Page 1 of 1

நீரிழிவு நோயாளிகளுக்கான... பட்டாணி பன்னீர் கிரேவி

Posted: Thu Oct 24, 2013 11:35 am
by cm nair
17-peaspaneerrecipe.jpg
தேவையான பொருட்கள்: பச்சை பட்டாணி - 1 கப் பன்னீர் - 100 கிராம் (நறுக்கியது) வெங்காயம் - 2 (நறுக்கியது) பூண்டு - 6 பற்கள் (பொடியாக நறுக்கியது) இஞ்சி - 2 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது) மல்லி தூள் - 2 டீஸ்பூன் கிராம்பு - 2 சீரகம் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 2 டீஸ்பூன் தக்காளி - 4 (நறுக்கியது) கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய பன்னீரை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதே வாணலியில் கிராம்பு, சீரகம் சேர்த்து தாளித்து, இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்பு தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும். அடுத்து மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 3 நிமிடம் கிளறி விட வேண்டும். கலவையானது நன்கு வதங்கியதும், அதில் பச்சை பட்டாணியை சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்கு 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பட்டாணியானது நன்கு வெந்ததும், அதில் பன்னீரை சேர்த்து கிளறி, 2 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விட்டு இறக்கி, நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்தால், சுவையான பட்டாணி பன்னீர் கிரேவி ரெடி!!! இதனை சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.