ஹய்த்ராபாத் வெஜிடபிள் பிரியாணி

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

ஹய்த்ராபாத் வெஜிடபிள் பிரியாணி

Post by cm nair » Sun Oct 27, 2013 1:43 pm

தேவையான பொருட்கள்:
***************************

நருக்கிய காய்கறிகள் - ஒன்றரை கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
புதினா,கொத்தமல்லி - ஒரு கப்
பச்சை மிளகாய் - எட்டு
பட்டை - இரண்டு
கிராம்பு - நான்கு
பிரியாணி இலை - இரண்டு
மிளகாய் தூள் - மூன்று டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
தயிர் - ஒரு கப்
அரிசி - ஒன்றரை கப்

செய்முறை:
**************

# முதலில் அரிசியை அறை மணி நேரம் ஊற வைக்கவும்.

# வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும்.

# புதினா,கொத்தமல்லி இலைகளை பொடியாக அறிந்து கொள்ளவும்.

# ஊறவைத்த அரிசியில் ஒரு பட்டை,இரண்டு கிராம்பு ஒரு பிரியாணி இலை
சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.

# ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீதம் உள்ள பட்டை,கிராம்பு,
பிரியாணி இலை சேர்த்து பொரிக்க விடவும்.

# வெங்காயம் சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.

# இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

# கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து வதக்கி மிளகாயை சேர்க்கவும்.

# பின்பு மிளகாய் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

# தக்காளி மற்றும் காய்கறிகளை சேர்த்து எடுத்து வைத்துள்ள தயிரில்
பாதியை சேர்த்து உப்பு மற்றும் சிறிது நீர் விட்டு அடுப்பு தணலை சிம்மில்
வைக்கவும்.

# காய்கறிகள் நன்றாக வெந்து சிறிது கிரேவியுடன் இருக்கும்
பொழுதே அடுப்பில் இருந்து எடுத்து விடவும்.

# பின்பு பிரியாணி கொள்ளும் அளவு ஒரு பாத்திரம் எடுத்து அதில் முதலில்
வெந்த சாதம் ஒரு லேயர் அதன் மேல் செய்து வைத்துள்ள கிரேவி ஒரு
லேயர் அதன் மேல் சிறிது தயிர் என்கிறவாறு எடுத்து வைக்கவும்.

# ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.

# நன்கு சூடானதும் சாதம் வைத்துள்ள பத்திரத்தை எடுத்து தோசை
கல்லின்மேல் வைத்து ஒரு மூடி போட்டு மூடிவிடவும்.

#அடுப்பு தணலை சிம்மில் வைக்கவும்.

# ஒரு ஐந்து நிமிடத்தில் எடுத்து விடவும்.

#ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்த்ததும்முந்திரி தாளித்துபிரியாணியில் கொட்டவும்.

# சுவையான ஹய்த்ராபாத் வெஜிடபிள் பிரியாணி தயார்.
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”