Page 1 of 1

Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!

Posted: Mon Mar 10, 2014 12:09 pm
by sathikdm
Fake Login Pages எனப்படுவது அச்சு அசலாக ஒரு பிரபலமான வெப்சைட்டின் Login Page போலவே உருவாக்கப்படிருக்கும் Page ஆகும்.

உதாரணாமாக ஒரு ஹேக்கர் உங்களின் Gmail கணக்கின் பாஸ்வேர்டை திருட முயற்சிக்கிறார் என்றால் அவரது முதல் முயற்சி Fake Login Page ஆகத்தான் இருக்கும். GMAIL LOGIN page போலவே ஒரு பக்கத்தை டிசைன் செய்து அதன் லிங்கை உங்களுக்கு மெயில் மூலமாக அனுப்புவார். நீங்கள் சந்தேகப்பட வாய்ப்பே இல்லாமல் உங்களின் ஆசையை தூண்டும் விதமாக கவர்சிகரமான வார்த்தைகள் இருக்கும்.

You have won Rs.500000000 on Google Awards. Click this link to claim your prize. Money will be transferred to your bank account.

நமது மக்களும் உடனே Rs.500000000 ஓசியில் கிடைக்கபோகிறது என்ற அவசரத்தில் அந்த இணைப்பை கிளிக் பண்ணிவிடுவர். அந்த இணைப்பானது உங்களை Fake Login Page க்கு கொண்டு செல்லும். நாம்தான் ஏற்கனவே லாகின் செய்துள்ளோமே மீண்டும் எதற்க்கு லாகின் கேட்கிறது என்று கூட யோசிக்காமல் பணத்தை பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டு Username & Password கொடுத்து லாகின் கிளிக் செய்துவிடுவர். லாகின் கிளிக் செய்த அடுத்த வினாடி நீங்கள் கொடுத்த Username & Password ஹேக்கரின் வசம் சென்றுவிடும். ஒருவேளை பண பறிமாற்றம் தொடர்பான விசயங்கள் அந்த ஈமெயில் அக்கௌன்ட்டில் இருந்தால் அம்பேல்தான்.

Fake Login Pages பற்றி மேலும் அறிந்துகொள்ள இந்த வீடியோவினை பார்க்கவும்.
[youtube]https://www.youtube.com/watch?v=bjETNozA7-o[/youtube]

தயவுசெய்து இந்த பதிவினை உங்களின் நண்பர்களுடனும் பகிர்ந்துகொண்டு அவர்களுக்கும் Fake Login Pages தொடர்பான ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்துங்கள் நண்பர்களே.....!