பொன்மொழிகள்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: பொன்மொழிகள்

Post by umajana1950 » Wed Mar 28, 2012 4:20 pm

படிப்படியாக மட்டுமே நல்ல பண்புகளைப் பழகிக் கொள்ள முடியும். ஒரேநாளில் எந்த விஷயத்தையும் கற்றுவிட முடியாது.

மனத்தூய்மை, சத்துள்ள உணவு, அளவான உழைப்பு, முறையான ஓய்வு நல்வாழ்க்கைக்கு அடிப்படை விஷயங்கள்.
-வேதாத்ரி மகரிஷி
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: பொன்மொழிகள்

Post by umajana1950 » Wed Mar 28, 2012 4:22 pm

பணத்தின் மீது கொள்ளும் மோகம் மனிதனைப் பைத்தியமாக்கிவிடும். காமம் மனிதனை இறைவனிடமிருந்து பிரித்து விடும் தன்மை கொண்டது.

படிப்பதைக் காட்டிலும் கேள்வி ஞானம் மிகவும் உயர்ந்தது. கேட்பதைக் காட்டிலும் நேரில் காண்பது அதைவிடச் சிறந்தது.
-ராமகிருஷ்ண பரமஹம்சர்
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: பொன்மொழிகள்

Post by nadhi » Wed Mar 28, 2012 8:36 pm

பணத்தின் மீது கொள்ளும் மோகம் மனிதனைப் பைத்தியமாக்கிவிடும்
பணம்ங்கிற ஒர் விஷியம் தான் மனிதனை ஆட்டிபடைத்துக் கொண்டு இருக்கிறது . பைத்தியம் மட்டும் இல்லை எல்லாமே பிடித்து விடும்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பொன்மொழிகள்

Post by muthulakshmi123 » Wed Mar 28, 2012 10:10 pm

umajana1950 wrote:பணத்தின் மீது கொள்ளும் மோகம் மனிதனைப் பைத்தியமாக்கிவிடும். காமம் மனிதனை இறைவனிடமிருந்து பிரித்து விடும் தன்மை கொண்டது.

படிப்பதைக் காட்டிலும் கேள்வி ஞானம் மிகவும் உயர்ந்தது. கேட்பதைக் காட்டிலும் நேரில் காண்பது அதைவிடச் சிறந்தது.
-ராமகிருஷ்ண பரமஹம்சர்
உண்மை கேட்பதை காட்டிலும் காண்பது சிறந்தது...
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: பொன்மொழிகள்

Post by umajana1950 » Fri Mar 30, 2012 5:22 pm

அழும் போது, தனிமையில் அழு.
சிரிக்கும்போது, நண்பர்களோடு சிரி.
கூட்டத்தில் அழுதால்,நடிப்பு என்பார்கள்.
தனிமையில் சிரித்தால், பைத்தியம் என்பார்கள்.
-கண்ணதாசன்
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: பொன்மொழிகள்

Post by nadhi » Fri Mar 30, 2012 8:25 pm

அழும் போது, தனிமையில் அழு.
சிரிக்கும்போது, நண்பர்களோடு சிரி.
கூட்டத்தில் அழுதால்,நடிப்பு என்பார்கள்.
தனிமையில் சிரித்தால், பைத்தியம் என்பார்கள்.
ரொம்ப நல்லாயிருக்கு இப்போது என்னுடைய நிலைமை இப்படித்தான் இருக்கிறது.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பொன்மொழிகள்

Post by muthulakshmi123 » Sun Apr 01, 2012 11:05 am

umajana1950 wrote:அழும் போது, தனிமையில் அழு.
சிரிக்கும்போது, நண்பர்களோடு சிரி.
கூட்டத்தில் அழுதால்,நடிப்பு என்பார்கள்.
தனிமையில் சிரித்தால், பைத்தியம் என்பார்கள்.


-கண்ணதாசன்

கண்ணதாசன் ஒரு தீர்க்க தரசி....அமுவதற்கு தனிமையும் சிரிப்பதற்கு கூட்டமுமே சரியான தேர்வு...
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: பொன்மொழிகள்

Post by umajana1950 » Mon Apr 02, 2012 4:15 pm

யார் தருமத்தை ஆடம்பரத்திற்காகச் செய்யாமல் தம் தேவையைக் குறைத்துக் கொண்டு வாழ்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.யார் ஐம்புலன்களை அடக்கும் வல்லமை பெற்றவரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் தன்னை பிறர் நிந்தித்தாலும் மறுமொழி கூறாமல் இருக்கின்றாரோ,தமக்குத் துன்பம் செய்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாமல் இருக்கின்றாரோ,யார் பிறருக்குக் கொடுத்துக் கொண்டும் தான் யாரிடமும் யாசிக்காமலும் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் விருந்தினரை நன்கு உபசரிக்கின்றாரோ, யார் வேதம் ஓதுகின்றாரோ,யார் எதற்கும் அருவருப்பு அடையாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
-மகாபாரதத்தில் பீஷ்மர்.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: பொன்மொழிகள்

Post by umajana1950 » Mon Apr 02, 2012 4:16 pm

யார் தருமத்தை உணர்ந்து தாய்,தந்தையைப் போற்றுகின்றாரோ யார் பகலில் உறங்காமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் மனத்தாலும் சொல்லாலும் செயலாலும் பாவத்தை செய்யாமல் இருக்கின்றாரோ, உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் பிறர் பொருளைக் கவராமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் தன் மனைவியிடம் மட்டும் உரிய காலத்தில் சேர்க்கைக் கொண்டு, பிறர் மனைவியைக் கனவிலும் கருதாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
-மகாபாரதத்தில் பீஷ்மர்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பொன்மொழிகள்

Post by muthulakshmi123 » Mon Apr 02, 2012 4:25 pm

umajana1950 wrote:படிப்படியாக மட்டுமே நல்ல பண்புகளைப் பழகிக் கொள்ள முடியும். ஒரேநாளில் எந்த விஷயத்தையும் கற்றுவிட முடியாது.

மனத்தூய்மை, சத்துள்ள உணவு, அளவான உழைப்பு, முறையான ஓய்வு நல்வாழ்க்கைக்கு அடிப்படை விஷயங்கள்.
-வேதாத்ரி மகரிஷி
உண்மை ஒரே நாளில் மகான் ஆக முடியாது தான்..

வேதாத்ரி மகரிஷி யின் தத்துவங்கள் அத்தனையும் பெருமை சேர்க்க வல்லது.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”