Page 1 of 1

சிவசக்தி சுவாச நாடி

Posted: Wed Sep 19, 2018 1:34 pm
by ஆதித்தன்
சிவனும் சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் இணைப்பு நாடி ஆனது, சந்திரனாகிய சக்தி விழிப்பிலிருக்கும் பொழுது நம் நாடியினை சூரிய நாடியிலும், சூரியனாகிய சிவன் விழிப்பில் இருக்கும் பொழுது சந்திர நாடியில் வைத்திருப்பதும், சிவசக்தி நாடி சுவாசம் ஆகும்.


பகல் முழுவதும், வலது நாடியில் மட்டுமே சுவாசம் உள்வாங்கி வெளியிட வேண்டும் என்பதும் இரவு முழுவது இடது நாடியில் சுவாசம் செய்ய வேண்டும் என்பதும் மிகவும் கடினமான ஒர் செயல், அவ்வாறு செய்ய வல்லவர் சித்தர் நிலைக்கு, ஈசன் நிலைக்கு உயர்ந்துவிடுவார்கள்.

உலகம் இரண்டு அங்குலம் என்பது, மூச்சினை வைத்தே கூறியுள்ளனர். இந்த இரண்டு மூச்சிலேயே எல்லா செயல்களும் அடக்கமாகியுள்ளது.

சிவசக்தி நாடி நிலைக்கு உயர்வதற்கு முன்னே அடிப்படையாக ஒவ்வொரு கிரக கிழமை அன்றும் அதிகாலை சூரிய உதயத்தில் என்ன சுவாச நாடி ஓட வேண்டும் என்பதனை சரியாக ஓட விடுங்கள். இதன் மூலம் ஆரோக்கியம் கிடைக்கும்.

இரண்டாவதாக, எந்த செயலுக்கு எந்த கிரக நாடி முக்கியம் என்பதனை அறிந்து அதற்குத் தகுந்தாற்போல், சுவாச நாடியினை மாற்றம் செய்ய ஆரம்பியுங்கள்.

உதாரணத்திற்கு தன் பிள்ளைகள் மற்றும் பிறர் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தும் பொழுது சூரியநாடியில் வாழ்த்தினால் வாழ்த்து பலிக்கும்.

நாடி பயின்று விதிப்படி செயல்பட்டு வெற்றிகளை எளிதாக்குங்கள்.