டேஸ்ட்டியான சூப் செய்வது எப்படி?

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

டேஸ்ட்டியான சூப் செய்வது எப்படி?

Post by cm nair » Fri Oct 18, 2013 10:47 am

வீட்டு சூப்பில் கடைகளில் இருப்பது போன்ற டேஸ்ட் கிடைப்பதில்லை. திக்கான, டேஸ்ட்டியான சூப் செய்வது எப்படி?

சூப் செய்வதற்கு முன்னால் மூன்றரை ஸ்பூன் வெண்ணெயை உருக்கி, அதில் 1 டீஸ்பூன் மைதாவை சேர்த்து கலக்கிக்கொண்டே இருந்தால் க்ரீம் போல வரும். இந்தக் கலவையில் செய்ய விரும்பும் சூப் வகையைச் செய்தால் திக்கான சூப் கிடைக்கும். ஃபிரெஷ் க்ரீம் சேர்த்துக் கொள்வதும் நல்லது.

சிறிய பிரெட் துண்டுகளை நெய்யில் வறுத்து சூப்பில் கலந்தால் ஹோட்டல்களில் இருக்கும் சுவை கிடைக்கும். சூப் செய்வதற்கு இன்னொரு முறையும் இருக்கிறது. பழுத்த தக்காளி ஒன்றை எடுத்து அதன் தோல், நடுப் பகுதியை நீக்கவும். அத்துடன் வெள்ளைப்பூசணி நான்கு துண்டுகள், காலிஃபிளவர் சிறிது, ஒரு பல் பூண்டு, 1 வெங்காயம் (நறுக்கியது) எல்லாவற்றையும் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.

இந்தக் கலவை ஆறியதும் மிக்ஸியில் அரைத்து, வடிகட்டிக் கொள்ளவும். இத்துடன் தேவையான அளவு உப்புச் சேர்த்து சூடு செய்து சாப்பிட்டால் வித்தியாசமான ருசி. தேவைப்பட்டால் ஃபிரெஷ் க்ரீம் சேர்த்துக் கொள்ளலாம். எளிதாகச் செய்யக்கூடிய ஹெல்த்தியான சூப் இது!
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”