ஆறு முகங்கள்.....சிவபெருமானுக்கு

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
sk3662
Posts: 727
Joined: Sat Dec 08, 2012 8:31 am
Cash on hand: Locked

ஆறு முகங்கள்.....சிவபெருமானுக்கு

Post by sk3662 » Sun Aug 04, 2013 9:06 am

சிவபெருமானுக்கு ஆறு முகங்கள் உண்டு.
ஒரு பக்கத்துக்கு ஒரு முகம் என்ற அடிப்படையில் அவருக்கு ஆறுமுகங்கள். ஒரு பெட்டி இருப்பதாக வைத்துக் கொள்வோம். நான்கு பக்கங்கள் நான்கு திசைகளில் இருக்கும். மேலே உள்ள பக்கம் கண்ணுக்குத் தெரியும். கீழேயும் ஒரு பக்கம் உண்டு அல்லவா? அதுபோல சிவபெருமானுக்கு ஐந்து முகங்களோடு ஆறாவதாக கீழ்ப்புறம் ஒரு முகம் உண்டு. அது அதோமுகம் எனப்படும். இந்த ஆறுமுகங்களிலிருந்து வந்த தீப்பொறிகள் ஆறு குழந்தைகளாயின. அவற்றை கார்த்திகைப் பெண்களான ஆறு பேர் வளர்த்தார்கள். அதனால் முருகனுக்கு கார்த்திகைச் செல்வன் என்ற பெயர் வந்தது. தன்னை வளர்த்து ஆளாக்கிய கார்த்திகை நட்சத்திர நாளில் விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு முருகன் எல்லா பாக்கியங்களையும் தருகிறார்.
கார்த்திகை தீப நாளன்று தேங்காய் துண்டு, வெல்லம் கலந்த பொரி உருண்டைகளை செய்து வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். பொரியிலுள்ள வெண்மை நிறம், சிவனையும் வெல்லம் பக்தியையும், தேங்காய் மாவலியையும் குறிப்பதாக ஐதீகம். முருகக் கடவுள் கார்த்திகேயன், சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து நெருப்புப்பொறி உருண்டை வடிவத்தில் தோன்றியதால், அதன் அடையாளமாக பொரி உருண்டை படைப்பதாக செல்வோரும் உண்டு.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”