Page 1 of 1

ஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப்

Posted: Wed Jul 20, 2016 5:16 pm
by வெங்கட்
இரண்டு சிம்கள் உள்ள ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்களின் பொதுவான ஏக்கம் "வாட்ஸ் அப்பில் இரண்டு எண்களையும் தனித் தனியாக உபயோகிக்க வழி இல்லையே" என்பது.

என் போனில் நான் "Parellel Space" என்ற அப் நிறுவியுள்ளேன். இதன் மூலம் என் போனில் இரண்டு தனித்தனி வாட்ஸ் அப் செயல்படுகிறது.

மிகவும் குறைவாக வெறும் 30 MB ram இடத்திலேயே இது அருமையாக இயங்குகிறது.

"Parallel space" நிறுவியதும் எந்தெந்த ஆப் களை clone செய்யவேண்டும் என்று கேட்கும். அப்போது வாட்ஸ் அப்பை தேர்ந்தெடுத்தால் முதல் முறை வாட்ஸ் அப் நிறுவுவது போல் அக்ரிமென்ட் accept செய்யக் கேட்கும். பின் வெரிபை செய்ய போன் எண் கேட்கும். இப்போது இன்னொரு எண்ணைக் கொடுத்தால் இரண்டாவது எண்ணுக்கும் வாட்ஸ் அப் வேலை செய்யும். இரண்டும் தனித் தனியாக இயங்கும்.

Re: ஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப்

Posted: Wed Jul 20, 2016 5:45 pm
by ஆதித்தன்
பயனுள்ளத தகவல் பகிர்வு ,

நன்றி.