எச்சரிக்கை...! படிக்கவும்...!

New Technology in Mobile & Computer and Web World News and Offer discussion.
Post Reply
efgroups
Posts: 270
Joined: Sat May 18, 2013 1:25 pm
Cash on hand: Locked

எச்சரிக்கை...! படிக்கவும்...!

Post by efgroups » Mon Dec 30, 2013 10:36 pm

Image
மைக்ரோசாப்ட்டின் எச்சரிக்கை...! வர இருக்கும் 2014 ஏப்ரல் மாதத்தில், வர்த்தக ரீதியாக, விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத் தரப்படும் ஆதரவினை விலக்கிக் கொள்ளப் போவதற்கான இறுதி எச்சரிக்கையினை, மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட்டது. அனைத்து மக்களாலும் பயன்படுத்தப்பட்ட வெற்றிகரமான சிஸ்டமாக எக்ஸ்பி உயர்ந்தது.

விண்டோஸ் 98ல் மக்கள் ரசித்த இண்டர்பேஸ் மற்றும் விண்டோஸ் என்.டி. சிஸ்டம் தந்த நிலைத்த இயக்க நிலை ஆகிய இரண்டும், எக்ஸ்பி சிஸ்டத்தின் முதன்மை சிறப்புகளாக இருந்தன. அத்துடன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என்னும் அருமையான, இணைய பிரவுசரையும் இணைத்தே, மைக்ரோசாப்ட் தந்தது. ஆனால், ஹேக்கர்கள், எக்ஸ்பி சிஸ்டத்தின் மீது எளிதாகத் தாக்குதல்களை நடத்தத் தொடங்கினார்கள். இவர்களுக்கு எதிராக, 2004ல், மைக்ரோசாப்ட் தன் புகழ் பெற்ற செக்யூரிட்டி பேட்ச் பைல் எஸ்.பி.2னை வெளியிட்டது. இதன் மூலம், எக்ஸ்பி சிஸ்டம் எப்போதும் பயர்வால் பாதுகாப்புடன் இயங்கியது.

மிகப் பெரிய அளவில், தொல்லைகளைத் தந்த ப்ளாஸ்டர், சாசர் மற்றும் ஸ்லாம்மர் (Blaster, Sasser, மற்றும் Slammer) போன்றவை இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிந்தன. இதனால், உலகெங்கும், ஏறத்தாழ 60 கோடி கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் எக்ஸ்பி, அதிகார பூர்வமாக இயங்கியது. (காப்பி செய்து, பயன்படுத்தப்பட்ட எக்ஸ்பி சிஸ்டம் இதில் சேர்க்கப்படவில்லை). ஆனால், வரும் ஏப்ரல், 2014 முதல் மைக்ரோசாப்ட், இனி எக்ஸ்பி சிஸ்டத்தினைத் தன்னால் பராமரிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இதனைப் பயன்படுத்துவது, பல இடர்ப்பாடுகளைத் தரும் எனவும் எச்சரித்துள்ளது.

ஒரு வாரத்திற்கு முன், ஸீரோ டே தாக்கதின் பாதிப்பு (பாதுகாப்பு பைல் வரும் முன் ஏற்படும் வைரஸ் தாக்கம்) விண்டோஸ் 7 மட்டுமின்றி, விண்டோஸ் எக்ஸ்பியிலும் காணப்பட்டது. ஆனால், மைக்ரோசாப்ட் அதற்கான பேட்ச் பைலை சென்ற வாரம் வெளியிட்டு, இவற்றைக் காப்பாற்றியது. 2014 ல் நிச்சயம், எக்ஸ்பியைத் தாக்கும் வைரஸ்கள் மிக அதிகமாகவும், பாதிப்பு மோசமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2013 ஆம் ஆண்டில் மட்டும், எக்ஸ்பி சிஸ்டத்தின் மீது, ஹேக்கர்கள் தாக்குதல் நடத்திய 75 பழுதான குறியீடுகள் கண்டறியப்பட்டு, பேட்ச் பைல்கள் தரப்பட்டன. இவற்றில், 68 குறியீடுகள் மிக மோசமானவை என்றும் கண்டறியப்பட்டன. இந்த ஆண்டில், மொத்தம் கண்டறியப்பட்டுள்ளவற்றில், எக்ஸ்பி சிஸ்டத்திற் கானது மட்டும் 90 சதவீதமாகும். நிச்சயமாய், இவை, 2014ல் நின்றுவிடாது.

இது 100 சதவீதமாக உயரும் வாய்ப்புகளே அதிகம். அலுவலகத்தில் வழக்கமான பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் நெட்வொர்க் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் இயங்கினால், நிச்சயம் அவை சிறிது கூட பாதுகாப்பு இல்லாதவையாகத்தான் இருக்கும். பாதுகாப்பான பிரவுசர், இமெயில் கிளையண்ட், ஆபீஸ் புரோகிராம் எனத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதன் மூலம், நாம் தொடர்ந்து எக்ஸ்பியைப் பயன்படுத்தலாம் எனப் பல நிறுவனங்கள் எண்ணி வருகின்றன. ஆனால், இவை எல்லாம், வெட்டுக் காயத்திற்குப் போடப்படும் சாதாரண பேண்ட் எய்ட் சுற்றுக்கள் @பான்றவை@ய. சரியான சிஸ்டத்திற்கு மாறினால்தான், முழுமையான பாதுகாப்புடன், நம் பணியை மேற்கொள்ளலாம்.

எனவே, தொடர்ந்து பாதுகாப்பு பெறக் கூடிய ஆப்பரேடிங் சிஸ்டத்திற்கு மாறுவதே, நம் கம்ப்யூட்டிங் பணிகளை முழுமையாக்கும். இல்லை எனில், நிச்சயம் ஆபத்துதான் என மைக்ரோசாப்ட் எச்சரித்துள்ளது. நம் முன் இருப்பது, தற்போது 10 சதவீதப் பங்கினைத்தாண்டிப் பயன்படுத்தப்படும் விண்டோஸ் 8/8.1 மற்றும் 50 சதவீதக் கம்ப்யூட்டர் களுக்கு மேலாகப் பயன்படுத்தும் விண்டோஸ் 7 ஆகும். பிரான்ஸ் நாட்டில், சில நிறுவனங்கள், மொத்தமாக ஓப்பன் சோர்ஸ் சிஸ்டத்தில் இயங்கும் பயர்பாக்ஸ் பிரவுசர், தண்டர்பேர்ட் இமெயில், ஓப்பன் ஆபீஸ் வேர்ட் ப்ராசசர் மற்றும் ஸ்ப்ரெட் ஷீட் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

இவை அனைத்தும், லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின், உபுண்டு சிஸ்டத்தில் இயங்குபவையாய் உள்ளன. விலாவாரியாக அறிவிப்பு கொடுத்தும், பன்னாட்டளவில், இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துவோர் பங்கு 45 சதவீதத்திற்கும் மேலாகவே உள்ளதாகத் தெரிகிறது. இதில் நிறுவனங்கள் 20 சதவீதம் என்பது வியப்பிற்குரியதாக உள்ளது. ஆனல், ஒன்று மட்டும் உறுதி. ஆபத்து நிச்சயமாய் வாசலில் காத்திருக்கிறது. நம்மைக் காத்துக் கொள்ள கொஞ்சம் நேரம் தான் உள்ளது. எனவே, விரைவாகச் செயல்பட்டு, பல்லாண்டு காலம் நமக்குத் துணையாய் இருந்த விண்டோஸ் எக்ஸ்பிக்கு விடை கொடுப்போம்............
Post Reply

Return to “Mobile, Computer & Internet World”