Page 1 of 1

மாயை - மனம் - மந்திரம் - மாந்திரீகம்

Posted: Sat May 11, 2019 11:45 am
by ஆதித்தன்
மாயை மனம் மந்திரம் மாந்திரீகம் என எல்லாம் உண்மையே!

மாந்திரீகம் மூலம் ஒருவரை குடும்பத்தோடு அழிக்கலாம்.

மந்திரம் மூலம் நினைத்த காரியங்களை எல்லாம் சாதிக்கலாம்.

மனம் மூலம் எப்பொழுதும் நினைத்ததை அடையலாம்.

மாயா மூலம் உலகையே கட்டுக்குள் வைத்து ஆளலாம்.

வரிசையாகச் சொல்லப்பட்டதிலிருந்து, அவற்றுள் எது பெரியது என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.

மாந்திரீகம் என்பது, குட்டிச்சாத்தான், பேய், பிசாசு என சிறுசக்திகளுக்கு விருப்ப படையலிட்டு செய்வது. இதில் தவறினால், ஏவியவரையே பதம் பார்த்துவிடும். அவ்வாறு அழிந்த மாந்திரீக குடும்பம் பல... ஆகையால் தான் மாந்திரீகத்தினை பயன்படுத்தாதே என எச்சரிக்கை செய்வர். தந்தையின் எச்சரிக்கையையும் மீறி என் மீது ஏவல் செய்த நண்பன் குடும்பமும் சின்னாபின்னாமாக சிதைந்து போனது, எல்லாம் இறை பாதுகாப்பு.

மந்திரம் மூலம் தெய்வ சக்திகளை கூப்பிட்டு விருப்ப படையலிட்டு, பூஜை செய்து நற்காறியங்களுக்கு பயன்படுத்துவது. கெட்ட காரியங்களுக்கு பயன்படுத்தினால் ஆபத்தாக முடியும்.

மனம், மந்திரம் மாந்திரீகத்தினைக் காட்டிலும் பெரியது.

ஒருவரின் மனதினை நம்மால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. கட்டுப்படுத்தவும் முடியாது.

ஆயுத பலத்தினால், ஒருவனை அடிக்கலாம், அடித்து காரியத்தினைக் கூட சாதிக்கலாம். ஆனால், அவன் மனதினை ஒன்றும் செய்ய முடியாது. அது அவனை திட்டிக் கொண்டும் சாபமிட்டுக் கொண்டேதான் இருக்கும்.

ஒருவன் மனோ பலம் கொண்டவனாக இருப்பானாயின் அவனை மந்திரம் மற்றும் மாந்திரீகம் மூலம் ஒன்றும் செய்ய முடியாது.

மனோ பலம் கொண்டவனை ஆயுத பலத்தினால் தான் கட்டுப்படுத்த முடியும் என்றாலும், அதுவே அவர்களை கூண்டோடு வேரறுக்கவும் செய்துவிடும்.

ஆம், மனோ பலம் என்பது, இருப்பதனைக் காட்டிலும் இல்லாமல் ஆகும் பொழுது... அவனை கொலை செய்திடும் பொழுது மேலும் வலு பெறுகிறது.

மனோ பலம் கொண்டவனை காயப்படுத்தினால், தவோ வலிமையால் தன் எதிர்ப்பினை மனதினால் செய்வான். அது அவ்வாறே நடக்கும்.

கொலையே செய்துவிட்டால், அவனது உடலை அழிக்கலாம்... உயிரைப் பிரிக்கலாம். ஆனால் மனம் இங்கு உலாவுவதை எதுவும் செய்திட முடியாது.

தீர்க்கமான மனோபலம் கொண்டவன், அவ்வாறு சூழலிலும் எதிர்வினையை உருவாக்கி வாழ்வில் வலியினை உருவாக்கிக் கொண்டே இருப்பான்.

இதனை பேய்ச் சேட்டை என்பார்கள்.

