சன்னியாசம் என்றால் என்ன?.

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

சன்னியாசம் என்றால் என்ன?.

Post by marmayogi » Sun Jul 10, 2016 8:50 am

சன்னியாசம் என்றால் என்ன?.

எதிர்மறை(Negative) கருத்தான தன்னையே மறுப்பது என்பது, முன்பு பல காரணங்களினால் சாத்தியமாக இருந்தது. சமுதாயத்தின் அமைப்பு ஒரு காரணம், உழவுத்தொழிலை மேற்கொண்டிருக்கும் சமுதாயத்தினால், சிலரை வேலை இல்லாமல் இருக்க அனுமதிக்க முடிந்தது. ஆனால், சமுதாயம், மென்மேலும் தொழில் மயமாகும்போது, கூட்டுக்குடும்பங்கள் இருக்கும் வாய்ப்பு குறைந்தே இருக்கும். தனித்துவம் அதிகரிக்க அதிகரிக்க, கூட்டு குடும்பத்திற்கான வாய்ப்பு குறைந்துவிடும். தளர்ந்த பொருளாதார அமைப்பினால், நிறைய கூட்டுக்குடும்பங்களை அனுமதிக்க இயலும். ஆனால் சீராக இருக்கும் பொருளாதார அமைப்பில், கூட்டுக்குடும்பங்களுக்கான வாய்ப்பு குறைந்துகொண்டே இருக்கும். சாதுக்களாகவும், சன்யாசிகளாகவும் இருப்பவர்கள், சுயநலத்திற்காக மற்றவர்களை பயன்படுத்துபவர்களாக தெரிந்தார்கள். என்னுடைய நோக்கில், எல்லோரும் அவரவர்களால் என்ன செய்யமுடியுமோ அதை செய்தாக வேண்டும்.

ஒருவர், அவர் இருக்கும் சமுதாயத்திற்கு, அவர் பங்கிற்கு ஏதாவது செய்தாக வேண்டும். ஒருவர் தன் சுயநலத்திற்கு மற்றவர்களை பயன்படுத்துபவர்களாக இருக்கக்கூடாது. யாரும் அவ்வாறு இருக்கக்கூடாது. அதுவும் ஒரு ஆன்மீகவாதி சுயநலத்திற்காக மற்றவர்களை பயன்படுத்துபவராக இருக்கக்கூடாது. ஒரு ஆன்மீகவாதியால் தன்நலத்திற்காக பிறரை உபயோகப்படுத்த முடியுமேயானால், மற்றவர்கள் அவ்வாறு இருக்கக்கூடாது என்று சொல்வதற்கேயில்லை.

என்னைப் பொறுத்த வரையில், ஒரு சன்யாசி, ஒருபோதும், சுயநலத்திற்காக மற்றவர்களை பயன்படுத்த மாட்டான். அவன் தன்னுடைய வாழ்விற்கு பணம் ஈட்டுவான். அவன் பயன்படுத்துபவனாக மட்டுமல்லாமல் (Consumer) தயாரிப்பவனாகவும்(Producer) இருப்பான். அதனால் தயாரிக்கும் கொள்கையும் ஆக்கப்பூர்வமானதே. பழைய கருத்தான தயாரிக்காத, சன்யாசிகள், எதிர்மறையான மனோபாவத்திற்கு தங்களை பக்குவப்படுத்தியிருந்தார்கள். ஆக்கப்பூர்வ மனோபாவத்திற்கு அதிக தாத்பரியம் இருக்கிறது. உதாரணத்திற்கு, பழைய சன்யாச கொள்கை, பலவற்றை மறுத்தது. அதுக் குடும்பத்தை மறுத்தது, அது உடலுறவை மறுத்தது, காதலை மறுத்தது, எவையெல்லாம் சமுதாயத்தின் சந்தோஷத்திற்கும், உங்களின் சந்தோஷத்திற்கும் உதவுகிறதோ, அவற்றையெல்லாம் மறுத்தது. அது மறுத்தது – நான் மறுக்கமாட்டேன்.

