நான் இந்து அல்ல - மதம் என்று குழுவானவர்கள் பயந்தவர்கள்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

நான் இந்து அல்ல - மதம் என்று குழுவானவர்கள் பயந்தவர்கள்

Post by ஆதித்தன் » Thu Nov 17, 2016 9:33 pm

சாதியும் மதமும் இல்லை என்பதை காகபுசுண்டர் தம்
பாடலில் எடுத்துக் கூறுகின்றார்.

“சாண் அப்பா சாதிகுலம் எங்கட்கில்லை
கருத்துடனே என்குலம் சுக்கிலந்தான் மைந்தா”
எவன் ஒருவன் உண்மையான உயிரினை அறிகிறானோ அவனுக்கு அச்சமும் இல்லை, பாதுகாக்க சுயநலக் குழுவும் தேவையில்லை.

மதம் என்றப் பெயரில் அறிய நல்லத் தத்துவங்கள் இருக்கலாம், ஆனால் அதனை உள்வாங்கி சுயமாகப் பேசத்தெரியாமல், தன்னை மதத்தோடு இணைத்துப் பேசுவது என்பது பேடித்தன்மை.

ஒவ்வொரு மதத்திலும் ஒர் சில நல்ல கருத்துக்கள் உள்ளன, பல கருத்துகள் இன்றைய காலத்திற்கு ஒவ்வாமல் நீக்க வேண்டியவையாகவும் உள்ளன. ஆகையால் காலத்திற்கு ஏற்ப தன்னை சரி செய்து கொள்பவனே உண்மையான வாசி அறிந்தவன்.

நான், என் தாய்மொழியினைக் கற்பித்த, அந்த மூதாதையர் வழி, வாசி வழி.

எனக்கு இந்து என்ற நடுவில் வந்த குழு அடைப்பு தேவையில்லை. உண்மையில்லா பிற குழு அடைப்பு பற்றிய பேச்சுமில்லை.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”