ஆப்பம்

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
mubee
Posts: 531
Joined: Tue Jul 09, 2013 6:04 pm
Cash on hand: Locked

ஆப்பம்

Post by mubee » Tue Oct 22, 2013 9:18 pm

தேவையானவை:

பச்சை அரிசி - ஒன்றரைக் கப்
புழுங்கலரிசி - ஒன்றரைக் கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
ஆப்ப சோடா - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1/4 கப்

செய்முறை:

1.முதலில் அரிசி, பருப்பு, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக 8 மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும்.அத்துடன் உப்பு போட்டுக் க்ரைத்து, இரவு முழுவதும் நேரம் புளிக்க விடவும்.
2.மறுநாள், மாவில் ஆப்ப சோடா, 1/4 கப் தேங்காய்ப்பால் தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
3.கடைசியாக ஆப்பசட்டியை சூடாக்கவும் சிறிது எண்ணையைத் தொட்டு ஆப்பச்சட்டியை துடைத்து விடவும்.
4.பின்னர் ஒரு பெரிய கரண்டி மாவை அடுத்து சட்டியின் நடுவே ஊற்றி, சட்டியை இரு கைகளாலும் தூக்கி ஒரு சுற்று சுற்றி, அடுப்பில் வைத்து மூடி விடவும். பிறகு ஆப்பம் வெந்து விடும்.
5.மூடியைத் திறந்து பார்த்த பிறகு ஒரு பக்கம் வெந்தால் போதும். திருப்பிப் போட தேவையில்லை.
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”