இறைவெளியின் இறுக்கத்தால் இப்பொழுதும் வேதான்கள் தோன்றி பரிணாமம் நடந்து கொண்டேயுள்ளதா?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

இறைவெளியின் இறுக்கத்தால் இப்பொழுதும் வேதான்கள் தோன்றி பரிணாமம் நடந்து கொண்டேயுள்ளதா?

Post by marmayogi » Thu Jul 14, 2016 12:45 pm

கேள்வி: இறைவெளியின் இறுக்கத்தால் இப்பொழுதும் வேதான்கள் தோன்றி பரிணாமம் நடந்து கொண்டேயுள்ளதா?

பதில்: அப்படித்தான் இருக்க முடியும். அழுத்தம் எனும் உந்து ஆற்றல் அதிகரித்துக் கொண்டேயிருக்கக் கூடிய (Ever increasing) தன்மையுடையது இறைவெளி. அதனால் இன்றும் என்றும் வேதான்கள் தோன்றி பரிணாமம் நடந்து கொண்டே தான் இருக்கும்.


கேள்வி: மகரிசி அவர்களே. இறைவெளியின் குறைவுபடா தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தத்தால் வேதான்களின் தோற்றம் அதிகரித்து அதனால் இந்தப் பிரபஞ்சத்தின் அளவு அதிகரிக்குமா? இறைவெளியின் அளவு குறையுமா?

பதில்: வேதான்கள் தோன்றிக்கொண்டேயிருப்பதால் பிரபஞ்சத்தின் அளவும் அதிகரிக்கும். அதே சமயம் வேதான்கள் மீண்டும் சுத்தவெளியாக மாறிக் கொண்டும் இருக்கும். ஆனால் இறைவெளி என்பது வற்றாயிருப்பாகும்.அது என்றும் குறைவுபடா தொன்றாகும். பிரபஞ்சத்தின் விரிவும், சுருக்கமும் இறைவெளியோடு ஒப்பு நோக்கக் கூடியதல்ல.

வாழ்க வளமுடன்!!

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”