மனிதனின் தவறுகளுக்கு இறைவன் தானே காரணம்? மனிதனை ஏன் தண்டிக்க வேண்டும்?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

மனிதனின் தவறுகளுக்கு இறைவன் தானே காரணம்? மனிதனை ஏன் தண்டிக்க வேண்டும்?

Post by marmayogi » Thu Sep 15, 2016 5:18 pm

கேள்வி: “அவனன்றி ஓர் அணுவும் அசையாது, அனைத்து இயக்கங்களுக்கும் காரணம் இறைவன்” என்கிறோம். அவ்வாறெனில், மனிதனின் தவறுகளுக்கு இறைவன் தானே காரணம்? மனிதனை ஏன் தண்டிக்க வேண்டும்?

பதில்: மின் சக்தியால் இயங்கும் விசிறியோ, விளக்கோ பழுதடைந்து விட்டால் மின்சாரத்தைக் குறை கூற முடியாது. பழுதடைந்த பொருளைத்தான் சீர்செய்ய வேண்டும்.
அதேபோன்று, மனிதனானவன் இறையாற்றலால் இயங்கும் ஒரு கருவியே. இறைவனைக் கண்டுபிடித்து அவனையே தண்டிப்பது என்பது இயலாத காரியம்.

ஆனால், அந்த இறைவன் பரிணாமத்தில் எந்த உருவத்தில் வந்து செயல்களைச் செய்து, அதே பதிவுகளை அதன் கருமையத்துள்ளே பதிவாகப் பெற்றுத் திரும்ப அதே செயலைச் செய்கின்ற அளவுக்குக் கூர்தலறமாக (செயலுக்கு – விளைவு) வந்திருக்கின்றதோ, அந்த கருவியைத் தான் திருத்த வேண்டும் திருத்தம் செய்து சீரமைக்கும் பேரறிவின் செயலையே “தண்டனை” என்ற சொல் குறிக்கும்.

எந்த இடத்தில் இயற்கையினுடைய ஆற்றலுக்கு முரணாகச் செயல்கள் உண்டாயிற்றோ, எந்தச் செயலில் அல்லது இடத்திலிருந்து தனக்கும் பிறருக்கும் துன்பம் வருகின்றதோ, அங்கேயே அதை மாற்றி அமைப்பதற்கான திருத்தம் பெறுவதற்காக, சிந்தனைமிக்க அறிஞர்களால் வகுக்கப்பட்ட சீர்திருத்தமுறையைத் தான் “தண்டனை” என்ற பெயரால் திருந்த வேண்டிய மனிதனுக்குக் கொடுக்கிறார்கள்.

வாழ்க வளமுடன்!
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”