Page 1 of 1

ஈஸ்வர சேவை

Posted: Sat Jan 04, 2020 8:02 pm
by marmayogi
ஈஸ்வரன் என்றால் ஆளுவதற்கு வல்லமை உடையவன்.

அதாவது அவரவரை ஆளுவதில் அதாவது பரிபாலிப்பதில் சிரேஷ்டன் அவரவருடைய ஜீவனாகும்.

அந்த ஜீவனே ஈஸ்வரன்

அந்த ஜீவனுடைய வெளியே உள்ள சலனத்திற்கு சரீரம் என்று பெயர்.

அந்த ஜீவனின் சப்தரூபமான சலனத்திற்கு தேகம் என்று பெயர்.

அந்த சலனத்தின் உற்பத்தி புருவமத்தியில் இருந்தாகும்.

புருவமத்தியில் சுழுமுனை என்ற அக்கினி நேத்திரம் இருக்கிறது.

அக்கினி நேத்திரமான புருவமத்தியில் சர்வ நாடிகளும் வந்து சேருகின்றன.

அந்த நாடிகளுடைய வீரியத்திற்கு சுக்கிலம் என்று பெயர்.

அந்த சுக்கிலத்தால் தான் சிருஷ்டி செய்யப்படுகிறது.

சிருஷ்டி , ஸ்திதி , சம்ஹாரம் ,செய்கின்றது ஜீவசக்தியாய் இருக்கின்ற வாயுவே ஆகும்.

நித்தியமாய் இருக்கின்ற " தான் " எப்போது ஆகாயமாகின்றதோ, அப்போது உள்ளும் , வெளியும் உண்டாகின்றன.

அவை தன்னில் இருந்தே உற்பத்தி ஆகின்றன.

உள்ளிலும் , வெளியிலும் நிறைந்த வஸ்து ஜீவசக்தியாய் இருக்கின்ற வாயுவேயாகும்.

ஜீவசக்தியாய் இருக்கின்ற வாயு அதோ கதியாகி தன்னில் இருந்து பிரிந்து வெளியே போகும் போது நாம் செத்துப் போகின்றோம் .

ஜீவன் விஷயத்தை பந்திப்பது (பற்றிப் பிடிப்பது ) பந்தம்.

அப்பொழுது ஜீவசக்தியாய் இருக்கின்ற வாயு வெளியே போய் அழிகின்றது.

ஜீவசக்தியான வாயுவை வெளியே விடாமல் தனக்குள் சதா மேலும் கீழும் நடத்தி அது ஈஸ்வரன் இருக்கிற இடத்தில் சேருவது மோட்சம்.

இது தான் ஈஸ்வர சேவை.

ஜீவசக்தியாய் இருக்கின்ற வாயுவை சேவிப்பது (உட் கொள்ளுவது) தான் ஈஸ்வர சேவை.

தனக்குள் இருக்கின்ற ஜீவன் வெளியே பரவி பல விஷயங்களிலும் ஈடுபட்டு அழிந்து போகிறது.

அவ்விதம் விஷயங்களில் ஈடுபடாமல் அச்சக்தியை தனக்குள் நடத்தி ஈஸ்வரனில் சேரச் செய்வது மோட்சம். . ; சுவாமி சிவானந்த பரமஹம்சர்