அதனால், நான் அதை அனுமதிக்கிறேன் என்று அர்த்தமில்லை. நான் மறுக்கமாட்டேன் என்று சொல்வதின் மூலம், ஒரு வினாடி வரும்போது, ஒருவன் இதையெல்லாம் முழுமையாக கடந்து செல்வான் என்பதையே உணர்த்துகிறேன் – உதாரணத்திற்கு, உடலுறவில். இது வேறு விஷயம், இது பலனாக வருமே தவிர அவசியமாக இருக்காது. இது சன்யாசத்திற்கு முன் தேவையில்லை, இது சன்யாசத்திற்குப் பின்னால் வரும்.

அப்படியே வரவில்லை என்றாலும், அதை ஒரு குற்ற உணர்வாக ஏற்படுத்தமாட்டேன். பழையக் கொள்கை மிக கொடூரமானது. அது மற்றவர்களுக்கு கொடுமை செய்வதில் பெருமகிழ்ச்சி அடைவதோடு அல்லாமல், தனக்குத்தானே நிறைவில்லாமல் துன்பப்படும் ஒன்றாகவும் இருக்கிறது. உடலுறவு மகிழ்ச்சியின் க்ஷணத்தோற்றத்தை கொடுப்பது போல் தோன்றுவதால், அது மறுக்கப்பட்டது.

நிறைய மதங்கள் சந்தோஷம் ஏற்படுத்தாத உடலுறவை அனுமதித்தது. நீங்கள் அதை இனப்பெருக்கத்திற்கு மட்டும் உபயோகப்படுத்தலாம், ஆனால் நீங்கள் அதன்மூலம் எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்கக்கூடாது, அப்போதுதான் அது பாவமில்லை, அதனால் உடலுறவுக் கொள்வதினால் பாவமில்லை, “ஆனால் நீங்கள் சந்தோஷமாக இருக்கக்கூடாது, சந்தோஷமாக இருப்பதுதான் பாவம்”. என்னைப் பொறுத்தவரை, மனிதனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் எதுவும் மறுக்கப்படவும் கூடாது, அது அடக்கி வைக்கப்படவும் கூடாது. உங்கள் உள்ளார்ந்த மகிழ்ச்சி முதலில் வரட்டும் – பின்பு பல வழிகளில் உங்கள் ஆக்க சக்திகளின் போக்கில் மாற்றம் ஏற்படுவதை நீங்கள் பார்ப்பீர்கள். பின்பு, அந்த மாற்றம் பெரியதாக இருக்கும்.

ஓஷோ-நான்ஒருவாசல்
thiruusha
Posts: 159
Joined: Sun Oct 05, 2014 9:26 pm
Cash on hand: Locked

Re: சன்னியாசம் என்றால் என்ன?.

Post by thiruusha » Sun Jul 10, 2016 7:17 pm

:non:
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: சன்னியாசம் என்றால் என்ன?.

Post by marmayogi » Tue Jul 12, 2016 9:14 am

சந்நியாசம் என்பது என்ன?!

ஒருமுறை மகானான சந்நியாசி ஒருவர் தோளில் சுமையுடன் நடந்து சென்றுக் கொண்டிருந்தார்!!

அப்போது ஒரு இளைஞர் கூட்டம் அவர் அருகில் சென்று அவரிடம் "சந்நியாசம் என்றால் என்ன?" என்று கேட்டது!!

உடனே சந்நியாசி தன் தோளில் வைத்திருந்த சுமையைக் கீழே வைத்துவிட்டு நடக்க ஆரம்பித்தார்!!

இளைஞர்கள் அவர் பின்னாலேயே சென்று, "இதன் பொருள் என்ன?" என்று கேட்டனர்.

சந்நியாசி, "காணவில்லையா? நான் சுமையைத் தரையில் இறக்கிவைத்தேன்.!!

முதலில் "நான், எனது" என்ற மனோபாவத்தைத் துறப்பதுதான் சந்நியாசம்" என்றார்!!
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”