மனிதனிடம் இருக்கும் மாபெரும் ஆற்றல் குண்டலினி மகாசக்தி

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
User avatar
vbalu
Posts: 11
Joined: Wed Dec 09, 2015 9:30 am
Cash on hand: Locked

Re: மனிதனிடம் இருக்கும் மாபெரும் ஆற்றல் குண்டலினி மகாசக்தி

Post by vbalu » Thu Jan 07, 2016 7:26 pm

tankes sir i hay no many sir 300 and 400 i have sarrry sir you contect important one this.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: மனிதனிடம் இருக்கும் மாபெரும் ஆற்றல் குண்டலினி மகாசக்தி

Post by marmayogi » Sun Sep 11, 2016 10:40 am

vbalu wrote:sir i am damage only kondaliyam sakthi 18yeares please hellp me sir, thankes.
சாந்தி யோகத்தால் பிரமை, பைத்தியம் போன்ற கொடிய வியாதிகள் வராமல் தடுக்க முடியுமா ?.

சாந்தியோகம்:

இந்த மையம் முதுகுத்தண்டின்
(spinal cord) அடிப்பகுதியாகும்.
ஆசனவாய்க்கு மேலே உள்ள பால்
உணர்வுச்சுரப்பியை (sexual gland)
இது குறிக்கும்..எனவே, மூலாதாரத்தில்
நின்று தவம் இயற்றும்போது,
அதாவது அந்த இடத்தில்
உடலின் உள்ளே(முன்புறமோ, பின்புறமோ)
நினைவை செலுத்தி தவம் இயற்றவேண்டும்.

இதற்கு சாந்தியோகம் என்று பெயர்.
முதுகுதண்டின் அடிப்பகுதியில்,
ஆசன வாய்க்கு ஓர் அங்குலம் உயரே
மனதை குவிக்க வேண்டும். அப்போது
சாந்தியோகம் எளிதில் பிடிபடும்.
இது மிகவும் முக்கியமானது.


வேக வாகனத்தை இயக்க கற்றுக்
கொடுக்கும்போது ஆக்ஸிலரேட்டரை
அழுத்தக் கற்றுத்தருபவர், கூடவே
பிரேக்கையும் காட்டிக்கொடுத்து,
அதன் மதிப்பையும் உபயோகத்தையும்
சொல்லித்தருவார். அதுபோல்,
உயிராற்றலை ஆக்கினைக்கும்,
அதற்கும் மேலேயும் தூக்கி,
நிறுத்திப்பழகுதல்தான் தன்னிலை
விளக்கத்தையும் ஆன்மீக உயர்வையும்
தரும், என்றாலும், தவக்கனல் பல
காரணங்களால் கட்டு மீறுகின்றபோதும்,
வேறு சில சூழ்நிலைகளிலும் உயிராற்றலை
அதனது பழைய இடத்திலேயே
நிறுத்தியாக வேண்டும். இதுவே சாந்தியோகம்.


இந்த சாந்தியோகம் என்னும்
மூலாதாரத் தவத்தை ஆரம்ப காலத்தினர்
அறிந்திருக்கவில்லை. அதனால்
முற்காலத்தில் தவமியற்றுதல்
என்பது உயிருக்கே ஆபத்தான
காரியமாக இருந்திருக்கிறது. பிரமை,
பைத்தியம் போன்ற கொடிய
வியாதிகளும் நேர்ந்திருக்கின்றது.

ஆனால் இப்போது அந்த பயம்
சற்றும் கிடையாது.யோக சாதனையின்
அதீதத்தின் (Exess) காரணமாகவோ,
உணவின் காரணமாகவோ, ஆராய்ச்சியின்
காரணமாகவோ அல்லது கோள்களின்
நிலை காரணமாகவோ, தவக் கனல்
மிகுந்தால் , அதை உடனடியாக
உணர்ந்து தணித்துக்கொள்ளவும்,
அந்த தவக்கனலின் அதீதத்தை(Exess)
உடல் நலனுக்கும், உள்ளத்தின் நலனுக்கும் பயனாக்கிக்கொள்ளவும் சாந்தியோகம் உதவுகிறது


“தவவேகம் உடல்பலத்தை மீறும்போது
தணித்திடவும் வழியுண்டாம், அதைக்காணாமல்,

சிவநிலையை அடைவதற்குத் தவமிருந்து,
சித்தியடை யாமுன்னம் கனல் மிகுந்து

சவநிலையை அடைந்தார் முன்னாளில் பல்லோர்
சற்றுமிப்போ தந்தபயம் இங்கே இல்லை;

நவயுகத்திற் கேற்றபடி, வாழ்க்கை ஊடே
“நான்” என்னும் நிலையறியும் மார்க்கம் ஈதாம்.”

