பொன்மொழிகள்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: பொன்மொழிகள்

Post by nadhi » Mon Apr 02, 2012 7:02 pm

யார் தன் மனைவியிடம் மட்டும் உரிய காலத்தில் சேர்க்கைக் கொண்டு, பிறர் மனைவியைக் கனவிலும் கருதாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
சூப்பர் உமாஜனா சார். அதிலும் மனைவி பற்றி சொல்ற விஷியம் பிடித்திற்கு.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பொன்மொழிகள்

Post by muthulakshmi123 » Tue Apr 03, 2012 7:29 am

nadhi wrote:
யார் தன் மனைவியிடம் மட்டும் உரிய காலத்தில் சேர்க்கைக் கொண்டு, பிறர் மனைவியைக் கனவிலும் கருதாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
சூப்பர் உமாஜனா சார். அதிலும் மனைவி பற்றி சொல்ற விஷியம் பிடித்திற்கு.
பிற்ர் மனை நோக்கி நாலே போதுமே..துன்பத்துக்கு அது வே காரணமாகும்
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: பொன்மொழிகள்

Post by umajana1950 » Tue Apr 03, 2012 4:23 pm

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு!
-கண்ணதாசன்.
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: பொன்மொழிகள்

Post by nadhi » Tue Apr 03, 2012 8:26 pm

முடியாதது என்று எதுவும் இல்லை.! ஆனால் எல்லாமே சுலபமாக முடிவதில்லை!…….!

சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்!

ஒரு செயல்வீரனைப் போல சிந்தனை செய். ஒரு சிந்தனாவாதியைப் போல செய்லபடு!

நீங்கள் சரியான பாதையிலேயே இருந்தாலும் கூட ஒரே இடத்தில் உட்கார்ந்துவிட்டால் வேறு யாரேனும் உங்களை முந்தி விடுவார்கள்… தொடர்ந்து முன்னேறுங்கள்!

உங்களூக்குப் பின்னால் நின்று கூடிப் பேசுபவர்களைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம். கொஞ்சம் வித்தியாசமாக எண்ணிப் பாருங்களேன்! நீங்கள், அவர்களுக்கு 2 அடி முன்னால் இருக்கிறீர்கள், இல்லையா? பெருமைப் பட்டுக் கொள்ளுங்கள்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பொன்மொழிகள்

Post by muthulakshmi123 » Tue Apr 03, 2012 8:38 pm

umajana1950 wrote:உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு!
-கண்ணதாசன்.
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி கொள் என்று சொல்ல வில்லை தேடு என அழகாக கூறி இருக்கிறார்.தீர்க்கதரசி
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: பொன்மொழிகள்

Post by umajana1950 » Tue Apr 03, 2012 9:28 pm

உங்களூக்குப் பின்னால் நின்று கூடிப் பேசுபவர்களைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம். கொஞ்சம் வித்தியாசமாக எண்ணிப் பாருங்களேன்! நீங்கள், அவர்களுக்கு 2 அடி முன்னால் இருக்கிறீர்கள், இல்லையா? பெருமைப் பட்டுக் கொள்ளுங்கள்.
வித்தியாசமான எண்ணங்கள் நம்மை உயரே கொண்டு செல்லும் படிக்கட்டுகளாக அமையும்.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: பொன்மொழிகள்

Post by umajana1950 » Wed Apr 04, 2012 9:24 pm

நேரில் பார்க்கும் ஒருவரிடம் அன்பு செலுத்த முடியாவிடில், எப்படி நேரில் பார்க்க முடியாத இறைவன் மீது அன்பு செலுத்துவீர்கள்?......
-அன்னை தெரசா
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: பொன்மொழிகள்

Post by umajana1950 » Wed Apr 04, 2012 9:30 pm

சில நேரங்களில்,
ஒரு புன்னகை கூட அடுத்தவரின் இதயத்தை உனக்குத் திறந்து விடும்.
மரியாதை கொடு
அன்பு காட்டு
ஏனெனில் ஒவ்வொருவருக்குள்ளும் இறைமை ஒளிந்திருக்கிறது.
-ஓஷோ
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”