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

ரஜினி படத்தினை முதல்நாள் முதல் ஷோ பார்க்கணும் என்று அடிச்சிபுடிச்சி போய் உட்கார்வதுபோல .. பெரிய கம்பெனி அறிமுகப்படுத்தும் பொருட்களை முதல்நாளிலேயே பயன்படுத்தி கருத்துச் சொல்லவும் ஒர் பெரிய குரூப் இருக்கு.

நமது நண்பர்களில் நாம் முதன்மையாகப் பயன்படுத்திவிட்டு, அவர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதிலும் ஒர் மகிழ்ச்சி இருக்கிறது.

இப்பவே புக் செய்யுங்க.. முதல் ஆளாய் பயன்படுத்தி ஆனந்தமடையுங்கள்.