நோய்க்கும் பாரு, பேய்க்கும் பாரு என்று கிராமத்து சொல்வழக்கு உண்டு. ஆம், எதிரிகளினால் சாவினைச் சந்தித்தவர்கள் அவர்களது எதிரிகளின் குடும்பத்தினை ஒவ்வொறு விடயத்தியிலும் தடை தொந்தரவுகளை தனது சக்திக்கு ஏற்ப செய்து கொண்டே இருப்பார்கள். ஆகையால், தொழில் நட்டம், நோய் நொடி என துன்பம் வீட்டில் இருந்து கொண்டே இருக்கும்.

ஒரு பெண் தவறாக பேசியதால் தற்கொலை செய்து கொண்டாள். அதற்குப் பிறகு தன்னை தவறாக பேசியவர்களின் குடும்பத்தினை துன்பத்தில் ஆழ்த்த ஆரம்பித்துவிட்டால்... தொடர் துன்பம்.. குழந்தை பிறப்பு பிரச்சனை என தொடர்வதன் மூலம் தெய்வ குற்றம் இருக்கிறது என்பதனை புரிந்து குறி பார்த்ததில்.. தற்கொலை செய்து கொண்ட அப்பெண்ணின் ஆவியே பிரச்சனை செய்கிறது என்பதனை அறிந்து, ஆவியிடம் மன்னிப்பு கேட்டுஅப்பெண்ணை தெய்வமாக வணங்குகிறோம் என்று இன்றும் கோயில் கட்டி, வாரம் வாரம் பூஜை... வருடந்தோறும் கொடை எனக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதைப்போல், இன்னொரு சின்னப் பெண்ணையும் வீட்டில் உள்ளவர்களே அவள் தவறாக நடக்கிறாள் என்று அடித்ததில் இறந்துவிட்டாள், இறந்தவளை கிணற்றில் போட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடியதாக பிறர் சொல்வார்கள்... அந்தப் பெண் இறந்துவிட்டாள்.. ஆனால் அப்பெண் மன ஆவி, இவர்களுக்கு நோயினைக் கொடுக்கிறது... எந்தவொரு மருத்துவத்தாலும் குணப்படுத்த முடியவில்லை.. வீட்டில் எப்பொழுதும் துன்பம்... மருத்துவத்தால் குணப்படுத்த முடியவில்லை என்று தெரிந்த இரண்டு வருடம் கழித்துத்தான் தெய்வங்களை நாடினர்.. அங்கு குறி சொல்வபர் ஒருவர்... வீட்டில் ஒர் ஆவி சேட்டை இருக்கு.... இந்த பூஜை போடு என்று சொல்லியும்... அதனைக்கூட அவர்களால் நிறைவேற்ற முடியாத வண்ணம் தடங்கல் என தொடர்கிறது.

மனோபலம் கொண்டவர்கள் நற்குணம் கொண்டவர்களாக இருப்பின் அவர்களுக்கு தெய்வங்களின் துணையும் கிடைக்கும். இவ்வாறு தெய்வங்களின் துணையோடு எதிரிகளால் அநியாயமாகக் கொல்லப்பட்டவர்கள் பேயாக ஊரில் சேட்டை செய்து, தன் எதிரிகளை அழித்தும் மனம் இறங்காமல், அதுபோன்ற எல்லோருக்கும் கெடுதல் செய்தல் என தொடரும் பொழுது மக்கள் வேண்டி கொடை கொடுத்து தெய்வங்களாக வணங்கி சாந்தப்படுத்தும் காரியங்களும் ஊர்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

மனோசக்தியால் இறப்பிற்கு பின் தன் சக்தியினை காட்டும் இவ்வாறானவர்கள் பலர் சிறுதெய்வங்களாக ஊர்களில் வணங்கப்படுகின்றனர்.

மாயை என்பது எல்லாவாற்றிலும் பெரிய சக்தி.

உயிரோடு இருக்கும் பொழுதே மாயையான ஐம்பூத சக்தியினை தன் கட்டுக்குள் கொண்டுவரும் அட்டமா சித்தி பெற்ற சித்தர்கள் ஆவர்.

இவர்களுக்கு யாவரும் ஒருவரே. நன்மை தீமை என்று எதுவும் கிடையாது.