மூலாதாரத்திலிருந்து உணர்வு
மெலெழுப்பப் பெற்ற உணர்வாளர்களுடைய
உயிராற்றலானது சில சூழ்நிலைகளுக்கு
உள்ளாகும்போது, சிதைவையும்,
இழப்பையும்(Damage) ஏற்கவேண்டிவரும்.
அவை; மாதவிலக்கில் இருக்கும்
பெண்கள், நாய்,
பன்றி,
பிணத்தின் அருகில் இருந்தால் ஜீவகாந்த ஆற்றல் விரயாமாகும்.

தவிர்க்க முடியாத காரணத்தால்
இந்தச்சூழ்நிலைகள் ஏதேனும்
ஒன்றில் இருந்தே ஆகவேண்டும்
என்றநிலை ஏற்பட்டால், அப்போது
உடனே சாந்தியோகத்தில் இறங்கிவிட
வேண்டும்., உணர்வை ஆக்கினையில்
வைக்காது மூலாதாரத்திற்கு
இறக்கிவிடவேண்டும். அப்போது
நாம் எந்த இழப்புக்கும் உள்ளாகமாட்டோம்.
மாதவிலக்கில் இருக்கும் பெண்டிர்
சமைத்த உணவை உண்ண வேண்டிய
தவிர்க்க முடியாத கட்டாயம் நேர்ந்தால்,
அப்போது கூட , இறங்குபடியில்
இருந்துகொண்டுதான் உண்ணவேண்டும்.
அப்போதுதான் உயிராற்றலின்
இழப்பிலிருந்து தப்பலாம்.

மேலே சென்றுவிட்ட நாம் கீழே
இறங்கிநின்று தவம் இயற்றுவதால்,
சாந்தியோகத்திற்கு இறங்குபடி தவம்
என்றும் ஒரு பெயர் உண்டு.தவக்கனலை
இறக்கிச் சாந்தி தருவதால்
சாந்தியோகம் என்று பெயர்.

நினைத்தவுடன் சட்டென்று
மூலாதாரத்திற்கு இறங்கிவிடும் திறன்
கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான்
இந்த குண்டலினி யோகப் பயிற்சியின்
ஆரம்ப காலத்தில் 4லிலிருந்து 7 நாட்கள்
சாந்தியோகத்திலேயே இருக்கவேண்டும்.

ஆரம்ப பயிற்சியாளர்கள், ஒவ்வொரு
வேளை சாப்பாட்டிற்கு பிறகும் மூன்று
நிமிடம் இறங்குபடி கவனிக்கவெண்டும்.
இதற்கும் உட்கார்ந்து தவம் செய்ய
வேண்டுமென்பதில்லை. சாப்பிட்டு
முடித்தபின் அடுத்த அடுத்த காரியங்களைப்
பார்த்துக்கொண்டே , நினைவை மட்டும்
மூலாதாரத்தில் வைத்திருக்கவேண்டும்.

ஆரம்ப பயிற்சியாளரும் சரி, முதிர்ந்த
பயிற்சியாளரும் சரி, ஆரத்தில் இரண்டுவேளை
(வெள்ளி காலை, மாலை) கட்டாயம்
சாந்தியோகம் மட்டுமே பயிலவேண்டும்.
அதேபோல மாதாந்திர உலக அமைதி
தற்சோதனை, மௌன நோன்பு அன்று
படுக்கப் போகும் முன் இயற்றப்படும்
கடைசிவேளைத்தவம் முழுக்க முழுக்க இறங்குபடித்தவமாகவே இயற்றவேண்டும்.

வாழ்த்தும் போது கூட இறங்குபடியில்
நின்றே கூறவேண்டும். பஞ்சபூத
தத்துவத்தில் மண் ஆகிய பிருதிவிக்கு
உரிய ஸ்தானம் மூலாதாரம். இங்கு
நின்று தவம் ஆற்றுவதால் பூகம்ப
ஆராய்ச்சி பற்றிய அறிவு விருத்தியாகும்.

ஒரு குண்டலினி யோகி தவமியற்றி
சேமித்து வைத்துள்ள தவச்சக்தியின்
மிகுதியானது சாந்தியோகத்தின் பயனாக
உடல் சக்தியாக மாறுகிறது. அது உடல்
நலனுக்கும் நோய் எதிர்ப்புக்கும் பயன்படும்
. உடல்வலி, ஜுரம், அஜீரணம் போன்ற
சாதாரண நோய்கள் சாந்தியோகத்தால்
நீங்கும். மலச்சிக்கல் விலகும். உடலில்
உயிரின் இயக்கம் சீராகும்.

