பெண்ணின் பெருமை

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

பெண்ணின் பெருமை

Post by marmayogi » Sun Jun 26, 2016 10:41 am

பெண்களைப் பற்றி மகரிஷி எப்பொழுதும் மிக உயர்வாகவே பேசுவார்.

மன்றத்திலே ஒரு அன்பர் இது குறித்து ஒரு கேள்வி கேட்டார்: ஏன் ஸ்வாமிஜி பெண்களை தகுதிக்கு மீறி புகழ்கிறீர்கள் என்று.

எனக்கும் அந்த எண்ணம் உண்டு. ஏற்கனவே வீட்டில் தாண்டவம். மகரிஷியால் ருத்ர தாண்டவம்.

ஸ்வாமிஜி ஒரு விளக்கம் கொடுத்தார் பாருங்கள். என் எண்ணமே மாறிவிட்டது.

இந்த உலகத்திற்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்? ஒரு பெண் அல்லவா பத்து மாதம் சுமந்து காத்து உருவாக்கினாள். அப்போது அவள் உண்ட உணவையும் சுவாசித்த காற்றை அல்லவா நீங்கள் பங்கிட்டுக் கொண்டீர்கள். உங்களுக்கு தன் இரத்தத்தையஅல்லவா பாலாக மாற்றி முதல் உணவை அளித்தாள்.

அதற்கு மேலும் பல மாதங்கள் அந்தத் தாயின் பாலைத் தானே குடித்து வாழ்ந்தீர்கள்.

அந்தப் பெண்மை தானே உங்களுக்கு வாழ்க்கைத் துணையாக வந்து வாழ்நாள் முழுவதும் உங்கள் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு நீங்கள் வீடு பேறு அடையவும் உதவிகிறாள்.

இதில் ஏதாவது ஒன்றை உங்களால் மறுக்க முடியுமா?
இவ்வளவு பெருமை வாய்ந்த பெண்ணினத்தைப் போற்றுவதில், உங்களுக்கு கஞ்சத்தனமும் பொறுக்க முடியாமையும் ஏன் வர வேண்டும்?

தீர்க்கமான பதில்.எவரும் மறுக்க முடியாத விளக்கம்

;- வேதாத்திரி மகரிஷி
வெங்கட்
Cash on hand: Locked

Re: பெண்ணின் பெருமை

Post by வெங்கட் » Sun Jun 26, 2016 10:52 am

:clab: உண்மை.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”