இவர்களுக்கு ஒருவர் தீமை செய்தாலும் அவ்வாறே ஏற்பர். அதற்காக எதிர்ப்பு காட்டுவதில்லை. அதுவும் நன்மைக்காகவே என்று எல்லாம் வல்ல ஒற்றை மூலத்தின் செயலே என்று ஏற்பர்.

ஆனால், விதைத்ததே விளையும் என்பதற்கு ஏற்ப... தீமை செய்தமையால் தீமை விளையும் என்பதன் பிரதிபலனாக அவர்களுக்கு தண்டனை கிடைத்துவிடும்.

உலக நன்மைக்காக மட்டுமே தன் செயல்களைச் செய்வர்.

உலகை ஆளும் வல்லமை கொண்டிருந்தாலும் எதனையும் கண்டு கொள்ளமாட்டார்.

தீய செயல் செய்வோரையும் தன் விருப்பு கொண்டு எதுவும் செய்யமாட்டார்.

அதுவே அடுத்தவர்க்கான தீய செயலாக மாறும் பொழுது தன் எதிரிகளை உருவாக்கி தனக்கான துன்பத்தினை பெற்றுக் கொள்வர் தீயவர்கள்.

அதாவது, இன்றைய உலக நடப்பில் பல கெட்டவைதான். ஆனால், ஒருவர்க்கு ஒருவர் விரும்பி செய்வதால் அக்கெட்டவை கூட அங்கு எதிர்ப்பை பெறமால் இயல்பில் கடக்கிறது.

ஆனால், அத்தவறுகள் தொடரும் பொழுது இயல்புகள் கெட்டவையாக மாறி துன்பத்தினைக் கொடுக்கும்.

அதாவது அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. என்பது போல, கெட்டது என்று சொல்லக்கூடிய பாதரசம் கூட அளவாக பயன்படுத்தும் பொழுது உயிர்காக்கும் மருந்தாக பயன்படுவது இல்லையா!! அதுபோல், நாம் கெட்டதாக நினைப்பது அங்கு ஒர் நன்மைக்காக பயன்பட்டிருக்கலாம்.

ஆகையால், உலகத்தில் நடப்பவை எல்லாம் ஒர் நன்மைக்காக என்ற முடிவோடும், நல்லவை நடக்க என்ன செயல் வேண்டும் என்றும் உள்ள ஆசையோடு இயங்குபவர்களாக மாயா சக்தி கொண்டவர்கள் இருப்பர்.

இதனைத்தான், பெரியோர் கெட்டது செய்தாலும் நல்லதையே செய். நடப்பது நன்றாகவே இருக்கும். கெஎடுதல் செய்தவர்களை எதிரியாக நினைத்து செயல்படாதே என்று சொல்வார்கள்.

அவர்கள் உண்மையாகவே கெடுதல் செய்திருப்பாராயின், கெடுதல் செய்வதே எண்ணமாக கொண்டிருப்பாயின், அவர்க்கான பலன் இயற்கையினால் விதைத்தபடியே விளை பயனாய் கிடைக்கும், நாம் செய்ய வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை.

ஆகையால், இயற்கையான இறை சக்தியினை முழுமையாக நம்புங்கள்.

நம்பிக்கை கொண்டவர்கள் மனம் எப்பொழுதும் வலுவாகவே இருக்கும்.

மனதினை திடமாக வைத்திருங்கள். உங்களது மனதினை எவராலும் எதுவும் செய்திட முடியாது. உங்கள் மனம் உங்களிடமே உள்ளது. உங்கள் மனோ வலிமையால் தங்களுக்கான காப்பு உருவாக்கிக் கொள்ளுங்கள்.

இதனைத்தான் அகத்தியர், மனமது செம்மையானல் மந்திரம் செபிக்க வேண்டாம்... மனமது செம்மையானால் வாசியை உயர்த்த வேண்டாம் என்று சொல்லுவார்.

உங்கள் மனம் செம்மையானால்தான், மாயையாக இருக்கக்கூடிய இறைசக்தியினை அடைய முடியும்.

நல்ல உள்ளம் கொண்டவர்களுக்கு, அன்பே வடிவான இறைவன் துணை நிற்பான்.

எது நடந்தாலும் நன்மைக்கே!