Page 1 of 1

காஜு கத்லி

Posted: Thu Oct 31, 2013 9:56 am
by cm nair
தேவையானவை: முந்திரி பருப்பு, சர்க்கரை - தலா 100 கிராம், பால் (அழுக்கை நீக்க), நெய் (தட்டில் தடவ) - சிறிதளவு.

செய்முறை: முந்திரி பருப்பைப் பொடி செய்யவும். ஒரு பங்கு சர்க்கரைக்கு அரை பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். தண்ணீரையும் சர்க்கரையையும் சேர்த்துக் கொதிக்கவிடவும். பாகில் சிறிதளவு பால்விட்டு, அழுக்கை வடிகட்டிக் கொள்ளவும். பாகு கம்பிப்பதம் வந்தவுடன் பொடித்த முந்திரி பருப்பை போட்டுக் கிளறவும். கொப்புளித்து (பப்பிள்ஸ்) வரும் வேளையில் உடனடியாக நெய் தடவிய தட்டில் கொட்டவும். சமமாகப் பரத்தி, மேலே ஜரிகைப் பேப்பரை பரத்தி, நன்றாக ஆறியவுடன், 'கட்’ செய்து பரிமாறவும் (ஜரிகை பேப்பர் கட்டாயமில்லை... விருப்பப்பட்டால் பயன்படுத்தலாம்).