ஒரு நுட்பத்தை கவனியுங்கள் :
முன்னர் மூலாதாரத்தில் குண்டலினி
சக்தி இருப்பதாக இருந்ததற்கும்.
இப்போது சாந்தியோகத்தில் நாம்
அதே சக்தியை மூலாதாரத்தில்
தேக்கி தவம் இயற்றுதலுக்கும்
நிறைய வித்தியாசம் இருக்கின்றன.
அவற்றை ஆராய்வோம்

முன்னர் மயக்க நிலை, இப்போது
விழிப்புநிலை, மூலாதாரத்தில்
நின்றாலும் சாந்தியோகத்தின்போது
மனம் விழிப்பில்தான் இருக்கின்றது.
எனவேதான் சக்தி குறைந்துவிடுவது
இல்லை.ஆகவே சாந்தியோகத்தின்போது
வாழ்த்துக்கூறுதலும் பொருத்தமானதுதான்.

முன்னர் மூலாதாரத்தில் உயிராற்றல்
இருந்தது தெரியாது. இப்போது சாந்தியோகத்தில்
அது இருப்பது தெரிகிறது.அதன் அழுத்தமும்,
அசைவும் மனதிற்கு புலப்படுகின்றன.
அவற்றை கவனித்தன் மனதிற்கு
ஓர்மைநிலைப் பயிற்சியாகவும் (concentration)
அமைகிறது.

சாந்தியோகத்தின் காரணமாக,
தேவைக்கேற்ப உடல் சக்தியை
மனோசக்தியாகவும், மனோசக்தியை
உடல்சக்தியாகவும் மாற்றி மாற்றி
பயன்படுத்தி துய்க்கிறோம். எனவே
இதன் மதிப்பையும், உயர்வையும்
போற்றி உரியவாறு இத்தவத்தை
பயின்றுவரவேண்டும்.

வாழ்க வளமுடன்

-வேதாத்திரி மகரிஷி
(மனவளக்கலை பாகம்-1 என்றநூலிலிருந்து)
Last edited by marmayogi on Mon Sep 12, 2016 11:42 am, edited 1 time in total.
Hariharadossk
Posts: 11
Joined: Fri Aug 12, 2016 6:18 am
Cash on hand: Locked

Re: மனிதனிடம் இருக்கும் மாபெரும் ஆற்றல் குண்டலினி மகாசக்தி

Post by Hariharadossk » Mon Sep 12, 2016 5:55 am

பாதி புரியுது மீதி புரியலை ஐயா
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: மனிதனிடம் இருக்கும் மாபெரும் ஆற்றல் குண்டலினி மகாசக்தி

Post by marmayogi » Mon Sep 12, 2016 11:21 am

Hariharadossk wrote:பாதி புரியுது மீதி புரியலை ஐயா

எது புரியவில்லை என்று சுட்டிகாட்டினால் புரியவைப்பேன்
Hariharadossk
Posts: 11
Joined: Fri Aug 12, 2016 6:18 am
Cash on hand: Locked

Re: மனிதனிடம் இருக்கும் மாபெரும் ஆற்றல் குண்டலினி மகாசக்தி

Post by Hariharadossk » Tue Sep 13, 2016 6:29 am

தியானம் , அடிப்படை தாங்கள் கற்று தருவீர்களா :alu: :alu:
Hariharadossk
Posts: 11
Joined: Fri Aug 12, 2016 6:18 am
Cash on hand: Locked

Re: மனிதனிடம் இருக்கும் மாபெரும் ஆற்றல் குண்டலினி மகாசக்தி

Post by Hariharadossk » Tue Sep 13, 2016 6:47 am

மனிதபிறப்பின் நோக்கம் என்ன
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: மனிதனிடம் இருக்கும் மாபெரும் ஆற்றல் குண்டலினி மகாசக்தி

Post by marmayogi » Tue Sep 13, 2016 9:53 am

Hariharadossk wrote:தியானம் , அடிப்படை தாங்கள் கற்று தருவீர்களா :alu: :alu:
இல்லை
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: மனிதனிடம் இருக்கும் மாபெரும் ஆற்றல் குண்டலினி மகாசக்தி

Post by marmayogi » Tue Sep 13, 2016 10:03 am

Hariharadossk wrote:மனிதபிறப்பின் நோக்கம் என்ன
மனித வாழ்வின் நோக்கம் இறைநிலையை உணர்தல். நானே இறைநிலையாக இருக்கிறேன் என்பதை உணர்ந்து முழுமைப்பேரு அடைதலாகும்.


ஆறாவது அறிவில் உயர்ந்து இயற்கை இன்பங்களைத் துய்த்து நிறைவும் அமைதியும் பெருவதாகும். அறிவின் முழுமையை நோக்கிய பயணமே மனித வாழ்வாகும். இயற்கைக்கு நாம் தோன்றி , வந்து இயங்கிக் கொண்டிருக்கிறோம். இயற்கையின் மூலத்தை உணர்ந்து , இயற்கை நியதியை உணர்ந்து , இயற்கைக்கு இணக்கமாக வாழ்ந்து தன் ஆறாவது அறிவைக் கொண்டு மூல நிலையான இறைநிலையோடு அறிவு இணைந்து விடுவதே வாழ்வாங்கு வாழ்தலாகும்
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”