வெஜிடபிள் இடியாப்பம்

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

வெஜிடபிள் இடியாப்பம்

Post by cm nair » Mon Nov 04, 2013 10:17 am

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி– அரை கிலோ
பொடியாக துருவிய கேரட்– அரை கப்
பொடியாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன்– ஒரு கப்
கோஸ் துருவியது– அரை கப்
நறுக்கிய கொத்தமல்லி– சிறிதளவு
தேங்காய்ப்பால்– 100 மில்லி
உப்பு– தேவையான அளவு

செய்முறை

அரிசியை நன்கு ஊற வைத்து, கெட்டியாக அரைத்து, உப்பு சேர்த்துக் கிளறவும். மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, கொதிக்கும் நீரில் போட்டு, உருண்டைகள் வெந்து மேலே மிதந்துவரும் சமயத்தில் எடுத்து சேவை அச்சில் போட்டுப் பிழியவும். நன்றாக சுத்தம் செய்து துருவிய மற்றும் நறுக்கிய காய்கள், நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை அப்படியே சேவையின் மேல் தூவி சாப்பிடலாம் தேங்காய்ப்பால் மேலே ஊற்றி சாப்பிட்டால் சூப்பர் டேஸ்ட்டில் இருக்கும்.

குறிப்பு :
பச்சை காய்களும் வெந்த இடியாப்பமும் தனி ருசிதான். பச்சையாக சாப்பிடக்கூடிய வயிறு வகைகள், இனிப்பு சோளம் சேர்த்தும் கலந்து கொடுக்கலாம். வேக வைத்த காய்களும் சேர்த்து சாப்பிடலாம்.
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”