Page 1 of 1

சூரியன் உதிக்கிறது ஆகாயத்திலாகும்

Posted: Thu Jan 09, 2020 9:34 pm
by marmayogi
சூரியன் உதிக்கிறது ஆகாயத்திலாகும்.

அந்த ஆகாயம் இன்னதென்று ஐந்தாம் அத்தியாயத்தில் விவரித்துச் சொல்லியிருக்கின்றது.

சூரியன் என்றால் பிராணனாகும்.

அந்த பிராணனை முன்சொன்ன சிரசாகிற ஆகாயத்தில் அசையாமல் நிறுத்தினால் பகலாகும்.

பகல் என்று சொல்வது பரமாத்மாவாகின்ற மனம் சிரசில் பிரகாசிக்கும் பொழுதாகும்.

அந்த சந்தர்ப்பத்தில் சூரியன் உதித்து, பிரகாசித்து பகலாகும்.

பின்பு இருட்டில்லை.

அவ்வாறு சூரியன் உதித்தால் யாதொரு தடையும் இல்லாமலே எல்லா நிலைமைகளும் காணப்படுவதும் அறியப்படுவதும் ஆகும்.

அதற்கு யாதொரு காலமுமில்லை.

இப்பொழுது நமக்கு இருட்டாகும்.

அந்த இருட்டிலாகும் இப்பொழுது பிரகாசம் உண்டென்று தோன்றுகிறது.

இதை இரவு அதாவது ராத்திரி என்று சொல்லக் காரணம்,

தானாயிருக்கின்ற ஜோதி சிவசக்தியாய் இருக்கின்ற திரிகுணங்களாகி அதாவது மூன்று குணங்களாகி வெளியினுள்ளில் வந்து பரவியிருக்கிறது.

அதாவது சாத்வீகம்,இராஜசம்,தாமஸம் இவையாகும் மூன்று குணங்கள்.

அந்த சக்தியிலிருந்து உற்பவித்துள்ள மூன்று குணங்களையும் ஒன்றாகச் சேர்த்து அவற்றினுடைய உற்பத்தியாய் இருக்கிற சக்தியோடு சேர்த்து புருவமத்தியத்தில் நிறுத்தி அங்கேயே மனத்தையும் கண்களையும் அசையாமல் நிறுத்த வேண்டும்.

அப்பொழுது பிரகாசிக்கும்.

அச்சமயத்திலாகும் ஆகாயத்தில் சூரியன் உதித்துப் பகலாகின்றது.

இப்பொழுது சூரியன் உதிக்கவில்லை.

சூரியன் உதித்தால் பின் இருட்டாவதில்லை.

ஜீவசக்தியாகிய வாயுவிலிருந்து மனம் உற்பத்தியாகி பளிங்கு வர்ணமாய் முட்டை வடிவாமாய் இருக்கின்ற வெளியினுள்ளில் நம்மிலிருந்து முன் சொல்லிய பிராணன் பிரகாசமாகிப் பிரதிபிம்பித்ததாகும் இக்காணுகின்ற சூரியன்.

அதை நாம் அகங்காரத்தினால் பார்ப்பதாலாகும் சூரியன் மிகவும் ஜொலிக்கின்றதாய் பார்க்க முடியாமல் இருக்கின்றது.

எப்பொழுது அப்படி பிரதி பிம்பிக்க விடாமல் தன்னில் அடக்குகின்றோமோ அப்பொழுது நமக்கு பகலாகும்../;சுவாமி சிவானந்த பரமஹம்சர்