Page 1 of 1

இறைவனைப் பார்ப்பது எப்படி?

Posted: Fri Nov 30, 2018 6:51 am
by ஆதித்தன்
இறைவனை பார்ப்பது என்பது மிக எளிதானது.

எப்பொழுது நீங்கள் பார்க்க வேண்டும் என்று நினைத்தாலும் உடனே இறைவனை பார்த்துவிட முடியும்.

பதி பசு பாசம் என அழகாக சொல்லப்பட்ட சித்தாந்தத்தை உங்களது அறிவுக்கு எட்டிய அளவில் பாருங்கள்.

தானே அறிவது, அறிவித்தால் அறிவது, அறியாதது என உங்களை மூன்றாக பிரித்துவிட்டார்கள்.

அந்த மூன்றும் இணைந்த ஒன்றாய் நீங்கள் எப்பொழுது மாறுகிறீர்களோ அப்பொழுதே நீங்கள் இறைவன் ஆகிவிடுவீர்.

உங்களது காரண குரு என்பவர் உங்களுக்குள் தானே அறிவதாய், பதியாய், உங்களை உருவாக்கியதாய் இருக்கிறது.

அந்த மூலப் பதி, உங்களது உடலை உருவாக்கியது. உள்ளத்துள் இயங்கிக் கொண்டிருக்கிறது.

அறிவித்தால் மட்டுமே அறிவதாகிய மனம், தன் அறிவு என்று அங்கங்கே தேடித் தேடி படித்தவற்றைக் கொண்டு தன் மூலப் பதியை, தனக்கான அறிவினை வழங்கும் உயிரை மறந்துவிட்டது, ஏற்கவும் இயலாது துறந்துவிட்டது.

அறிவானது, உடல் தன்னுடையது என்றும் தான் வாழ்வதற்கான இடம் என்றும் நம்புகிறது. அதனை காத்து வாழ்வாங்கு வாழ தன் அறிவினைக் கொண்டு புறத்தில் ஆயிரம் ஆயிரம் செயல்களை செய்கிறது.

ஆனால், அந்த உடலை உருவாக்கிய உயிர் தன்னுடனே இருக்கும் பதி, அதுவும் இந்த உடலில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தன்னுடைய வளர்ச்சியினை அதுவே முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது என்பதனை மறந்துவிட்டது புத்தி.

உயிர், ஒரு பொழுதும் தன் உடலில் துன்பம் ஏற்படுவதனைக் கண்டு சும்மா இருப்பதில்லை. தன் உடல் என்று நினைத்துக் கொண்டிருக்கும் புத்தியினைக் காட்டிலும் ஆயிரம் மடங்கிலும் மடங்காக அதிகமாகவே உயிர் தன் உடலை நேசிக்கிறது, காக்கிறது.

உயிரே உடலையும் உருவாக்கியது, புறத்தினைப் பார்க்க அகத்தில் உள்ளத்தினையும் உருவாக்கியது.

உள்ளத்தில் நல்ல உள்ளம் உயிரோடு இணைந்து உறங்காது தன் உடலை காக்கும்.

ஆனால், உள்ளத்தில் உதித்தெழுந்த மனம் புத்தியோடு சேர்ந்து அகங்காரமாய் இது என் உடல் என் உயிர் என்று தன்னால் இயங்குவதாகவும், தானே இயக்கி பராமபரிப்பதாகவும் உலக அறிவோடு சேர்ந்தே மேலும் மேலும் வளர்ந்த புத்தியனைக் கொண்ட மனிதனால் இறைவனை பார்த்தல் மட்டுமே நம்பமே முடியும்.

உயிர் அகத்தில் வாழ்வது, அது புறத்தினைப் பார்க்க இயக்க எடுத்த பிரிவு உடல் > உள்ளம்.

இந்த உள்ளம், மனமாகவும் புத்தியாகவும் விரிந்து பரந்து புதியவற்றியதனை உருவாக்குவதனைப் பார்த்து படைப்பவனாகிய பதி மகிழ்கிறது.

புத்தியின் எல்லா செயல்களையும் பார்த்துக் கொண்டிருக்கும் உயிரைப் பார்க்க வேண்டும் என்று அறிவு முயற்சித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவனை இறைவன் என்றுச் சொன்னால் அறிவியல் பார்க்காமல் எப்படி ஏற்கும்?

பதியின் பேச்சைக் கேட்டு படைத்தவை எல்லாம் புதியவை.

புத்தியின் பேச்சைக் கேட்டு கிடைப்பது எல்லாம் படைக்கப்பட்டவை.

படிப்பது, படைக்கப்பட்டதைக் காட்டிலும் புதியது படைக்கப்பட வேண்டும் என்ற பதியின் படைப்பு ஆசையாக இருக்க வேண்டும்.

ஒன்றுமில்லாதவனாகிய பதி, ஒன்றொன்றாய் ஒன்றிலிருந்து படைத்தவற்றிற்கெல்லாம் மூல பதி எந்த பதி என்பதனை உள்ளத்தால் அறிந்து தான் விட்ட மன அம்பினை தானே பிடித்து முடக்கும் வல்லவனாய் ஆக நினைப்பது மூடநம்பிக்கையாக இருக்குமாயின் மூடிய உடலுக்குள் இருப்பது உயிர் என்று நம்பி பெயரிட்ட அறிவு, உடலைப் படைத்த உயிரை இறைவன் என்று பெயரிட்டதனை புத்தி ஏற்க மறுப்பது என்பது ஏய்தியது ஏய்தபடி ஏகமாய் முற்றாகவே! உலகம் உய்யவே!

Re: இறைவனைப் பார்ப்பது எப்படி?

Posted: Tue Jun 18, 2019 1:45 pm
by sujatham90
இறைவனை நான் நினைக்கும் அனைத்து ரூபங்களிலும் காண இயலும்.