தொலைந்து போன என் தொலைபேசி

New Technology in Mobile & Computer and Web World News and Offer discussion.
Post Reply
Mutharasu
Posts: 10
Joined: Sat Sep 08, 2012 7:16 pm
Cash on hand: Locked

தொலைந்து போன என் தொலைபேசி

Post by Mutharasu » Wed Feb 12, 2014 10:27 pm

அண்ணாச்சி.... நா முத்தரசு வந்திருக்கேன்.
வாலே.. வா.. வா. என்னலே.. டல்லா இருக்க என்னாச்சி?
என் மொபைல் தொலைஞ்சி போச்சின்னே.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி. அலுவலகத்துல இருந்து வரும் போது வச்சிருந்தேன். எங்கயோ மிஸ் ஆயிட்டுன்னே..
ஏலே.. என்னலே சொல்லுத? அதுக்கு போன் பண்ணி பாத்தியாலே?
ஆமாம்னே. ரின்க் போகுது. யாரும் எடுக்கல. அதான் என்னன்னு தெரியல.
அடப்பாவமே... சரி. ஒன் போன பத்தி சொல்லு.
அது மைக்ரோமேக்ஸ் கம்பனி போன். எண் எக்ஸ் 324.
2.7 இன்ச் ஸ்க்ரீன்
ஸ்டிரியோ எப்.எம்.
டிஜிட்டல் கேமரா
ஆடியோ பிளேயர்
16 ஜி.பி. எக்ஸ்பண்டாபில் மெமரி வசதி அப்புறம் அது ரெண்டு சிம் போட்டுக்கற வசதி இப்படி நெறைய வசதி உண்டுன்னே

அட பாவி.. அப்பா விலையும் ஜாஸ்தி இருக்குமேப்பா..
அப்படி இல்லன்னே. அது 2000 ரூபாதான். இதுக்கு முன்னாடி சாம்சங் காலக்சி வச்சிருந்தேன். அத என் நண்பன் சங்கர் வாங்கிட்டு போய்ட்டான். அவன் புதுசா வாங்குன இந்த மொபைல எனக்கு தந்தான். சரி. ஏதோ நேரம் விடுன்னே.
ஐ.எம்.இ.ஐ. நம்பர் தெரியுமால.
ஆமாம்னே... அது ஏற்கனவே எழுதி வச்சிருக்கேன்..
அது என் மொபைல்ல எப்படி தெரிஞ்சிக்கிறது முத்தரசு?
அது உங்க மொபைல்ல இருந்து நான் சொல்லுற நம்பர டயல் பண்ணுங்க. தெரியும்.. *1# டயல் பண்ணுங்க... அல்லது *#1# இப்படி டயல் பண்ணுங்க தெரிஞ்சிக்க்கலாம்னே. சரி அண்ணே.. நா வாறன். இன்னொரு மட்டம் ஆபீஸ் போயி தேடி பாக்குறேன். கிடச்சா நல்லது. வரட்டுமாண்ணே..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தொலைந்து போன என் தொலைபேசி

Post by ஆதித்தன் » Wed Feb 12, 2014 10:42 pm

மொபைல் தொலைந்து போனதினை ரொம்ப கூலா எழுதிக்கிட்டு இருக்கீங்க... நல்ல மனுசால் தான் நீங்க போங்க...
Mutharasu
Posts: 10
Joined: Sat Sep 08, 2012 7:16 pm
Cash on hand: Locked

Re: தொலைந்து போன என் தொலைபேசி

Post by Mutharasu » Mon Feb 17, 2014 9:20 am

அண்ணாச்சி..... அத ஏன் கேக்குறீங்க? ஒக்கல்ல புள்ளைய வச்சிட்டு ஊரெல்லாம் தேடுற மாதிரிதான் தேடி இருக்கேன். அது கடைசில என் ட்ராயர்லாதான் இருந்திருக்குவே... சிரிக்காதீரும்.. என் அலுவலக ட்ராயர்லாதான்னு சொல்ல வந்தேன்வே... எல்லாம் உம்மோரு வேண்டுதல்தான் காரணம் அண்ணாச்சி.. வேண்டுன மாதிரி நீங்க திருச்செந்தூர்ல ஒரு மொட்டை போட்டுருங்க அண்ணாச்சி. சரியா. மொட்டை வேறு யாருன்க்கும் போட்டுராதீந்கவே.. நீகதான் போடணும் அண்ணாச்சி.. உங்களுக்கு...
Post Reply

Return to “Mobile, Computer & Internet World”