வறுவல்கள்

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

வறுவல்கள்

Post by cm nair » Tue Oct 22, 2013 9:23 am

காராகருணை வறுவல்
தேவையான பொருள்கள்:

காராகருணை = அரை கிலோ
மிளகாய் வற்றல் = 6
வெங்காயம் = 2
பூண்டு = 10 பல்
தேங்காய் = கால் மூடி
சோம்பு = 1 ஸ்பூன்
எலுமிச்சைச்சாறு = அரை ஸ்பூன்
எண்ணெய் = அரை கரண்டி
உப்பு = தேவையான அளவு

செய்முறை:

காராகருணையை தோல் சீவி விட்டு பின் மெல்லிய ஓரங்குல வில்லைகளாக நறுக்கவும். இதை கழுநீரில் கழுவிப் பிழிந்து எலுமிச்சைச்சாறு கலந்து வைக்கவும். வெங்காயம் நறுக்கவும். பூண்டு உரித்துக் கொள்ளவும். தேங்காய் துருவிக் கொள்ளவும்.
தேங்காய், சோம்பு, மிளகாய் வற்றல் அரைத்துக் கொண்டு வெங்காயம், பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு நன்கு மசிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இவை எல்லாவற்றையும் வாணலியில் ஒன்றாகக் கலந்து எண்ணெய், உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊற விட்டு கறிவேப்பிலை சேர்த்து வேக விடவும்.
முதலில் 5 நிமிடம் தீயை கூட்டி வைத்து அடுத்த 5 நிமிடம் தீயை குறைத்து வைத்துக் கிளறி விடவும். இதை அடிக்கடி கிளற வேண்டும். இல்லாவிட்டால் அடி பிடித்து விடும். நன்றாக கிழங்கு வெந்து சுருண்டு எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி வைக்கவும்.

சுவையான காராகருணை வறுவல் தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றோடு பரிமாறலாம்.

மருத்துவ குணங்கள்:

காராகருணை கிழங்கு ஒரு குறைந்த கொழுப்பு உணவு. நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே அது கொழுப்பின் அளவை குறைக்கிறது. உடல் எடை, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவற்றை குறைக்கும்.


உருளைகிழங்கு காலிப்பிளவர் வறுவல்
தேவையானவை:

உருளைக்கிழங்கு- 4
காலிப்ளவர்- 1
வெங்காயம்- 2
மிளகாய் தூள்- 2டீஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்
சீரகம்- 1 டீஸ்பூன்
இஞ்சி நசுக்கியது – 1 டீஸ்பூன்
பூண்டு நசுக்கியது – 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் -2
கறிவேப்பிலை – 2கொத்து
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் -ஒரு குழிக்கரண்டி

செய்முறை:

உருளைக்கிழங்கை சிறிய துண்டுகள் செய்து அரை வேக்காடாக வேகவைக்கவும்.
காலிப்ளவரை சிறிய பூக்களாக நறுக்கி வைக்கவும்.
வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெயை காய வைத்து சீரகத்தைப் போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலையை போடவும்.
பின்பு வெங்காயத்தைப் போட்டு சிவக்க வதக்கவும்.
பிறகு இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும்.
பின்பு அதில் உருளைகிழங்கு காலிப்பிளவர் பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை போட்டு நன்கு கிளறி சிறிது நீரை தெளித்து மூடி போட்டு வேகவிடவும்.
காய்கள் நன்கு வெந்தவுடன் கிளறி விட்டு இறக்கவும்.


சேப்பங்கிழங்கு வறுவல்
தேவையானப்பொருட்கள்:

சேப்பங்கிழங்கு – அரைகிலோ
மிளகாய் தூள் -இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் -அரைத் தேக்கரண்டி
பெருங்காயம் -ஒரு சிட்டிகை
கடுகு -ஒரு தேக்கரண்டி
சீரகம் -அரைத் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு -ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை –சிறிது
எண்ணெய் -தேவைகேற்ப
உப்பு -தேவைகேற்ப

செய்முறை:

சேப்பங்கிழங்கை குழைய விடாமல் வேகவைத்து தோலை உரித்து நீள வாக்கில் அல்லது வட்டமாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெயைக் காய வைத்து கடுகு சீரகம் கறிவேப்பிலை உளுந்தைப் போட்டு வறுத்து சேப்பங்கிழங்கு துண்டுகளைப் போடவும்.
அதைத் தொடர்ந்து அதில் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் பெருங்காயம் மற்றும் உப்பைப் போட்டு கிளறி சுருள வறுக்கவும்.
சுவையான பொறு பொறுப்பான சேப்பங்கிழங்கு வறுவல்சேப்பங்கிழங்கு வறுவல் தயார்.
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”